குஜராத் நிலநடுக்கம்: புஜ் நகரில் 5.5 அளவில் பதிவு

பட மூலாதாரம், PRASHANT GUPTA
குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அச்சத்துடன் வீதிகளில் குவிந்தனர்.
2001ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 அளவில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது ஏ.என்.ஐ.

பட மூலாதாரம், BIPIN TANKARIYA
நிலநடுக்கம் வலுவாக இருந்தது என்று பொதுமக்களில் ஒருவர் கூறியதாகவும் ஏ.என்.ஐ. தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.,
பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பவநகர், ராஜ்கோட், சுரேந்திர நகர், கட்ச், போர்பந்தர், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கிறது பிபிசி குஜராத்தி சேவையின் செய்தி.
உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ள துணை முதல்வர் நிதின் பட்டேல், இது 2001 நிலநடுக்கம் போல தீவிரமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை
- ''வருமானம் இல்லை, ஆனால் சமூகப் பணியைக் கைவிடமுடியாது'' புதுவை மாற்றுத்திறனாளியின் கதை
- துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை பயணம்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு; 1,974 பேர் பாதிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












