ஆடம்பர கார் உரிமையாளருக்கு ரூ.27 லட்சம் அபராதம் விதித்த அதிகாரி

AhmedabadPolice

பட மூலாதாரம், AhmedabadPolice

ஜெர்மனில் உற்பத்தி செய்யப்படும் மிக விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றுக்கு, குஜராத் போக்குவரத்து ஆணையர் சுமார் 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்த சம்பவம் பலரது புருவங்களையும் ஆச்சரியத்தில் உயர்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம், வடக்கு அகமதாபாத்தில் போலீஸார் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத விலையுயர்ந்த போர்ஷ 911 காரை நிறுத்தி சோதித்துள்ளனர்.

ஆனால், கார் ஓட்டுநரிடம் தக்க ஆவணங்கள் இல்லாததால் காரை பறிமுதல் செய்த போலீஸார், 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தொடர்ந்து, இந்த தகவலை #Rules4All என்ற ஹாஷ்டேக்கை பதிந்து தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அகமதாபாத் போலீஸார் பதிந்திருந்தனர்.

AhmedabadPolice

பட மூலாதாரம், Ahmedabad Police

போலீஸாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் (புதன்கிழமை) மற்றொரு ட்வீட்டை பகிர்ந்திருந்த அகமதாபாத் போலீஸார், குஜராத் போக்குவரத்து ஆணையர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட காருக்கு 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக பதிவிட்டிருந்தனர்.

AhmedabadPolice

பட மூலாதாரம், Twitter

மேலும், இந்தியாவிலேயே விதிக்கப்பட்ட அதிக அபராத தொகையில் இதுவும் ஒன்று என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

போர்ஷ 911 மாடலின் இந்திய மதிப்பு சுமார் 2.15 கோடி ரூபாய். இந்த காருக்கான இன்ஷுரன்ஸ் தொகை மட்டுமே சுமார் 8 லட்ச ரூபாய்க்கும் அதிகம்.

காரின் உரிமையாளர் ரஞ்சித் தேசாய் போக்குவரத்து துறை விதித்த 27.68 லட்சம் ரூபாய் அபராத தொகையை கட்டிவிட்டு காரை எடுத்து சென்றதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: