கேரளாவில் யானைகள் கொலை குறித்து மேனகா காந்தி கூறுவது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று உயிரிழந்த கோர சம்பவத்தை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான மேனகா காந்தி கேரள கோயில்களில் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் யாவும் "தவறானது" என்று யானைகள் குறித்த வல்லுநர் ஒருவரும் மற்றும் தனியார் யானை உரிமையாளர்கள் அமைப்பை சேர்ந்த ஒருவரும் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தி முகமை ஒன்றிடம் பேசிய மேனகா காந்தி, கேரளாவில் உயிரிழந்த அந்த யானை "கொலை" செய்யப்பட்டது என்றும் "இதுபோன்ற சம்பவங்களுக்கு மலப்புரம் பெயர்பெற்ற ஒன்று. அது இந்தியாவில் மிகவும் அதிகமான வன்முறைகள் நடக்கும் மாவட்டம். உதாரணமாக, அவர்கள் சாலைகளில் நஞ்சை போடுவதன் மூலம் ஒரே சமயத்தில் 300-400 பறவைகள் மற்றும் நாய்களை இறக்க செய்கின்றனர்" என்று கூறி இருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"சுமார் 600 யானைகள் கால்களை உடைத்து, அடித்து, பட்டினியில் இருக்க செய்து கோயில்களால் கொல்லப்பட்டுள்ளன. மேலும், மறுபுறம் தனியார் உரிமையாளர்கள் யானைகளை காப்பீடு செய்து, பின்னர் வேண்டுமென்றே அவற்றை மூழ்கடிப்பதன் மூலமோ அல்லது நோய்க்கிருமிகளை பரவ செய்தோ இறக்க செய்கின்றனர்" என்று மேனகா காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய யானைகள் குறித்த வல்லுநரும், கேரளாவின் வன ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவருமான பி.எஸ். ஈசா, "கேரளாவை பொறுத்தவரை 507 யானைகள் தனியார் வசம் உள்ளன. இதுதவிர கடந்த 2017இல் 17 யானைகளும், 2018இல் 34 யானைகளும் உயிரிழந்தன."
கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இந்த கணக்கெடுப்பு கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டதாக ஈசா கூறுகிறார். "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையின்படி, 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகாலத்தில் கேரளாவில் 14 யானைகள் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளன."
கேரளாவில் யானைகள் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்பாக ஈசாவிடம் கேட்டபோது, "இது சாத்தியமில்லை. ஏனெனில், யானைகளை யாராவது துன்புறுத்துவத்தை பார்த்தால் அது சமூக ஊடகங்களின் மூலம் பரவி வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிடும்," என்று கூறுகிறார்.
"திருச்சூரில் உள்ள இரின்ஜலகுடா நகரில் உள்ள கூடல்மணிக்கியம் கோயிலில் ஓர் இளம் யானை அடித்து துன்புறுத்தப்படுகிறது. அந்த யானையின் கால்கள் நான்கு திசைகளில் இழுத்து கட்டப்பட்டுள்ளன. நான் புகார் அளித்து ஒரு மாதமாகிவிட்டது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த யானை விரைவில் இறந்துவிடும்" என்று மற்றொரு குற்றச்சாட்டையும் மேனகா காந்தி முன்வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவிக்கிறார் கேரள யானை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.சசிக்குமார். "கூடல்மணிக்கியம் கோயில் அரசால் நடத்தப்படுகிறது. சித்தரவதை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது, தலைமை வன பாதுகாவலர் தக்க அதிகாரியை சரிபார்க்க அனுப்பினார். அவர் தவறாக எதுவும் காணவில்லை. இந்த கோயில் தனக்கு சொந்தமான யானைகளை சிறப்பாக கவனித்துக்கொள்வதாக அறியப்படுகிறது'' என்று சசிக்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
சசிகுமாரின் கூற்றுப்படி, குருவாயூரில் 48 யானைகளும், கொச்சி தேவசம் வாரியத்தில் ஒன்பது, திருவாங்கூர் தேவசம் வாரியத்தில் 30, மலபார் தேவசம் வாரியத்தில் 30 யானைகள் உள்ளன. "ஒட்டுமொத்தமாக எங்களிடம் 486 உள்நாட்டு யானைகள் உள்ளன; எங்கள் கூட்டமைப்பில் 380 உறுப்பினர்கள் உள்ளனர்'' என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"கோயில் திருவிழாக்களின்போது யானைகள் தன்னைத்தானையோ அல்லது பக்தர்களையோ காயப்படுத்திவிட கூடாது என்பதற்காக அவற்றின் கால்கள் சங்கலியால் கட்டப்படுகின்றன. ஆனால், இதை துன்புறுத்தல் என்று குறிப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருவேளை யானைகளை வீடுகளுக்கு அழைத்து சென்றால் அவற்றை நாய்களை கட்டிப்போடுவது போலத்தான் கட்டி வைப்போம்" என்று சசிக்குமார் விளக்குகிறார்.
