சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்

Jeffrey Epstein

பட மூலாதாரம், Reuters

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.

2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Donald Trump, Epstein

பட மூலாதாரம், Getty Images

2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

2002இல் ஓர் ஊடக நேர்காணலில், "அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்," என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.

Presentational grey line

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைர்

சோனியா காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

வெள்ள பாதிப்பு : 95 பேர் பலி

நீலகிரி

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

'தி.மு.கவிற்கு எச்சரிக்கை இருக்கிறது'

தி.மு.கவின் வேலூர் வெற்றி, வெற்றிக் கணக்கில் வராதா?

பட மூலாதாரம், ARUN SANKAR

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்து முடந்த தேர்தலில் தி.மு.கவின் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றிருக்கிறார்.

ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால், இது முழுமையான வெற்றியல்ல என்கின்றன திமுகவை எதிர்க்கும் கட்சிகள்.

Presentational grey line

சரவணன் குறித்து கமல் ஹாசன் பேசாதது ஏன்?

பிக் பாஸ்

பட மூலாதாரம், vijay tv/ facebook

பிக் பாஸ் 3 போட்டியாளர் சரவணனின் திடீர் வெளியேற்றம் குறித்து நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றி ஒருவார்த்தைகூட அவர் பேசாதது நேயர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை தெரிவித்து அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: