சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக மாறும் ஆபத்த மற்றும் பிற செய்திகள்

Flu virus with 'pandemic potential' found in China

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது.

ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.

இப்போது இது உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது.

இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

சாத்தான்குளம்: டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்

சாத்தான்குளம்: டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்

பட மூலாதாரம், Getty Images

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய தந்தை மகன்- ஜெயராஜ்- பென்னிக்ஸ் - இருவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலைய சித்ரவதைக்குப் பிறகு உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.

ஜூலை 31 வரை இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் நாளையுடன் (ஜூன் 30) முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் இதுவரை அமலில் உள்ள பொது முடக்கத்தை ‘அன்லாக் 1’ என்று குறிப்பிட்டு வரும் அரசு தற்போது ‘அன்லாக் 2’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதலின் முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை

tik tok app download ban in india news

பட மூலாதாரம், Getty Images

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

tn e pass coronavirus symptoms in tamil nadu tn payslip

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால், ஜூன் 19ஆம் தேதி முதல் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரையில் ஜூன் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: