கொரோனா வைரஸ்: இந்தியாவில் தமிழகத்தில்தான் குறைவான இறப்பு சதவீதம் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 688 நபர்களில், 87 நபர்கள், துபாய், குவைத், மாலத்தீவு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 688 நபர்களில் 552 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.
சென்னை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செயல்படும் 61 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 3,32,352 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 10,333 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 489 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4895ஆக உயர்ந்துள்ளது என்றார்.தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், 4775 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் மூன்று நபர்கள் இறந்துள்ளார் என்றும் அதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் விகிதம் இறப்பு விகிதம்குறித்து தொடர்ந்து பேசிவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு, மத்திய அரசின் குழு பாராட்டியதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- அர்னாப் கோஸ்வாமி வழக்கு: முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு - நடந்தது என்ன?
- ஆம்பன் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பா? - பாலச்சந்திரன் கூறுவது என்ன?
- கொரோனா வைரஸால் பறிபோன கோயில்களின் வருமானம் - பல நூறு கோடி இழப்பு
- விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புக் கவசங்கள் கோரிய மருத்துவருக்கு மனநல பாதிப்பா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












