கத்தாரின் முயற்சிக்கு பிறகும் இந்தியா திரும்பும் தொழிலாளர்களால் புதிய சவால்

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி

கத்தார் நாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய தொழிலாளர் சட்டத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது. இதனை பொதுவாக அங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள்.

புதிய சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை மாற்றுவதற்கு கட்டாரி காஃபில் அதாவது ஸ்பான்சரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியதில்லை, அவர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,000 கட்டாரி ரியாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய்.

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான அரங்கங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சென்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த செய்தியால் நிம்மதியடைந்திருக்க வேண்டும். மனித உரிமைகளுக்கான நிறுவனங்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது தொடர்பான பிரச்சினையை அரசாங்கத்தின் முன்வைக்கின்றன.

"இது தொழிலாளர் சீர்திருத்தத்தின் திசையில் ஒரு பெரிய நடவடிக்கையாகும்" என்கிறார் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமூகங்களுக்கான கொள்கை ஆராய்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மஹாபீன் பானு.

Banner image reading 'more about coronavirus'
Banner

அவர் பல ஆண்டுகளாக சர்வதேச தொழிலாளர் இடம்பெயர்வு துறையில் பணியாற்றி வருகிறார். " தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சரியான திசையில் கத்தார் செயல்பட்டு வருவதால், அதன் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் பானுவின் கூற்றுப்படி, "கத்தாரில் ஊதியம் வழங்கப்படாதது தொடர்பான பல வழக்குகள் உள்ளன. கத்தார் அந்த வழக்குகளை எவ்வாறு கையாளும், ஊதியம் எவ்வாறு வழங்கப்படும் என்பதும் ஒரு சவாலாக இருக்கும்."

கத்தார் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2015ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தியது.

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

கத்தாரின் தலைநகர் தோஹாவில் பணிபுரியும் சில இந்திய தொழிலாளர்கள், வேலைகளை மாற்றுவதற்கு தூதரகத்தின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் அவர்களுக்கு மிக முக்கியமான செய்தி என்று கூறினார்.

அவரைப் பொருத்தவரை, இது கஃபீலின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரும். கொரோனா தொற்றுநோயின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்ததாக அவர் கூறுகிறார். அவர்களில் பலருக்கு கத்தாரில் வேலை கிடைத்திருக்கும் ஆனால் கபீலின் ஒப்புதல் இல்லாததால், அவர்களில் பலர் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

புதிய சட்டம் நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் வேலையின்மை என்னும் அச்சுறுத்தக்கூடிய வாள் இன்னும் கத்தாரில் பணிபுரியும் சுமார் மூன்று லட்சம் இந்தியத் தொழிலாளர்களின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP VIA GETTY IMAGES

கட்டடத்துக்கான பொருள்களை கொண்ட கடை நடத்தி வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நியாஸ் சித்திகி கூறுகையில் "இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் எப்போதும் வேலை இழக்கும் அபாயம் இருந்தது, ஆனால் தொற்றுநோய்க்குப் பின்னர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இப்போது வேலையின்மை ஆபத்து அதிகரித்து, அதிகரித்துள்ளது."

'வேலையின்மையை எதிர்கொள்வது இன்னும் தொடர்கிறது'

உண்மையில், இந்தியாவில் இருந்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளிலும் வேலையிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பலர் வேலை இழந்துவிட்டனர், ஆனால் அவர்களில் பலர் சட்டவிரோதமாக அங்கு வசித்து வருகின்றனர்.

பலர் திரும்பி வர விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் திரும்புவதற்கு விமான கட்டணம் கூட இல்லை. அத்தகைய தொழிலாளர்களில் ஒருவர் சவுதி அரேபிய நகரமான மதீனாவில், அவர் நண்பர்களுடன் வசித்து வருவதாகவும், எப்படியோ காலமானார் என்றும் கூறினார்.

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம், EPA

தொற்றுநோய்களின் போது சட்டவிரோதமாக வாழும் தொழிலாளர்களை தங்கள் நாட்டுக்குத் திரும்ப செளதி அரசாங்கம் அனுமதித்துள்ளது, இதன் காரணமாக பலர் இந்தியா திரும்பியுள்ளனர்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

ஆனால் தற்போது, ​​இந்திய தொழிலாளர்கள் குவைத்தில்தான் அதிகளவு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர், இந்திய தூதரகத்தின் தகவல்களின்படி சுமார் பத்து லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். தூதரகத்தின் கூற்றுப்படி, இதில் சட்டவிரோதமாக வாழும் 10,000 தொழிலாளர்களை சேர்க்கவில்லை.

குவைத் தேசிய சட்டமன்றம் கடந்த மாதம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதன்படி நாட்டின் மொத்த 43 லட்சம் மக்கள்தொகையில் இந்தியர்கள் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், தற்போது 13 லட்சம் மட்டுமே குவைத் மக்கள் உள்ளனர்.

இந்தச் சட்டத்தின் காரணமாக, இந்தியாவின் எட்டு லட்சம் தொழிலாளர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டியிருக்கும். உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சொந்த நாட்டிற்கு மீண்டும் அழைத்து வர இந்திய அரசை அவர்கள் கோருகின்றனர்.

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம், FAISAL ALI

இவர்களில் சுமார் 30,000 பேர் குவைத் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். நாட்டில் 6.5 பில்லியன் டாலர் பணப்புழக்கம் எஞ்சியுள்ளது, இது அக்டோபருக்குப் பிறகு அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஈடுகட்ட போதுமானதாக இருக்காது என்று குவைத்தின் நிதியமைச்சர் கூறுகின்றார்.

இது அரசு சேவைகளில் பணிபுரிபவர்களை பாதிக்கும். இந்திய தூதரகத்தின்படி, 30,000 இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் அரசு சேவைகளுக்காக பணியாற்றுகின்றனர்.

இந்தியாவின் சிக்கல் அதிகரிக்கும்

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் திரும்பி வருவது என்பது, பொருளாதார சிரமங்களுடன் போராடும் இந்திய அரசாங்கத்திற்கு இரண்டு வழிகளில் மோசமான செய்தியாகும்.

முதலாவதாக, செளதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 35 பில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள்.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 85 லட்சத்திற்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் பாதி பேர் திரும்பி வந்தால் கூட, பணம் அனுப்பும் தொகையும் பாதியாகிவிடும். இதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவின் வருவாயின் முக்கிய ஆதாரம் பாதிக்கப்படும்.

திரும்பி வரும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்வது இந்தியாவுக்கு முன்னால் உள்ள இரண்டாவது சவாலாகும். சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்ட பின்னர், எதிர்வரக்கூடிய மாதங்களில் இந்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்ளக்கூடும். வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பும் தொழிலாளர்களை மறுவாழ்வு அளிக்க அவர்கள் இனிமேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பும் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்த தரவுகளை இந்திய அரசு சேகரித்து, இந்திய தொழிலாளர் சந்தையில் அவர்களை இணைப்பதற்கான உறுதியான திட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்று டாக்டர் மஹஸ்பீன் பானு கூறுகிறார்.

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம், FAISAL ALI

இந்திய அரசு, அவர்களின் தூதரகங்களுடன் சேர்ந்து, அனைவருக்கும் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்து அவர்கள் சுரண்டப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்தியா திரும்பும் தொழிலாளர்களுக்காக அதிகம் வேலை செய்ய வேண்டிய மாநிலங்களில் கேரளா, உத்தர பிரதேசம், பிஹார், ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் அடங்கும்.

விமான பயணம் இயக்கப்பட்ட பின்னர், ஐந்து லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடாவிலிருந்து திரும்பலாம் என்று கேரள அரசு கூறுகிறது.

டாக்டர் பானுவின் கூற்றுப்படி, இது மாநில அரசுகளுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும், இதை எதிர்கொள்வதற்கான பணிகள் இனிமேல் செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என்கிறார் டாக்டர் மஹஸ்பீன் பானு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: