நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?

நிலக்கரி

பட மூலாதாரம், JONAS GRATZER

    • எழுதியவர், பிரியங்கா தூபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சுரங்கம் என்பது ஒரு முக்கியமான துறையாகும், இதில் விவசாயம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் தொழில் போன்ற பல துறைகளில் 'தற்சார்பு பிரசாரத்தின்' கீழ் பெரிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பாலிவுட்டை சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், சுரங்க அமைச்சகம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 அல்லது எம்எம்டிஆர் சட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஒன்பது முக்கிய மாற்றங்களை முன்மொழிந்தது என்ற செய்தியை நீங்கள் தவறவிட்டிருக்கலாம்.

இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், சுரங்கத்துறையில் ஏராளமான வேலைகள் உருவாக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தின் வேகத்தை அதிகரிக்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

நிலக்கரி

பட மூலாதாரம், NURPHOTO

ஆனால் விஷயம் அறிந்தவர்கள் வேலை வாய்ப்பு குறித்த இந்த அரசாங்க உரிமைகோரல்களுடன், சுற்றுச்சூழல், கனிம வளர்ச்சி மிகுந்த மாநிலங்களின் காடுகள் மற்றும் அங்குள்ள மக்களின் பொது வாழ்க்கை ஆகியவற்றில் இந்த தனியார்மயமாக்கலின் விளைவுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்வதும் முக்கியம், ஏனெனில் இந்த மாற்றங்கள் சுரங்கத்தில் நேரடியாக ஈடுபடும் நாட்டின் பெரும் மக்கள் தொகையை பாதிக்கும்.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படும். இந்த மாற்றங்களினால் இந்த மாநிலங்களில் உள்ள குவாரிகள் மற்றும் பழங்குடி சமூகங்கள், காடுகள், ஆறுகள் மற்றும் இங்கு வாழும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவசரமாக சட்டத்தை மாற்றியது குறித்து கேள்வி

ஆரம்பத்தில்,இந்த மாற்றங்களினால் சுரங்கத் தொழிலுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்ய அமைச்சகம் 10 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்தது, அதுவும் கொரோனா காலத்தில்.

இது 'ஆலோசனைக் கொள்கை' மற்றும் 'தகவல் அறியும் உரிமை' சட்டத்தின் மீறல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

ஆலோசனைக் கொள்கையின் கீழ், எந்தவொரு சட்டமும் மாறுவதற்கு முன்னர்,முன்மொழியப்பட்ட மாற்றத்தை பொதுக் கருத்துக்களுக்கும் பரிந்துரைகளுக்கும் குறைந்தது 30 நாட்களுக்கு வைக்க வேண்டும் என்பது ஒரு விதி.

கொரோனா தொற்றுநோயின் போது, இந்த 10 நாள் அவகாசத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுரங்கத் துறையில் பணிபுரியும் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும், இது கூட்டாட்சி அல்லது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று எதிர்த்தனர்.

ஆலோசனைகளுக்கு பிறகு, இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு மேலும் அவகாசம் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது, இருப்பினும் இந்த கால அவகாசம் 'ஆலோசனைக் கொள்கையின்' படி குறுகியதாக இருந்தது.

சட்டத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்படுகின்றன?

இந்தியாவில் சுரங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் வரலாறு, பல சிக்கலான திருத்தப்பட்ட சட்ட இணைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பால் நிறைந்துள்ளது, எனவே முன்னோக்கிச் செல்வதற்கு முன், இந்த முறை எம்.எம்.டி.ஆர் சட்டத்தில் அரசாங்கம் என்ன மாற்றங்களை முன்வைத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளவோம்.

நிலக்கரி

பட மூலாதாரம், AFP

சுரங்க அமைச்சகத்தின் அறிவிப்பு இந்த மாற்றங்களை 9 துண்டுகளாகப் பிரிக்கிறது, இது சுரங்கம் தொடர்பான தனியார் நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் மற்றும் சாத்தியமான சுரங்க பகுதிகளை ஆராய அனுமதிக்கும், மேலும் ஆராய்ச்சி 'தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை' மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும், கனிம சாத்தியமான பகுதிகளை தனியார் நிறுவனங்களிடையே ஏலத்திற்கு விடச் செய்து, பின்னர் இந்த சுரங்கங்களை, சுரங்க உரிமங்களுடன் தனியார் துறைக்கு ஒப்படைப்பதும் இதில் அடக்கம்.

சட்டவிரோத சுரங்கத்தின் வரையறையில் செய்யப்படும் இந்த மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது, சுரங்கத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 'மைய சுரங்கப் பகுதி' தவிர வேறு எந்த இடத்திலும் சுரங்கத்தை வெட்ட அனுமதியில்லை.

ஆனால் மாற்றத்திற்குப் பிறகு, சுரங்க நிறுவனங்கள் இப்போது சுரங்கத்திற்காக குத்தகைக்கு விடப்பட்ட முழு நிலத்திலிருந்தும் சுரங்க பணியை சட்டப்பூர்வமாக செய்ய முடியும்.

இதனுடன், ஒரு பெரிய முன்மொழியப்பட்ட மாற்றம், 'காப்டிவ்'மற்றும் 'நான் காப்டிவ் ' சுரங்கங்களுக்கிடையிலான இடைவெளியை முடிவுக்கு கொண்டு வந்து ,வணிகச் சுரங்க பணிகளுக்காக அனைத்து கனிமத் தொகுதிகளையும் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கும் அழைப்பு விடுக்கிறது.

இந்த சீர்திருத்தங்கள் முத்திரைக் வரியை குறைப்பதற்கும், மாவட்ட கனிம நிதியம் (டி.எம்.எஃப்)ன் பொது நலக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தை மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது .

தனியார் நிறுவனங்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் இந்த சீர்திருத்தங்கள், அவர்கள் சுரங்கங்களை வாங்குவதற்கும் லாபத்திற்காக சுரங்க பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கின்றன, இறுதியாக 'வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என்ற புள்ளியில் இது முடிவடைகிறது.

இப்போது கேள்வி என்னவென்றால், இந்த சீர்திருத்தங்கள் உண்மையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பாரப்பு உள்ளதா? அப்படியானால், என்ன விலையில்? இந்த முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின் சுற்றுச்சூழல், வன உள்ளூர் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் மீது இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்த கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு முன் இன்னும் சில முக்கியமான விஷயங்கள்.

நிலக்கரி

பட மூலாதாரம், NURPHOTO

தனியார்மயமாக்கல் பிரசாரம்

இந்த மாற்றங்களின் அறிகுறி ஜூன் முதல் உணரப்பட்டது. ஜூன் 18 அன்று, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நாட்டில் 41 புதிய நிலக்கரித் தொகுதிகள் ஏலம் விடப்பட்டதைக் கோடி காட்டியபோது, நிலக்கரித் துறையை வணிகச் சுரங்கத்திற்காக விடுவதற்கான முதல் திறந்த அறிவிப்பாக இருந்தது .

ஆனால் அதே நேரத்தில், வேலைவாய்ப்பு அதிகரிப்பது என்ற பெயரில் சுரங்கத்தில் அடிப்படை மாற்றங்களின் தொடக்கமாகவும் இது இருந்தது. இந்த நடவடிக்கை 'பல தசாப்தங்களாக பூட்டப்பட்ட நிலக்கரி சுரங்கத்தை விடுவிக்கும்' என்று பிரதமர் கூறினார்.

வாங்குபவர்களின் குறைவு மற்றும் கோல் இந்தியா லிமிடெட் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக புதிய நிலக்கரித் தொகுதிகளை ஜூன் மாதத்தில் விற்க முடியவில்லை என்பதால், ஏல செயல்முறை ஆகஸ்ட் மற்றும் பின்னர் நவம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்,எம்.எம்.டி.ஆர் சட்டத்தில் புதிய சீர்திருத்தங்களுக்கான திட்டம் வெளிவந்தது. இந்த திருத்தங்களில், முதன்முறையாக, நிலக்கரி மட்டுமல்லாமல், அனைத்து கனிமங்களையும் சுரங்கப்படுத்துவதை தனியார்மயமாக்குவதற்கான கிட்டத்தட்ட வெளிப்படையான திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்டது.

நிலக்கரி

பட மூலாதாரம், JONAS GRATZER

ஆனால் இந்த மாற்றங்களின் நன்மைகள் மற்றும் இழப்புகளுக்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மாற்றங்கள் 2019 இல் செய்யப்பட்ட தேசிய கனிம கொள்கைக்கு எதிரானது.

தேசிய கனிம கொள்கைக்கு எதிராக உள்ள மாற்றங்கள்

எம்.எம்.டி.ஆர் சட்டத்தின் சமீபத்திய திருத்தங்கள் குறித்து புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிளாட் எல்வரெஸ் கனிம அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்,இதில் தற்போதைய மாற்றங்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட சமீபத்திய தேசிய கனிமக் கொள்கையையும் மீறுவதாக உள்ளது என கூறியள்ளார்.

இந்த சீர்திருத்தங்களுக்கான திட்டம் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கனிம சட்டத்தில் பெரிய திருத்தங்களுக்குப் பிறகு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்.எம்.டி.ஆர் சட்டத்தில் பல மாற்றங்களைச் செய்த பின்னர், இப்போது மீண்டும் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியம் கவலை அளிக்கிறது.

சுரங்க அமைச்சகத்திற்கு அல்வாரெஸ் எழுதிய கடிதத்தில்,பல மாற்றங்கள் தேசிய கனிம கொள்கை மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராக செல்கின்றன. இயற்கை வளங்கள் அனைத்தும் நமது பொதுவான தேசிய பாரம்பரியம் என்று தேசிய கனிம கொள்கை கூறுகிறது" என்றும் எழுதியுள்ளார் .

நாட்டு மக்களின் பிரதிநிதியாக, இந்த வளங்களை கவனித்துக்கொள்வதற்கான பொறுப்பு அரசு மீது உள்ளது. தாதுக்கள் இருக்கும் சூழலில், நிலத்திற்குள் இருக்கும் அனைத்து தாதுக்களுக்கும் மாநில அரசுகள் முழு தொகையையும் பெற வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தாதுக்கள் தொடர்பான தேசிய கனிமக் கொள்கையின் அரசியலமைப்பு நிலைப்பாடு ஒன்றே".

நிலக்கரி

பட மூலாதாரம், Getty Images

வேலைவாய்ப்புக்கான கேள்வி

இப்போது 'வேலைவாய்ப்பு' என்ற அடிப்படை கேள்விக்கு வாருவோம் . இரண்டு தசாப்தங்களாக ஜார்க்கண்டின் சரண்டா காடுகளில் இருக்கும் இரும்புச் சுரங்கங்களைப் பற்றி ஆய்வு செய்த மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் ராகேஷ் குமார் சிங், சுற்றுச்சூழல் மட்டத்தில் பெரிய விலையை கொடுத்த பின்னரும், புதிய உத்தேச மாற்றங்கள் உண்மையில் வேலைவாய்ப்பை அதிகரிக்காது என்று நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய டாக்டர் ராகேஷ், "சரண்டாவில் இரும்புச் சுரங்கங்கள் 1920 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றும், நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மாவட்டத்தின் 'வறுமைக் குறியீடு' , நாட்டின் கனிமமற்ற மாவட்டங்களை விட இங்கே வறுமை அதிகம் என காட்டுகிறது . இதுதான் நாட்டின் பெரும்பாலான பிற மாவட்டங்களின் நிலையாகும் ".

கனிமப் பகுதிகளின் பொருளாதார பின்தங்கிய நிலையை வேலைவாய்ப்புடன் இணைக்கும் அவர், "சரண்டாவில் இருக்கும் இரும்புச் சுரங்கங்களின் உதாரணத்தை நாம் எடுத்துக் கொண்டால், கையால் தோண்ட முடியாது."

"நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி சுரங்கச் செயல்பாட்டில் மிகக் குறைந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன, எனவே சுரங்கப் பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை உள்ளூர் மக்களின் நலனுக்காகப் பாதுகாப்பது முக்கியம், ஏனென்றால் சுரங்கம் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது."

'சுரங்கத் திட்டம்' மீறல்களின் அச்சம் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளின் வரையறையை மாற்றுவது சுரங்கத் திட்டத்தை மீறுவதற்கான வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கும் என்று டாகடர் ராகேஷ் கூறுகிறார்.

