நரேந்திர மோதி உரை: 8 முக்கிய தகவல்கள்; ஏழைகளுக்கு பல திட்டங்கள் அறிவிப்பு

நரேந்திர மோடி

பட மூலாதாரம், BJP

உலகில் உள்ள பிற நாடுகளை ஒப்பிடும்போது கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா உறுதியான நிலையில் உள்ளது. இதற்குக் காலத்தே எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளுமே காரணம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்

’’அன்லாக்-1 தொடங்கியதில் இருந்து நாட்டில் சமூக மற்றும் தனிமனித நடத்தையில் கவனக்குறைவு வந்துவிட்டது. முன்பு முகக் கவசம் பயன்படுத்துவது குறித்து அதிகம் கவனம் இருந்தது. அடிக்கடி 20 விநாடிகளுக்கு கைகழுவதும் இருந்தது.’’ என்றார் மோதி.

``லாக்டவுன் சமயத்தில் விதிமுறைகள் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டன. அதே போன்ற எச்சரிக்கை உணர்வு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசுகளுக்கும் தேவை``

’’பிரதமரின் வறியோர் நலன் காக்கும் உணவு தானிய விநியோகத் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும்.’’ என்றார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அடுத்த சில மாதங்களில் வரவிருக்கிற பண்டிகைகளை கருத்தில்கொண்டுதான் தீபாவளி, சட் பூஜை வரை, அதாவது நவம்பர் வரை ஏழைகளுக்கான தானிய விநியோகம் நீட்டிக்கப்படுகிறது என கூறினார் அவர்.

’’பிரதமர் ஏழை நலத் திட்டத்தின்கீழ் 1.75 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் 20 கோடி ஏழைக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 31 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது. அதைப்போலவே 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.’’

ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டுவர இருக்கிறோம். புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார் பிரதமர்.

’’இன்று ஏழைகளுக்கு இலவச தானியம் விநியோகம் செய்ய முடிகிறது என்றால் அந்தப் பெருமை இரண்டு தரப்பாருக்கே சேரும். ஒன்று கடுமையாக உழைக்கும் விவசாயிகள். இரண்டாவது, நேர்மையாக வரி செலுத்துவோர். இந்த இரு தரப்புக்கும் என் இதயத்தில் இருந்து நன்றி’’ என்றார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை பிரதமர் மோதி ஆற்றிய உரைகளைப் போல இல்லாமல் இன்றைய உரையில் சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப்புறத்தில் ஏற்பட்ட மோதல் பற்றி ஏதேனும் குறிப்பு இருக்கும் என்று முன்னதாக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஏழைகள் நலத்திட்டம் மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிப்பது ஆகியவை குறித்தே பிரதமர் பேசினார்.

இந்தியா முழுவதிலும் வறியோர் நலன் காக்கும் தானிய விநியோகத் திட்டத்தை நவம்பர் வரை நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்த சிறிது நேரத்தில் அறிவித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: