அயோத்தி: 'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம்; முஸ்லிம்களுக்கு மாற்று இடம்'

மசூதி கட்டவேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர வேண்டும். சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'கோயில் கட்ட தயார் நிலையில் உள்ளோம்'

    அயோத்தி கோயில் கட்டுவதற்காக தூண்கள்,உத்திரம் ஆகியவை 60 சதவீதம் தயாராக உள்ளதாக வி.எச்.பி செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. அயோத்தி வழக்கின் பின்னணியும் தீர்ப்பு விவரங்களும்

    பல ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த அயோத்தி நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்புக்கு சொந்தம் என்றும், மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    அயோத்தி பிரச்சனையின் மூலம், வழக்கின் பின்னணி, தீர்ப்பு விவரங்கள், அதற்கு தலைவர்கள் மற்றும் அமைப்புகள் ஆற்றியுள்ள எதிர்வினை ஆகியவற்றின் முழு தொகுப்பு இந்தப் பக்கத்தில் உள்ளது.

    அயோத்தி நிலத் தகராறு தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு
  3. 'தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரமாட்டோம்' - உத்தரப்பிரதேச சுன்னி வக்ஃப் வாரியம்

    அயோத்தி நிலத் தகராறு தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தங்கள் தரப்பு எந்த விதமான மறு ஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்யப் போவதில்லை என்று உத்தரப்பிரதேச மாநில சுன்னி மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

    வேறு எந்த தனி நபரோ, வழக்கறிஞரோ, அமைப்போ உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தால் அது தங்கள் நிலைப்பாடு இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் 2010இல் வழங்கிய தீர்ப்பில், வழிபாட்டுக்குரிய இடங்கள் சட்டத்தின் சரத்துகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தெரிவித்த கருத்துகளை, தங்கள் கருத்தில் கொள்ளாமல் வைத்ததற்காக அவர் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  4. பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால்?

    பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

    உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களில் உச்சமானதுதான். ஆனால், அங்கு தவறு நடக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது என்று அயோத்தி தீர்ப்பை அவர் விமர்சித்துள்ளார்.

    தீர்ப்பு குறித்த தனது திருப்தியின்மையை வெளிப்படுத்த தமக்கு உரிமையுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  5. தீர்ப்பை வரவேற்கும் நடிகர் ரஜினிகாந்த்

    உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் வேறுபாடுஇல்லாமல் ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடவேண்டும்.

  6. அயோத்தியில் பாதுகாப்பு சோதனைகள்

    பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், 144 தடை உத்தரவு அமலில் உள்ள அயோத்தியின் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

    அயோத்தியில் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு சோதனைகள் நடந்து வருகின்றன.

    அயோத்தி
  7. 'யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல' - ஆர்.எஸ்.எஸ்

    பல பத்தாண்டுகளாக தொடர்ந்த இந்த வழக்கு சரியான முடிவை எட்டியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    இது யாருக்கும் வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கப்படக் கூடாது என்றும் சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட யார் முயற்சி எடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

    அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் என நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

    ''நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்,'' என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், mk stalin facebook page

  9. அயோத்தி தீர்ப்பு: நரேந்திர மோதி கருத்து

    பல பத்தாண்டுகளாக நிலவிய பிரச்சனையை உச்ச நீதிமன்றம் சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது.

    இது நீதிமன்ற நடவடிக்கைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    அயோத்தி தீர்ப்பு: நரேந்திர மோதி கருத்து

    பட மூலாதாரம், Getty Images

  10. ராம் பக்தி, ரஹீம் பக்தி, தேச பக்தி: நரேந்திர மோதி

    ''ராம் பக்தியோ ரஹீம் பக்தியோ, நாம் அனைவரும் தேசம் மீதான பக்தி உணர்வை வலிமைப்படுத்த வேண்டிய சமயம் இது'' என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சட்டவழிமுறைகள் ஏன் பின்பற்றப்படவேண்டும் என்பதை இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனைத்து தரப்புக்கும் போதுமான வாய்ப்பும் நேரமும் வழங்கப்பட்டது என்று இன்னொரு ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. "ஒரே இந்தியா - உயர்ந்த இந்தியா"

    இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அனைத்து மத மக்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, "ஒரே இந்தியா - உயர்ந்த இந்தியா" எனும் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. தொல்.திருமாவளவன் அறிக்கை

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின் அடிபடையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரியவில்லை, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

  13. காந்தி கொள்ளுப்பேரன் எள்ளல்

    "காந்தி கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்திருந்தால், நாதுராம் கோட்சேதான் கொலையாளி; ஆனால் அவர் ஒரு தேச பக்தர் என்று தீர்ப்பு வந்திருக்கும்," என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி ட்விட்டரில் எள்ளலாகப் பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. காங்கிரஸ் கட்சி கூறுவது என்ன?

    இந்தத் தீர்ப்பு கோயில் கட்டுவதற்கான கதவுகளைத் திறந்துள்ளதுடன், பாஜக மற்றும் பிறர் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்கான கதவுகளை மூடியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. முஸ்லிம் மனுதாரர் கருத்து

    சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடந்ததை ஒப்புக்கொண்டு, அங்கு 1949இல் ராமர் சிலை உள்ளே வைக்கட்டது சட்டவிரோதம் என்றும் முழு இடத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பது நியாயமல்ல என்று மனுதாரர்களில் ஒருவரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினருமான சர்ஃப்ராயப் கூறியுள்ளார்.

  16. நன்றி தெரிவிக்கும் நிர்மோகி அகாரா

    மத்திய அரசு விரும்பினால் அறக்கட்டளையில் நிர்மோகி அகாரா அமைப்பை சேர்த்து கொள்ளலாம் என்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

    எங்களது 150 ஆண்டு சட்டப்போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கு உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளதாக நிர்மோகி அகாரா தெரிவித்துள்ளது.

    நிர்மோகி அகாரா என்பது வைணவ மரபை பின்பற்றும் ஒரு இந்து துறவிகள் குழுவாகும்.

    நிர்மோஹி அகாரா
  17. பத்திரிகையாளர் பகுதியில் கொண்டாட்டம்

    அயோத்தி தீர்ப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட உத்தரவுகள், அறிவிக்கைகளை மீறி உச்சநீதிமன்றத்தின் பத்திரிகையாளர் பகுதியில் கொண்டாட்டம் வெடித்தது. இது தெளிவான சட்டமீறல் என்கிறார் உச்சநீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி.

  18. இஸ்லாமிய தரப்பு என்ன சொல்கிறது?

    "தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு முழுவதையும் கவனத்தோடு படித்த பிறகு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்" என்று சுன்னி வக்ஃப் வாரிய மூத்த வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜிலானி தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் அவர் கூறினார்.

  19. பாகிஸ்தான் அமைச்சர் விமர்சனம்

    'வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது' என்று பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் ஹுசைன் ட்விட்டரில் அயோத்தி தீர்ப்பை விமர்சித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. 'கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்க வேண்டும்'

    மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும்.

    முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும்.

    கோயில் கட்டுவதற்கு 3 - 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

    உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.