மேலும், "புதிய வரையறையின்படி, குத்தகைக்கு விடப்பட்ட முழு இடத்திலும் சுரங்க பணிகளை செய்ய முடியும். பின் மக்கள் எப்போதும் சுரங்கத் திட்டத்தை புறக்கணிப்பார்கள், அது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இந்த பணிகளில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள், ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியைத் தவிர்ப்பதற்கான சாத்தியமும் இதில் உள்ளது

அரசாங்கம் சுரங்க பணிகளை ஊக்குவிக்க விரும்பினால், எல்லா நிலங்களையும் தோண்டி எடுக்கலாம் என்று அர்த்தமல்ல! இது வேலைவாய்ப்பை அதிகரிக்காது, உள்ளூர் மக்கள் மேலும் ஓரங்கட்டப்படுவார்கள்". என்கிறார்.

நிலக்கரி

பட மூலாதாரம், NURPHOTO

சுரங்கப் துறை விஷயங்களில் பணிபரிபவரும் நீண்டகால சுற்றுச்சூழல் ஆர்வலரும் புவியியலாளருமான ஆர்.ஸ்ரீதர் கூறுகையில், ஒருபுறம் அரசாங்கம் தனது சொந்த நிறுவனங்களிடமிருந்து இழப்புகளை மீட்டெடுக்க முடியவில்லை, மறுபுறம் முழு சுரங்கத் துறையையும் இலாபத்திற்காக தனியார்மயமாக்க ஊக்குவிக்கிறது.

பிபிசியுடனான உரையாடலில், அவர் கூறுகிறார், "சுரங்கமானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒருபோதும் ஐந்து சதவீதத்திற்கு மேல் பங்களிக்கவில்லை. இப்பொதுதான் 2019 ஜூலை மாதம், நிலக்கரி இந்தியாவுக்கு சட்டவிரோத சுரங்க பணிகளுக்காக மொத்தம் 53 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை இன்னும் முழுமையாக செலுத்தவில்லை. "

தன்னுடைய சொந்த நிறுவனங்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதன் மூலம் கூட, அரசாங்கம் அதன் மொத்த லாபத்தை அதிகரிக்க முடியும்." ஆனால் பழைய பிரச்சினைகலில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இதுபோன்ற மாற்றங்கள் முன்மொழியப்படுகின்றன, அவை காடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் ".

தேசியமயமாக்கலுக்கு முந்தைய கட்டத்தில் மாற்றங்கள் நடக்குமா?

இந்த திருத்தங்கள் காரணமாக தேசியமயமாக்கலுக்கு முன்னர் சுரங்கத் துறையில் மீண்டும் வன்முறை நிலவக்கூடும் என்று பல நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

சுரங்கச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட புதிய சீர்திருத்தங்கள், இந்த முழு பிராந்தியத்தையும் சுரங்க தேசியமயமாக்கலின் முந்தைய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நிலக்கரி தொழிலாளர்கள் அமைப்புகளுடன் நீண்ட காலமாக பணியாற்றி வரும் கியான் சங்கர் மஜும்தார் கருதுகிறார்.

பிபிசியுடனான உரையாடலில், "முதன்முறையாக, சி.எம்.பி.டி.ஐ.எல் போன்ற நிலக்கரி இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தேசிய நிறுவனங்கள் தனியார் கைகளுக்குச் செல்கின்றன. இந்த சீர்திருத்தங்களில் சட்டவிரோத சுரங்க பணிகள் மற்றும் மூடிய சுரங்கங்கள் பற்றிய கேள்வி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

"முத்திரை வரி குறைக்கப்படுகிறது, இது மாநிலத்தின் விஷயம் இதில் மத்திய அரசு தலையிடுவதியில்லை. இந்த முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை ஒரு வகையில் பார்த்தால், சுரங்கத்தை தேசியமயமாக்கலுக்கு முந்தைய கட்டத்திற்கு, இதை தள்ள அரசாங்கம் தயாராக உள்ளது போல் தெரிகிறது.

நிலக்கரி

பட மூலாதாரம், Getty Images

அதிக சுரங்கபணிகள்,அதிக இடப்பெயர்ச்சி

பழங்குடியினர் மற்றும் நிலப் பிரச்சினைகள் குறித்து ஜார்க்கண்டில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் சஞ்சய் போஸ் மலிக் கூறுகையில், மாநிலத்தில் சுரங்கத்தை தனியார்மயமாக்குவதற்கான அழைப்புகள் வந்தவுடன் இது உணரப்பட்டன.

