விவசாயிகளின் 'சக்கா ஜாம்' என்றால் என்ன? முடிவுக்கு வந்தது 3 மணி நேர போராட்டம்

'சக்கா ஜாம்

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, கோப்புப்படம்

டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (பிப்ரவரி 6, சனிக்கிழமை) நடைபெற்ற மூன்று மணி 'சக்கா ஜாம்' போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதன்போது வட இந்தியா மாநிலங்களில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் விவசாயிகளால் மறிக்கப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்டவற்றில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று உள்ளூர் ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.

'சக்கா ஜாம் போராட்டத்தை முன்னிட்டு தலைநகரில் 50,000 பாதுகாப்புப்படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 12 மெட்ரொ ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

'சக்கா ஜாம்' என்றால் என்ன?

'சக்கா ஜாம்' என்றால் 'சாலை மறியல்' என்று பொருள். இன்று (பிப்ரவரி 06-ம் தேதி, சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, இந்தியா முழுக்க இருக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறிக்க, பாரதிய கிசான் யூனியன் என்கிற அமைப்பு 'சக்கா ஜாம்' என்கிற பெயரில் சாலை மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன பாரதிய கிசான் யூனியன்.

வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு விவசாய அமைப்புகள், இன்று (பிப்ரவரி 06-ம் தேதி) முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருப்பதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

'சக்கா ஜாம்' என்றால் என்ன? இந்த போராட்டம் எங்கு, எப்போது நடைபெறும்?

விவசாயிகளின் இந்த 'சக்கா ஜாம்' அமைதியான முறையில் நடக்கும் எனவும், டெல்லியில் இந்த போராட்டம் நடைபெறாது எனவும் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று (பிப்ரவரி 05-ம் தேதி) கூறினார்.

தங்களோடு இணைய முடியாத விவசாயிகள், அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே சக்கா ஜாம் நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"சாலை மறியலில் சிக்கிக் கொள்பவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படும். அவர்களுக்கு விவசாயிகளின் தரப்பிலிருந்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கப்படும்" எனவும் குறிப்பிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த சாலை மறியலுக்கு, தன் முழு ஆதரவையும் வழங்கி இருக்கிறது. "காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் விவசாயிகளோடு விவசாயிகளாக தோல் கொடுத்து நிற்க வேண்டும்" என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடைய பாரதிய கிசான் சங்கம், கடந்த வியாழக்கிழமையே, 'சக்கா ஜாம்'-ஐ ஆதரிக்கமாட்டோம் எனக் கூறியிருந்தது.

'சக்கா ஜாம்

பட மூலாதாரம், SAT SINGH / BBC

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில், டெல்லி காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் என மொத்தம் சுமாராக 50,000 பேர் பாதுகாப்பு கருதி களமிறக்கப்பட்டு உள்ளனர். மேலும், டெல்லியிலுள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் நுழைய அனுமதி மறுக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்டி ஹவுஸ், ஐடிஓ, டெல்லி கேட் போன்ற டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் சக்கா ஜாமை முன்னிட்டு மூடப்பட்டிருக்கின்றன.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெல்லியின் பல பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

டெல்லியின் பல முக்கிய பகுதிகளில் விவசாயிகளின் சாலை மறியல் அழைப்பை முன்னிட்டு அடுக்கடுக்காக தடுப்பரண்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: