விஜய், அன்புச்செழியன் இடங்களில் வருமான வரி சோதனை: 'ரூ.65 கோடி பறிமுதல்'

விஜய் வீட்டில் இரண்டாவது நாளாகத் தொடரும் வருமான வரித்துறையின் சோதனை

பட மூலாதாரம், BIGIL TEASER

நடிகர் விஜயின் வீட்டில் புதன்கிழமையன்று துவங்கிய சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தொடர்பான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

News image

விஜய் மற்றும் ஃபைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், விஜயின் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சுமார் 65 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் சிக்கியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

நேற்று காலையிலேயே ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான இடங்கள், ஃபைனான்சியர் அன்புச்செழியன் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் மாஸ்டர் படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்குள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

பிற்பகல் இரண்டு மணியளவில் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜயிடம் அவரை விசாரிப்பதற்கான சம்மனை அளித்தனர்.

இதற்குப் பிறகு அவரை தங்கள் காரிலேயே நெய்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

வருமான வரித்துறையினரின் வாகனத்திலேயே சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார் விஜய். நேற்று இரவு முதல் தற்போதுவரை அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம், வசூல் ரீதியாக சாதனை படைத்ததாக ஜனவரி 29ஆம் தேதி ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவான அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்த ஆண்டில் தமிழ் சினிமாவிலேயே அதிக தொகையை வசூலித்த படம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: