நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

நீட், ஜேஇஇ தேர்வை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

பட மூலாதாரம், Getty Images

நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்களின் அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் 6 அமைச்சர்கள் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கறிஞர் சுனில் ஃபெர்ணாண்டஸ் இந்த அமைச்சர்கள் சார்பாக மனுத் தாக்கல் செய்தார்.

இந்த கொரோனா சூழலில் நீட், ஜேஇஇ தேர்வை நடத்த பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

முன்னதாக, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுடன் கூட்டாக இணைந்து நாடவிருப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: