சைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் - இப்படியும் வருகிறது ஆபத்து மற்றும் பிற செய்திகள்

ஜப்பானில் பாப் பாடகி ஒருவர் பதிவிட்ட புகைப்படம் மூலம் அவரை தொடர்ந்து சென்று பாலியல் தாக்குதல் தொடுத்தாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
அந்த பாடகி இணையத்தில் பதிவிட்ட செல்ஃபி புகைப்படத்தின் ஊடாக அவரின் கண்ணில் தெரிந்த ரயில் நிலையத்தில் அடையாளம் கண்டு கொண்டதாக அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இந்த வழக்கு சைபர் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புயிள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஹிபிகி சாட்டோ என்னும் அந்த நபர், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அந்த ரயில் நிலையத்தில் காத்திருந்து அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அதன்பின் கைது செய்யப்பட்ட அந்நபர், உள்ளூர் ஊடகத்தில் புகழ்பெற்ற அந்த பெண்ணின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் புகைப்படத்தில் தெரிந்த ரயில் நிலையத்தை அந்நபர் கூகுள் ஸ்டீரிட் வியூ மூலம் கண்டுபிடித்துள்ளார்.
மேலும் அந்த பெண் பதிவிட்ட வீடியோக்களில் மூலம் அந்த பெண்ணின் வீட்டில் உள்ள திரை மற்றும் வெளிச்சம் வரும் திசை ஆகியவற்றையும் அந்த நபர் கவனித்துள்ளார்.
இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நமது புகைப்படத்தில் உள்ள சிறிய தொரு விஷயம்கூட நமது இருப்பிட்த்தை தெளிவாக சொல்லிவிடும். மேலும் அதிக ரிசெல்யூஷன் கொண்ட புகைப்படங்களை பதியும்போது அதன்மூலம் தொழில்நுட்ப வசதியோடு உங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்ளக் கூடும் என இணைய ஆய்வுநுட்பங்கள் குறித்தான வலைதளமான பெல்லிங்கேட்டின் நிறுவனர் எலியட் ஹிக்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"எனவே யாருக்கும் தெரியவேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் குறித்து இணையத்தில் பதிவிடாதீர்கள்; தனிப்பட்ட இணைய சேவைகள்கூட சில நேரத்தில் ஆபத்தில் முடியலாம்." என்கிறார் எலியட்.

காஷ்மீர் முடக்கம் பொருளாதாரத்தை நெரிப்பதால் தீவிரமாகும் சோகங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் முடக்கப்பட்ட நிலை காரணமாக அந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரம் இரண்டு மாதங்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிபிசி இந்தி பிரிவின் வினீத் கரே அளிக்கும் செய்தி.
அரசு அதிகாரிகளிடம் இருந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் ``பாதுகாப்பு அறிவுறுத்தல்'' வந்தது முஸ்தாக் சாய் -க்கு நினைவிருக்கிறது. உள்ளூரில் குறிப்பிடத்தக்க வணிகராக இருக்கும் அவருக்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்திய நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீர் பகுதியில் பல ஹோட்டல்கள் உள்ளன.
``பயங்கரவாத அச்சுறுத்தல்'' இருப்பதாக கூறி, சுற்றுலாப் பயணிகளும், இந்து புனித யாத்ரிகர்களும் ``தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு கூடிய சீக்கிரம் வெளியேற வேண்டும்'' என்று அந்த அறிவுறுத்தல் இருந்தது என்று முஸ்தாக் தெரிவிக்கிறார்.

சிரியா மீது துருக்கி தாக்குதல்: எதிர்ப்பு தெரிவிக்கிறது இந்தியா
வடக்கு சிரியாவில் குர்து கிளர்ச்சியார்களுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் அறிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலால் தாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு சிரியாவில் துருக்கி மேற்கொண்டுள்ள தன்னிச்சையான ராணுவத் தாக்குதல் ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.
துருக்கியின் நடவடிக்கை, பிராந்திய ஸ்திரத் தன்மையிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். துருக்கியின் நடவடிக்கையால் மனிதாபிமான, சிவிலியன் நெருக்கடி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சிரியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் துருக்கி மதிக்கவேண்டும்.
எல்லா பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஷி ஜின்-பிங் - மோதி சந்திப்பு: மாமல்லபுரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?

பட மூலாதாரம், POOL
சீன அதிபர் ஷி ஜின்-பிங் சென்னைக்கு வருவதையொட்டி சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகைக்கான ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
சீன அதிபர் ஷி ஜின்-பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமையன்று சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்லும் ஷி ஜின்-பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாமல்லபுரத்திற்குச் செல்லும் வழியில் 34 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது.

வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியின் முதல் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், VILLAGE FOOD FACTORY
'டாடி' ஆறுமுகம் என்பது வெறும் சொல் அல்ல எமோஷன்.
டாடி ஆறுமுகம் - 30 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனலின் கதாநாயகன்.
இளைஞர்கள் கோலோச்சும் யு-டியூபில் ஹிட்டடிக்கும் 60 வயது தாத்தா.
தொடர் தோல்வி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகத்திடம் யாராவது, "நீங்கள் உச்சங்களை தொட போகிறீர்கள். இளைஞர்கள் உங்களைக் கொண்டாடப் போகிறார்கள்." என்று சொன்னால் சிரித்திருப்பார். இப்படிச் சொல்பவர் தம்மைக் கிண்டல் செய்வதாக நினைத்து கோபமும் கூடப்பட்டிருப்பார்.
ஆனால், இதுதான் நடந்தது.
காலம் எப்போதும் அடுத்த கணத்தில் ஏதோவொரு பெரிய ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கிறது தானே? அப்படியான அற்புதத்தைதான் டாடி ஆறுமுகத்திற்கு ஒளித்து வைத்திருந்திருக்கிறது.
மேலும் படிக்க: ‘காண்ட்ராக்டர்’ ஆறுமுகம் ‘டாடி’ ஆறுமுகம் ஆன கதை

மனோரமாவை ஜெயலலிதாவுக்கு பிடித்துப்போனது ஏன்?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












