நீட், ஜேஇஇ தேர்வு: மாணவர்கள் குரல் கொடுக்க சோனியா, ராகுல் அழைப்பு

காங்கிரஸ் போராட்டம்
படக்குறிப்பு, சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் கருத்தைக் கேட்காமல் தேர்வு நடத்தப்படக்கூடாது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் திட்டமிட்டபடி அடுத்த மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நீட், ஜேஇஇ தேர்வு தற்போதைய சூழலில் நடத்துவதற்கு மாணவர்களில் ஒரு தரப்பினரும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஜார்கண்ட், மகராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகியவற்றின் அமைச்சர்கள் தங்களின் தனிப்பட்ட அளவில் நீட், ஜேஇஇ தேர்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு கேட்டுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தொண்டர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தொண்டர்கள்

இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில், நீட், ஜேஇஇ தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட முயன்ற சமாஜ்வாதி கட்சி தொண்டர்களை விரட்டும் காவல்துறையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லக்னெள நகரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சமாஜ்வாதி கட்சி தொண்டர்களை விரட்டும் காவல்துறையினர்

முன்னதாக இதே விவகாரத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். லக்னெள, சண்டீகர் ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய காட்சிகளை பார்க்க முடிந்தது.

இதன்படி தமிழ்நாட்டில் இன்று சென்னையில் புரசைவாக்கம் உள்பட 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏழை மாணவர்களை பழிவாங்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று அதில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வை நடத்த முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக குரல் எழுப்பினர்.

சிதம்பரம் பகுதியில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை, சேலம், கோவை, திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் உண்ணாவிரதம் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்
படக்குறிப்பு, புதுச்சேரியில் உண்ணாவிரதம் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்

புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் அணி சார்பில் மத்திய அரசைக்கண்டித்து உண்ணாவிரதம் நடைபெற்றது. நீட், ஜேஇஇ தேர்வு ரத்து, தனியார் கல்வி நிறுவனங்களில் 6 மாத கால கல்விக்கட்டணத்தை ரத்து செய்வது உள்பட 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்படும் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் நடவடிக்கையில் மாணவர்களின் உடல் நலன்களை கருத்தில் கொள்ளாமல் அரசு செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தனித்தனியாக காணொளிகளை வெளியிட்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

சோனியா காந்தி வெளியிட்டுள்ள காணொளியில், மாணவர்களாகிய உங்களுக்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஏனென்றால் தற்போது நீங்கள் மிகவும் சிக்கலான சூழலை எதிர்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வு, எப்போது நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இது உங்களுடைய பிரச்னை மட்டுமல்ல, உங்களுடைய குடும்பத்தின் பிரச்னையும் கூட. நீங்கள்தான் எங்களின் எதிர்காலம். சிறந்த இந்தியாவை கட்டமைப்பதில் உங்களை நாங்கள் சார்ந்திருக்கிறோம். எனவே, உங்களுடைய எதிர்காலம் தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் உங்களுடைய ஒப்புதலுடனேயே எடுக்கப்பட வேண்டும். அரசு உங்களுடைய குரல்களை கேட்டு அதன்படி செயல்படும் என்று நான் நம்புகிறேன். இதுதான் அரசுக்கும் எனது அறிவுரை என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், BIJU BORO

படக்குறிப்பு, அஸ்ஸாமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தொண்டர்கள்

இதேபோல, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொளியில், "நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். நீங்கள்தான் மாணவர்கள். நீங்கள்தான் இந்த நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லப்போகிறீர்கள். கடந்த மூன்று, நான்கு மாதங்களாக என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் புரிந்திருக்கிறார்கள். கொரோனா பெருநந்தொற்று தவறாக கையாளப்பட்டிருப்பதை அனைவரும் புரிந்திருக்கிறார்கள். அது ஏற்படுத்திய பேரழிவு, குறிப்பாக பொருளாதார பேரழிவு, அதன் விளைவாக நாடு எதிர்கொள்ளும் வலியை அனைவரும் புரிந்திருக்கிறார்கள். அதற்கு நீங்கள் ஏன் பொறுப்பாளியாக்கப்பட வேண்டும், மேலும் வலியை நீங்கள் ஏன் அனுபவிக்க வேண்டும், நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை" என்று ராகுல் கேள்வி எழுப்புகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மேலும், அவர், " அரசு செயலற்று உள்ளதை என்னால் தெளிவாகப்பார்க்க முடிகிறது. எதற்காக அரசு உங்கள் மீது இப்போது தேர்வைத் திணிக்க முற்படுகிறது? இந்த தேர்வுகள் தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், உங்களுடன் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும், கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய அரசுக்கு எனது செய்தி இதுதான். ஏற்கெனவே கடுமையான பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தி விட்டீர்கள். அவர்களை காயப்படுத்தி விட்டீர்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். இந்த பிரச்னையை சுமூகமாகத்தீருங்குள்" என்று அந்த காணொளியில் பேசியுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: