சீன எல்லையில் ராணுவ பலத்தை குறைக்கிறதா இந்தியா? ராஜ்நாத் சிங் பேட்டி

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜ்நாத் சிங்

இந்திய - சீன எல்லையில் தனது அடிப்படைக் கட்டுமான வசதிகளை சீனா மேம்படுத்துகிறது. இந்தியாவும் எல்லையில் உள்ள மக்களுக்காகவும், அங்குள்ள படையினருக்காகவும் அடிக்கட்டுமான வசதிகளை மேம்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்தியா எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்காக இந்த வசதிகளை மேம்படுத்தவில்லை. தனது மக்களுக்காக அது மேம்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ராஜ்நாத் சிங் இது பற்றிக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "கிழக்கு லடாக்கின் நடைமுறை எல்லைக் கோட்டில் நிலவும் முட்டுக்கட்டையை தீர்ப்பதற்கு நடந்த ராஜீய, ராணுவ மட்டங்களிலான பேச்சுவார்த்தையில் உருப்படியான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஏற்கெனவே உள்ள நிலை அப்படியே தொடர்கிறது," என்றும் தெரிவித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் இணைய வழியில் நடந்த 'இந்திய சீன எல்லைப் பிரச்னைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை பொறியமைப்பு' கூட்டத்தின் முடிவுகளைப் பற்றியே ராஜ்நாத் சிங் இப்படித் தெரிவித்துள்ளார். ராணுவ மட்டத்திலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஏற்கெனவே உள்ள நிலைமையே தொடரும்போது எப்படி எல்லையில் ராணுவத்தை குறைக்க முடியும்? என்றும் அவர் கேட்டார். "எல்லையில் நமது ராணுவத்தின் அளவும் குறையாது. அவர்களும் (சீனா) ராணுவத்தைக் குறைக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏற்கெனவே உள்ள நிலையே தொடர்வதை முன்னேற்றமாக கருத முடியாது; பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்படும் என்பதே நமது நம்பிக்கை என்று அவர் கூறினார்.

எந்தப் பிரச்னைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தகவல்கள் பறிமாறப்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

"டிசம்பர் 18ம் தேதி நடந்த கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை பொறியமைப்பு கூட்டத்துக்குப் பின் ராஜீய மற்றும் ராணுவ மட்டத்தில் நெருக்கமான கலந்தாலோசனை செய்வது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

மூத்த கட்டளை அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த (9வது சுற்று) சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என்று கூறிய ராஜ்நாத் சிங், அதன் மூலமாகவே தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள், நடைமுறைகளுக்கு ஏற்ப நடைமுறை எல்லைக் கோட்டுக்கு அருகில் இருந்து விரைவான, முழுமையான படைவிலக்கம் செய்வதை இருதரப்பும் திட்டமிடமுடியும் என்றும் அமைதியும், சமாதானமும் முழுமையாக எட்டப்பட முடியும் என்றும் கூறினார்" என்கிறது ஏ.என்.ஐ. செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :