யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள் - ‘விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்’
இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.
யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 11 தகவல்களை மட்டும் உலக யானைகள் தினமான இன்று பகிர்கிறோம்.
ஒன்று

பட மூலாதாரம், Getty Images
உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.

இரண்டு

பட மூலாதாரம், Getty Images
பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

மூன்று

பட மூலாதாரம், Getty Images
யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.

பட மூலாதாரம், Getty Images

நான்கு

யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.

ஐந்து

பட மூலாதாரம், Getty Images
ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.


ஏழு

பட மூலாதாரம், Getty Images
யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'

எட்டு

பட மூலாதாரம், Getty Images
மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.

ஒன்பது

பட மூலாதாரம், Getty Images
யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.

பத்து

பட மூலாதாரம், Getty Images
யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.

பதினொன்று

பட மூலாதாரம், Getty Images
உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