"தங்களை பாதுகாவலர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்பவர்களின் எண்ணமே திருவிழாக்களை தடுத்து நிறுத்துவதுதான். யானைகள் திருவிழாக்களின் ஒரு முக்கிய அங்கம். மேனகா காந்தி கூறியதை போன்று யானைகள் எவ்வித துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என்று கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் எவ்வித விசாரணையையும் எதிர்கொள்ள தயார். யானை பாதுகாப்பு என்ற பெயரில் அதிகளவிலான பணம் புழங்குகிறது" என்று சசிக்குமார் கூறுகிறார்.

பட மூலாதாரம், MOHAN KRISHNAN / FACEBOOK
இருப்பினும், யானைப் பாதுகாப்பில் குறைபாடே இல்லை என்று சொல்ல முடியாது என்பதை ஈசா ஒப்புக்கொள்கிறார். "அனைத்து கோயில் திருவிழாக்களிலும் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் யானைகளை ஈடுபடுத்தப்படுவதை வனத்துறை முழுமையாக சரிபார்க்கிறது. எனவே, உடல்நிலை சரியில்லாத அல்லது காயமடைந்த அல்லது போதையில் இருக்கும் பாகனை கொண்ட யானையை அணிவகுத்துச் செல்ல முடியாது. இவற்றையெல்லாம் மீறியும் சில குறைபாடுகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.''
உரிமையாளர்களின் தவறான நிர்வாகத்தின் காரணமாக யானைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் குறைந்துவிட்டதாக உயர்நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஈசா கூறியிருந்தார். யானைகளுக்கு நேரத்துக்கு உணவளிப்பதை உரிமையாளர்கள் எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணி யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று சசிக்குமார் சுட்டிக்காட்டினார். மேனகா காந்தி மாவட்டத்தை மலப்புரம் என்று தவறாக குறிப்பிட்டிருந்தார். "பாலக்காடு சம்பவத்தில் முழுமையான விசாரணை வேண்டும். இத்தகைய சித்தரவதைகளை பொறுத்துக்கொள்ள முடியாது'' என்று சசிக்குமார் கூறுகிறார்.
கேரள யானை மரணம்:ஒருவர் கைது
பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக "பல்வேறு தரப்பினர் வெளிப்படுத்தியுள்ள கவலைகள் வீணாகாது என்று நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். நீதி மேலோங்கும்" என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"மூன்று சந்தேக நபர்களை மையமாகக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் வனத்துறை கூட்டாக விசாரிக்கும். மாவட்ட காவல்துறைத் தலைவரும், மாவட்ட வன அதிகாரியும் இன்று (வியாழக்கிழமை) சம்பவ இடத்தை பார்வையிட்டனர். குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு உரிய அனைத்தையும் செய்வோம்" என்று அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது கேரள வனத்துறை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












