அயோத்தி தீர்ப்பு ஒரு புதிய தொடக்கம்- இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், narendramodi
வேற்றுமையில் ஒற்றுமையே நாட்டின் தாரக மந்திரம். அயோத்தி தீர்ப்பை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நேரலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"அயோத்தி வழக்கின் தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் முழு மனதுடன் ஏற்றுகொண்டனர். இதுவே இந்தியாவின் கலாசாரத்தை காட்டுகிறது. இன்று அனைவரும் ஒற்றுமையாக இருந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றோம். பல வருடங்களுக்கு பிறகு வருபவர்களுக்கு இந்த தினம் இந்தியாவின் தலையாய கொள்கையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு எடுத்துகாட்டாக அமைந்த தினம்" என்று தெரியும்.
பெர்லின் சுவர்
"நவம்பர் 9 ஆன இன்று பெர்லின் சுவர் இடிந்தது. வேறுபட்ட இரு தரப்பினர் ஒன்றாக இணைந்தனர். இதே நாளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையை இணைக்கும் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் நன்மையே. அதேபோல் இந்த நாளில் வெளிவந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்தியர்களின் ஒற்றுமையைக் காட்டியுள்ளது. இதனால் இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேற முடியும் என்பதை காட்டுகிறது." என்றார்.
நம்பிக்கை
"எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் சரி சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்படும் என இந்த வழக்கு காட்டியுள்ளது.
சிறிது தாமதமானாலும் வழக்கின் தீர்ப்பு சட்டத்தின் பார்வையிலேயே வழங்கப்படும் எனக் காட்டியுள்ளது.
இதனால் மக்களுக்கு நீதிமன்றத்தின்மேல் நம்பிக்கை பிறந்துள்ளது." என்றார்
புதிய இந்தியா
"ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம். ஒரு புதிய தொடக்கத்தை தொடங்குவோம். இந்தியர்களின் கடமை இப்போது முன்பைவிட அதிகமாகியுள்ளது. சட்டத்தை மதித்து எந்த செயலையும் அவர்கள் செய்ய வேண்டும்.இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து முன்னேற வேண்டும். உச்ச நீதிமன்றம் கோயில் கட்ட அனுமதி அளித்துவிட்டது.
அதேபோல் இந்த நாட்டின் கட்டுமானமானது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இந்தியர்களின் ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. இதன்பின் உள்ள லட்சியங்கள், சவால்கள் அனைத்தையும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாம் அடைய முடியும்" எனக் கூறினார்.
நாட்டு மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகளையும் மோதி பகிர்ந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












