கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கோவிட் - 19 - அண்மைய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 52,939 பேர் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 5210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் இன்று 1336 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் உள்ளது அம்மாவட்டத்தில் இதுவரை 3738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்து மதுரையில் 3020 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றுக்கு அதிகப்படியாக 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
நேற்று தமிழகத்தில் 5849 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றும் மார்ச் மாதம் விடுபட்ட 444 இறப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












