நட்டாஷா நோயல்: சிறு வயதிலிருந்து தொடர்ந்த மன அழுத்தத்திலிருந்து மீண்ட கதை #100women

Natasha
படக்குறிப்பு, நட்டாஷா

"நான் மூன்றரை வயதில் இருந்தபோது, என்னை பெற்றெடுத்த தாய் என் கண் முன்னே தன்னை தானே எரித்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எனது ஏழு வயதில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்." என்கிறார் இந்த வருடம் (2019) பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள யோகா நிபுணர் நடாஷா நோயல்.

இன்று அனைவருக்கும் உற்சாகமளிக்கக்கூடிய ஒரு நேர்மறையான பெண்ணாக இருக்கும் நட்டாஷா, தனது கடந்த காலத்துயரத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து பகிர்ந்துகொள்கிறார்.

உங்கள் குழந்தைப்பருவம் அன்பு, மகிழ்ச்சி மற்றும் கருணை உணர்வு வேரூன்றி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் எனது குழந்தை பருவம் மிகவும் குற்ற உணர்ச்சியுடனும் வேதனையுடனும் வெற்றிடம் அதிகரித்தபடியும் இருந்தது.

எனது வாழ்நாள் முழுவதும் என் உடலை வெறுத்தேன். என் உடல் இருக்கும் விதம், நான் இருந்த விதம் எனக்கு நேர்ந்த அனைத்திற்கும் என்னை நானே குற்றம்சாட்டிக் கொண்டே இருந்தேன்.

நான் என்மேல் அன்புவைக்காமல் மற்றவர்களுக்கு என் அன்பைக் கொடுப்பதில் மிகச்சிறந்தவளாக இருந்தேன், ஏனென்றால் நான் யாரிடமும் உரையாற்றாமல் இருந்ததால் என்னுளே குழப்பம் இருக்கிறது என்பதை நான் ஒருபோதும் உணரவில்லை.

நான் மது அருந்தினேன், புகை பிடித்தேன். எனக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களைப் பயன்படுத்துகிறேன் என்பதைப் உணர்ந்தவுடன் அவற்றை நிறுத்த விரும்பினேன்.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

நான் யோகா செய்ய துவங்கிய பிறகு, கடந்த ஐந்து வருடங்களாக முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் நல்ல நிலைமையில் இருக்கிறேன்.

உடல் ரீதியாக யோகா செய்ய முடியுமானால் மனதளவிலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.

நான் எப்படிப்பட்டவளோ, அப்படியே என்னை ஏற்றுக்கொண்டேன். எனக்கு மன்னிப்பதில் நம்பிக்கை உண்டு. உங்களிடம் ஒரு சூடான தடி இருந்தால், நீங்கள் அந்த சூடான தடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தான் எரிக்கப்படுகிறீர்கள், வேறு யாரும் இல்லை. இதைத்தான் கோபம் செய்கிறது என நம்புகிறேன்.

சிறிது காலம் ஆனது, ஆனால் நான் என்னை மன்னிக்க ஆரம்பித்ததும், யாரையும் பழிவாங்கவேண்டாம் என முடிவுசெய்தேன். யார் மீதும் கோபப்படவும் விரும்பவில்லை.

யாரவது அவமானம் அதிர்ச்சி குறித்து பேசினார்கள் என்றால் அதிலிருந்து வெளிவர விரும்பியனால் உண்மையில் அவர்கள் தான் அதிலிருந்து வெளிவர வேண்டும். வேறு யாரும் உதவ முடியாது.

நடாஷா நோயல்

பட மூலாதாரம், Natasha Noel/Facebook

அடுத்த விஷயம் என்னவென்றால் நல்ல சிகிச்சையாளரை கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும், உங்களை குறித்து தவறான முடிவுக்கு வராத ஒரு நபரை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் படிக்கும்போதும் யூ டியூப் வீடியோக்கள் பார்க்கும்போது ஊக்கமளிக்கும் பேசிச்சுகளை கேட்கும்போதும் உண்மையான வாழ்க்கை கதைகளை கேட்கும்போதும் , தன்னார்வ தொண்டுகள் செய்யும்போதும் நீங்கள் எங்கு இருந்தாலும், எப்போதும் உங்களை பற்றி சிந்திக்காமல் பிறரிடம் பணிவாக நடந்துக்கொள்வீர்கள்.

எனக்குத் தெரியாது, ஆனால் இந்த சமுதாயம் முன்னேற்றம் அடையும் என்பதை காண முடிகிறது. தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படும் நபர்கள் வேண்டும் என்று சொல்ல முடியும். அது குறித்து எதாவது செய்ய முடியும். தவறாக அடுத்தவர்களை துஷ்பிரயோகம் செய்யும் நபர்களும் அது தவறு என்று அறிவார்கள், அல்லது அதை செய்ய விரும்ப மாட்டார்கள்.

அவ்வாறு இந்த சமூகம் மாறும்.

இந்த உலகில் நீங்கள் செய்யகூடிய ஒரே விஷயம் உங்களை மேம்படுத்தி கொள்வது. எனவே எந்த சூழ்நிலையில் எங்கிருந்தாலும் பரவாயில்லை நீங்கள் முயற்சி செய்து உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உங்களை ஒரு பெட்டியில் பொருத்திக் கொள்ளக்கூடாது. ஆமாம், பிழைத்து கொள்வது மிகவும் நல்லது, எல்லோரும் உங்களைப் பாராட்டுவார்கள், ஆனால் நீங்கள் பிழைத்தால் மற்றும் போதாது வாழ வேண்டும் என விரும்புகிறேன்.

இப்போது யோகா மூலமாகவும், தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலமாகவும் நட்டாஷா மற்றவர்களுக்கு உதவியும், ஊக்கமும் அளிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :