சீன மொழியில் ட்ரெண்டாகும் gobackmodi : ’ஷி ஜின்பிங்கை வரவேற்போம்; மோதியை எதிர்ப்போம்’

பட மூலாதாரம், ARUN SANKAR
இன்று (வெள்ளிக்கிழமை) சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் சூழலில், மீண்டும் #gobackmodi இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.
சீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகி வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3

X பதிவின் முடிவு, 4
Gobackmodi என்பது நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது இரண்டு மணி நேரமாக tnwelcomesmodi என்பதும் ட்ரண்டாகி வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
தமிழகத்தில் எதிர்ப்பு
பொதுவாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகைதரும்போதெல்லாம் gobackmodi என்பது ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். அதற்கு பதிலடியாக tnwelcomesmodi என்பதும் ட்ரெண்டாகும்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய சமயத்தில் மோதி இந்தியா வந்திருந்தபோதும் இந்த ஹாஷ்டேக்குகள் டிரண்டானது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது சுமார் 10,000 ட்வீட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi மதியத்திற்கு பிறகு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
தற்போதுவரை gobackmodi ட்ரெண்ட் ஆகி வந்தாலும், முன்பு இருந்ததுபோல தீவிர எதிர்ப்புகளை காணமுடிவதில்லை.
முன்னதாக, மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்து அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாமல்லபுரத்துக்கு வரும் சீன அதிபரை தான் வரவேற்பதாக தெரிவித்தார்.
ஸ்டாலினின் இந்த அறிக்கைக்கு பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபருக்கு வரவேற்பு
Go back modi என்ற ஹாஷ்டேகில் பதியப்பட்ட ட்வீட்டுகளில் சில நாங்கள் goback modi என்று பதிவிட்டாலும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஷி ஜின்பிங் மற்றும் மோதி சந்திப்பு
சீன அதிபர் ஷி ஜிங்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இந்த பயணத்தின்போது சீன அதிபர் மாமல்லபுரத்தையும் சுற்றிப்பார்க்கவிருக்கிறார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு காரணமாக சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 காவலர்கள் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்