"ஜார்க்கண்டின் முதல் முதலமைச்சர் முதல் இப்போது வரை - கிட்டத்தட்ட அனைவரும் இந்த சுரங்கத்தை தனியார்மயமாக்குவதை தங்கள் சொந்த மட்டத்தில் தயாராக உள்ளனர். பாஜகவின் முந்தைய முதல்வரான ரகுவார் தாஸும் சுரங்கத்தை தனியார்மயமாக்குவது குறித்து மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். ஆனால் எழுபதுகளுக்கு முன்பு தனியார் சுரங்கங்களில் வேலை என்பது சித்திரவதை, அராஜகம் மற்றும் வன்முறை என்பது போன்ற நினைவுகள் மாநில மக்களின் நினைவில் இன்னும் உள்ளது.

".இத்தகைய ஆக்கிரமிப்பு, தனியார்மயமாக்கல்ஆகியவை மாநிலத்தில் நிலப்பிரச்சனைகள் மற்றும் இடப்பெயர்வுகளை அதிகரிக்கும் என்று மாலிக் கூறுகிறார்.

"தனியார் நிறுவனங்களின் குறிக்கோள் லாபம். இதுபோன்ற சூழ்நிலையில், காடு, நிலம் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட மக்களின் கழுத்தின் கீழ் இடப்பெயர்ச்சி எனும் வாள் தொங்கும். இருப்பினும், இந்த வாள் ஜார்க்கண்ட் விவசாயிகள் மீது பல ஆண்டுகளாக தொங்கிக்கொண்டிருக்கிறது. பின் இந்த விதை முன்னோக்கி சென்று சமூக அதிருப்திக்கு வழிவகுக்கிறது."

இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கதையில்,மாவட்ட சுரங்க நிதியம் அல்லது டி.எம்.எஃப் பற்றி பேசாமல் இருந்தால் பூர்த்தியாகாது. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஸ்ரேஷ்டா பானர்ஜி, டி.எம்.எஃப் இன் பணித் துறையை மாற்றுவது பொது மக்களுக்கு மிகப்பெரிய தீங்கு என்று கருதுகிறார்.

சுரங்கச் சட்டத்தில் 2015 ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு இணைக்கப்பட்ட டி.எம்.எஃப், உண்மையில் சுரங்க மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட ஒரு நிதியாகும், இது சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும்.

டி.எம்.எஃப் இன் அடிப்படை ஆணை உள்ளூர் மக்களுக்கு முறையான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதோடு, அவர்களின் வாழ்வாதார வழிமுறைகளையும் வழங்குவதாகும்.

ஆனால் இது புதிய முன்மொழியப்பட்ட சட்டத்தில் இது மாற்றப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற 'புலப்படும் கட்டுமானப் பணிகளில்' பணத்தை முதலீடு செய்ய இப்போது டி.எம்.எஃப் நிதயத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுரங்கத் துறையில் பயங்கரமான வறுமை மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றின் பாதிப்பை எதிர்கொள்ளும் எத்தனயோ பேருக்கு டி.எம்.எஃப் நம்பிக்கையின் கடைசி கதிர் என்று ஸ்ரேஸ்தா நம்புகிறார்.

"இவை அனைத்தும் வேலைவாய்ப்புக்காக இருந்தால், சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகங்களுக்கு தேவையான பயிற்சி அளிப்பதிலிருந்தும், அவர்களின் சொந்த மாவட்டங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதிலிருந்தும் டி.எம்.எஃப் இன் நிதி ஏன் திருப்பி விடப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது," என்று பிபிசியுடன் பேசிய அவர் கூறுகிறார். டி.எம்.எஃப் ன் நோக்கமே திசை திருப்பப்படுகிறது. டி.எம்.எஃப் மற்றும் அதன் நிதி உள்ளூர் மக்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டது ".

இந்த அறிக்கையில், சுரங்கச் சட்டம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிய பிபிசி சுரங்க அமைச்சகத்திற்கு எழுத்துப்பூர்வமாக கேள்விகளை அனுப்பியது, ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் அமைச்சகத்திலி்ருந்து எந்த பதிலும் வரவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: