கொரோனா தடுப்பூசி: மோதியின் இந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா

நரேந்திர மோதி

பட மூலாதாரம், NARENDRA MODI

கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் கிடைக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆன காணொளி கூட்டத்தில் நிறைவுறையாற்றிய பிரதமர் மோதி இந்தி மொழியில் பேசினார்.

அப்போது அவர், 3 இந்தியாவிலேயே தயாரிக்ப்படும் தடுப்பூசி மருந்துகள் உட்பட 8 வலிமையான தடுப்பூசி திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் அவை வெளிவரவுள்ளன. இந்தியா தயாரிக்கும் பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளத்தக்க தடுப்பூசி மருந்துகளை உலகமே கவனித்து வருகிறது என்று பேசினார். சுமார் 12 நிமிடங்களுக்கு பிரதமரின் உரை அமைந்திருந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருச்சியில் உள்ள தனது வீட்டில் லேப்டாப் மூலம் தயாராக இருந்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் பேசிய பிறகு பிரதமர் நரேந்திர மோதி இந்தி மொழியில் பேசத் தொடங்கினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அப்போது இடைமறித்த திருச்சி சிவா, "அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்தி மொழி தெரியாதவர்களும் உள்ளனர். அதனால் ஆங்கிலத்தில் பேசுங்கள். இல்லையென்றால் உரையின் சாராம்சத்தை ஆங்கிலத்திலாவது வழங்குங்கள்" என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இதனால் சில நொடிகள் மெளனமாக இருந்த பிரதமர் மோதி, பிறகு தனது பேச்சை இந்தியிலேயே தொடர்ந்து நிறைவு செய்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை, அகில இந்திய அளவிலான கூட்டங்களில் இந்தி மொழியில் தலைவர்களோ, உயரதிகாரிகளோ உரை நிகழ்த்துவதற்கு தொடர்ந்து திமுக, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர்கள் அனுப்பும் கடிதம் இந்தி மொழியில் இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி தனது எதிர்ப்பை பதிவுசெய்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் ட்விட்டர் மற்றும் விடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், இந்திதான் பல நூற்றாண்டுகளாக இந்த தேசத்தை இணைத்து வருகிறது. உள்ளூர் மொழிகளுடன் இந்தியையும் வளர்க்க வேண்டும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார்.

அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, இந்தி மொழி இந்தியாவை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

மேலும், "வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும்!" என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோதி இந்தியில் பேசியதற்கு திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்திருப்பது மீண்டும் இந்தி திணிப்பு செய்வதாக திமுக முன்னெடுத்து வரும் முழக்கத்துக்கு உயிர் கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

அரசியல் தளங்களுக்கு வெளியே, ஆயுஷ் காணொளி கூட்டமொன்றில் இந்தி மொழியில் அத்துறை செயலாளர் பேசிய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது அவர்களை அந்த துறைச்செயலாளர் அறையை விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அந்த விவகாரத்திலும் திமுக தனது எதிர்ப்பை தெரிவித்தது.

இதேபோல, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழியிடம் பணியில் இருந்த பெண் காவலர் இந்தியில் பேசியதால் அவரிடம் ஆங்கிலத்தில் பேச முடியுமா என கேட்டதற்கு இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் இந்தியனா என அவர் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

அந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த கனிமொழி, "இந்தியனாக இருக்க இந்திய தெரிந்திருக்க வேண்டும் என அளவுகோல் எப்போதில் இருந்து அமலில் இருக்கிறது" என்று கேட்டு தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார். பிறகு மத்திய தொழிலக பாதுகாப்பு படை உயரதிகாரிகள் அந்த பெண் காவலரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இவற்றின் தொடர்ச்சியாக இன்றைய திருச்சி சிவாவின் செயலும் இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: