விவசாயிகள் போராட்டம்: 20 விவசாயிகளுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் - அண்மைய தகவல்கள்

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு

ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேலும் லால் குயில்லா மற்றும் ஜம்மா மசூதி போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் செங்கோட்டை ஜனவரி 27 முதல் 31 வரை மூடப்படும் என இந்திய தொல்பொருள் ஆய்வு தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இருப்பினும் செங்கோட்டை ஏன் மூடப்பட்டது என்பதற்கான காரணம் வழங்கப்படவில்லை.

இதற்கு முன்னர் பறவை காய்ச்சல் காரணமாக செங்கோட்டை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதியன்று, முடிவு எடுக்கப்பட்ட பாதையில் டிராக்டர் பேரணி செல்லவில்லை என யோகேந்திர யாதவ் உட்பட 20 விவசாயிகளுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இதுகுறித்து மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் கோரியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

யுனைடெட் கிசான் மோர்சா என்ற விவசாயிகள் அமைப்பு, இந்திய குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறைக்கு அரசாங்கமே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனவரி 27ஆம் தேதியன்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "இந்த போராட்டம் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் சதி திட்டம் தற்போது வெளியில் வந்துள்ளது. சில தனிநபர்கள் மற்றும் அமைப்பின் உதவியை பெற்று இந்த போராட்டத்தை அரசாங்கம் வன்முறையாக்கியுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அமைப்பு செங்கோட்டையிலும், டெல்லியின் பிற பகுதிகளிலும் நடந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மத்திய அமைச்சர்

விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறது. சில விவசாய தலைவர்கள் குடியரசு 26ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று தெரிவித்த பிறகு, பஞ்சாப் அரசு தங்களது மாநிலத்தை விட்டு வெளியேறும் டிராக்டர்களை கண்காணித்திருக்க வேண்டும் மேலும் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பு காரணங்களுக்கு முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்க வேண்டும்,"

"ராகுல் காந்தி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவை மட்டும் அளிக்கவில்லை. அதை தூண்டிவிடுகிறார். சிஏஏவின் போதும் காங்கிரஸ் இதேயேதான் செய்தது. காங்கிரஸ், பேரணிகளை நடத்தி மக்களை வீதிக்கு வந்து போராட தூண்டிவிடும். தேர்தல்களில் தோல்வி பெற்றுவருவதால் மேற்கு வங்கத்தில் புதிய நட்பை காங்கிரஸ் தேடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதையேதான் செய்கிறது. நாட்டில் பதற்றநிலையை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர்,"

"டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் மூவரணக் கொடி அவமதிக்கப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது."என அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு

காசீப்பூர்

இந்நிலையில் டெல்லி உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியான காசிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் முகாம்களில் நேற்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிபிசி ஹிந்தி சேவைக்காக செய்தி சேகரித்த சமீராத்மஜ் மிஷ்ரா, நேற்று இரவு முழுக்க அங்கு விவசாயிகளின் முகாம்களில் மின்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று இரவிலிருந்து போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும், அந்த பகுதி இருள் சூழ்ந்து இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

இது விவசாயிகளை இங்கிருந்து அகற்றும் முயற்சியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கும் விவசாய தலைவர் ராகேஷ் டிகாய்ட், மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டது என தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பக்பட் மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் முகாம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை அணையத்தின் கோரிக்கையின் பெயரில் இந்த முகாம் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு சங்கங்கள் வெளிநடப்பு

ஜனவரி 26ஆம் தேதியன்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக 37 விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தீப் சித்து என்ற நடிகர் ஈடுபட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த போராட்டத்திலிருந்து இரு விவசாய சங்கங்கள் வெளியேறியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: