இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ஆன்லைன் வழிக் கல்வி, தனியார்மயம், கம்பெனி சட்டம் - இவைதான் அறிவிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
(இந்த பக்கத்தை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறோம். செய்திகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்)
இந்தியப் பிரதமர் மோதி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் 5வது மற்றும் இறுதிக் கட்ட விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க தொடங்கினார்.
ஒரு நாடாக இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். இது மிகப்பெரிய நெருக்கடிதான், அதே நேரம் இதுவொரு வாய்ப்பு என்று பிரதமர் மோதி தனது உரையில் கூறி இருந்தார்.
இதனை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.
அவர், "சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட உடனே, நாங்கள் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தை அறிவித்தோம். தேவையானவர்களுக்கு உணவு தானியங்கள் கொடுத்தோம்," என்றார்..
"புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் செலவில் பெரும்பகுதியை மத்திய அரசே ஏற்றுக் கொண்டது, அவர்களுக்கு," என்றார்.
சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மத்திய அரசு செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்.
அவர், "8.19 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ 2000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 16, 394 கோடி. தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் அதன் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூ 1405 கோடியும், இரண்டாம் தவணையாக ரூ 1402 கோடியும்," வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்கள் 10,025 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. 2.2 கோடி கட்டட தொழிலாளர்களுக்கு 3950 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. 6.81 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது," என பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்.
சுகாதாரம் தொடர்பாக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தது மத்திய அரசு. குறிப்பாக ரூபாய் 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்கள் உடனே வாங்கப்பட்டன என்று தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.
மாநிலங்களுக்கு உடனடியாக 4113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் மதிப்பிலான இன்சுரன்ஸ் வழங்கப்பட்டது என்று கூறினார்.
கடந்த நான்கு நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்று நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம்,மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்
அறிவிப்புகள்
மாணவர்களுக்குக் கல்வி தொடர்பாக உதவ சுயம் பிரபா டி.டி.எச் சேனல் தொடங்கப்பட்டு இருக்கிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு இது உதவும் என்றார் நிர்மலா சீதாராமன்.

பட மூலாதாரம், Getty Images
அதில் புதிதாக 12 சேனல்கள் சேர்க்கப்பட இருக்கிறது என்றும் கூறினார்.
அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையம். பொது சுகாதார ஆய்வு மையங்களை அனைத்து வட்ட அளவிலும் அமைக்கப்படும்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக 61000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது கூடுதலாக 40000 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
பொது சுகாதார ஆய்வகங்கள் வட்ட அளவில் அமைக்கப்படும். தொற்று நோய் தடுப்பு மையங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளைக் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்
"தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஏற்கனவே ரூ. 61,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ரூ. 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
சுகாதாரம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுநோய் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். வட்டார அளவில் பொது சுகாதார மையங்கள் அமைக்கப்படும். இதற்காக சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்
கல்வி
'ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்' என்பதன் அடிப்படையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படுகிறது. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 'இ-வித்யா' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும். மே 30 ஆம் தேதி முதல் 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கென மின்- பாடங்கள் உருவாக்கப்படும்.
மே 30 ஆம் தேதி முதல் 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
திவாலாகும் நிறுவனங்கள்
நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் காலம் 6 மாதத்திலிருந்து ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நிறுவன விதிமுறை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன.
கம்பெனி சட்டம்
கம்பெனி சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஏதேனும் விதிமுறை மீறல் செய்திருந்தால் அது குற்றமாகப் பார்க்கப்படாது.
பாதிக்கப்பட்டவர்கள் சமரசத்திற்கு முற்படும் சட்டமான கம்பௌண்டபிள் குற்றங்களில் 7 குற்றங்களை நீக்கி அவற்றில் 5 குற்றங்களுக்கு வேறு விதமான கட்டமைப்புக்குள் கொண்டு வரவுள்ளனர்.
பொதுத் துறை நிறுவனம் தொடர்பாக
ஆத்ம நிர்பார் திட்டத்திற்கு ஒத்திசைவான கொள்கைகள் தேவை. அனைத்து துறைகளிலும் தனியார் அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரம் பிதுத்துறை நிறுவனங்கள் எப்போதும் போல இயங்கும்,.
பொதுத் துறை நிறுவனங்கள் இருந்தாக வேண்டிய, வியூக முக்கியத்துவமுள்ள துறைகளின் பட்டியல்அறிவிக்கப்படும்.
வியூக முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஒரு பொதுத் துறை நிறுவனமாவது இயங்கும். தனியார் துறையும் அனுமதிக்கப்படும்.
மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும் என்றா நிதியமைச்சர்.
தொழில்துறைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படுகிறது. சிறு, குறு தொழில்துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படும்.
கடன் வரம்பு அதிகரிப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மாநிலங்களுக்கான கடன் வரம்பு 3% ஆக இருந்த நிலையில் 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை உலக நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.
வரி பங்கீடு
"கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிப்பங்கீடு ரூ.46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி மற்றும் மாநில பேரிடர் நிதியாக ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சுகாதாரத்துறையில் இருந்து ரூ.4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கடந்த செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை கடந்த மூன்று நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வந்தார்.
அதாவது, கடந்த 13ஆம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துபவர்கள் உள்ளிடவர்களுக்கான 15 அம்ச திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 வகை திட்டங்கள் குறித்து அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) தொடர்ந்து நான்காவது நாளாக செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டதே தவிர இந்தியா தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் திட்டமல்ல" என்று கூறினார்.
"இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்கவே பிரதமர் முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். நேரடி மானியத் திட்டம், ஜிஎஸ்டி போன்றவை இதில் குறிப்பிடத்தக்க திட்டங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
இன்று விண்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி, அணுசக்தி, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட எட்டு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த அறிவிப்புகள் குறித்த முக்கிய விவரங்களை தொகுத்தளிக்கிறோம்.
நிலக்கரி:
நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற திட்டம். இதற்காக, நிலக்கரித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மேலும், நிலக்கரித்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க திட்டம். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
கனிமங்கள்:
கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.
சுரங்கத் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி.
ராணுவத் தளவாட உற்பத்தி:
ராணுவத் தளவாட உற்பத்தித்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு. அதே சமயத்தில், குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும்.
உள்நாட்டிலுள்ள ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.
விமானப் போக்குவரத்து:
இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். மேலும், இந்தியாவிலுள்ள மேலும் ஆறு விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுபோன்ற சீர்திருத்தங்களின் மூலம் விமானங்களை இயக்குவதற்கான செலவை 1000 கோடி ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் விமான பயணத்திற்கான கட்டணங்கள் குறையும்.
யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு:
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம், புதுச்சேரி உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது.
விண்வெளித்துறை:
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.
இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
அணுசக்தித்துறை:
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும்.
உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்
இதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாகவும், மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்களை உருவாக்குவதில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












