உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுவது ஏன்? இந்த ஆண்டு கருப்பொருள் என்ன?

World Environment Day

பட மூலாதாரம், Getty Images

உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுச் சூழல் தினம்: இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன?

2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, "பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட. சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம். இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் அதுசார்ந்த தலைப்புகளில் பிபிசி தமிழ் இதுவரை பதிப்பித்த சில முக்கிய கட்டுரைகளை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

Presentational grey line

பல்லுயிர்ப் பெருக்கம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

காணொளிக் குறிப்பு, இயற்கையை மனிதன் எப்படி அழிக்கிறான் தெரியுமா?
Presentational grey line

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு யார் காரணம்?

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சியில் ''நெருக்கடியான தருணம் வந்துவிட்டது'' என்று சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்திருந்தார்.

''ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,'' என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அட்டன்பரோ கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் மிக அபாயகரமான அளவுக்கு வெப்பநிலை உயர்வதைத் தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான, சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி 2018ல் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.

பருவநிலை `நெருக்கடி தருணம்' பற்றி சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

Presentational grey line

இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருப்பது ஏன்?

இந்திய கேட்

பட மூலாதாரம், AFP

"விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

இயற்கையை காக்காவிடில் மனித குலத்தின் எதிர்காலம் என்னாகும்?

பருவநிலை மாற்றத்தின் காரணமாக நமது கடல், பனிக்கட்டிகள் அழிந்து வருகின்றன என ஐ.நா எச்சரித்துள்ளது.

ஐ.நா. ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், பனிக்கட்டிகள் உருகிவருகின்றன என்றும், மனித செயல்பாடுகளால் சில உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

Presentational grey line

பூமியைக் காக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பொது போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொது போக்குவரத்து

"இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!"

இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது.

Presentational grey line

பருவநிலை மாற்றம்: சில முக்கியத் தகவல்கள்

இந்நிலையில், பருவநிலை மாற்றம் எப்படி புவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது, அதைத் தடுக்க எடுக்கப்படும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஏழு உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து அளிக்கிறோம்.

Presentational grey line

கொரோனா வைரஸ் காரணமாக பூமியின் மாசு குறைந்தது எப்படி?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

இயற்கை பேரிடர்களால் பாதிக்கக்கூடிய நாடுகள் எவை?

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: