TN ePass: தமிழகத்திற்கு விமானத்தில் செல்ல என்னென்ன விதிமுறைகள்; இ பாஸ் பெறுவது எப்படி – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை விமானப் போக்குவரத்து துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருந்தாலும், அந்தந்த மாநிலங்களும் சில விதிமுறைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்றால் epass பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இ பாஸ் பெறுவது எப்படி என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
- தமிழக அரசின் இ பாஸை பெற https://tnepass.tnega.org/ என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும். இதற்குள் செல்ல நமது மொபைல் எண்ணை வழங்க வேண்டும், பின் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை கொண்டு உள்நுழையலாம்.
- உள்ளே சென்றவுடன் தனிநபர்/குழு, தமிழ்நாட்டின் உள்நுழைதல், தொழில்நிறுவனங்கள் ஆகிய மூன்று தேர்வுகள் உள்ளன.
- அதில் 'தமிழ்நாட்டின் உள்நுழைய' என்ற தேர்வை கிளிக் செய்தால், பயணத்தை தேர்வு செய்ய தேர்வுகள் வரும் அதாவது, ரயில் பயணமா, உள்நாட்டு பயணமா அல்லது சர்வதேச விமான பயணமா என்ற விருப்பத்தேர்வுகள் உள்ளன.
- நீங்கள் டெல்லி, மும்பை போன்ற வெளிமாநிலங்களிலிருந்து வருவதாக இருந்தால், உள்நாட்டு விமானப் பயணம் என்பதை தேர்வு செய்யவேண்டும்.
- தற்போதைய சூழலில் ரயில் மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கான தேர்வுகள் இல்லை.
- விமானப் பயணம் என்பதை தேர்வு செய்து உள்ளே நுழைந்தவுடன் மூன்று கட்டமாக உங்கள் தகவல்களை நீங்கள் பூர்த்தி செய்ய கோரப்படுகிறது.
- முதல்கட்டத்தில் உங்கள் பெயர், பாலினம், வயது, தந்தை பெயர் ஆகியவற்றுடன், உங்கள் அடையாள அட்டை குறித்தான தகவல்களையும், விமான எண், விமான இருக்கை எண், உங்கள் பயணச்சீட்டு, நீங்கள் வந்து சேரும் விமான நிலையம், தேதி மற்றும் உங்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான வசதி உள்ளதா அல்லது கட்டண தனிமைப்படுத்துதலை பெற விரும்புகிறீர்களா, விமான நிலையத்திலிருந்து செல்லும் வாகனத்தின் விவரம் ஆகியவை குறித்து பதிய வேண்டும்.
- அடுத்தக் கட்டத்தில் அதாவது ஸ்டெப் 2 (step 2-ல்) நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்ற விலசமும் தமிழ்நாட்டில் எங்கு செல்ல உள்ளீர்கள் என்ற விலாசத்தையும் பதிவிட வேண்டும்.
- அடுத்ததாக step 3-ல் உங்களுடன் பயணம் செய்பவர்களின் விவரங்களை add passenger என கொடுத்து நீங்கள் பதிவு செய்யலாம். அனைத்து தகவல்களையும் கவனமாகவும், சரியாகவும் பதிய வேண்டியது அவசியம்.
- தகவல்கள் பதியப்பட்டப்பின் ரெஃபரன்ஸ் நம்பர் (reference number ) உருவாக்கப்படும். சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதலுக்கு பிறகு உங்களுக்கு epass வழங்கப்படும்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்?
- 'கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்குள்ளது'
- அமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் - மனிதர்களுக்கு ஆபத்தா?
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








