"கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை" - உலக அணுசக்தி தொழில் அமைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை" - உலக அணுசக்தி தொழில் அமைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழுஅளவில் மின் உற்பத்தி நடைபெறவில்லை என்று உலக அணுசக்தி தொழில் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அணு உலைகள், அணு ஆராய்ச்சி, அணு உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை கண்காணித்து வரும் அமைப்பு உலக அணுசக்தி தொழில் அமைப்பு (WNISR) 2019-ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் முறையாக செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகளின் செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளது.

முதல் அலகானது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 54 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது அலகு ஒட்டுமொத்த மின்னுற்பத்தி திறனில் 35.2 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமல்லாது, கூடங்குளத்தில் 2 அலகுகள் உள்ளபோதும் 2018ல் ஒரு நேரத்தில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கூடங்குளம் அணு உலையில், மின் உற்பத்தி மேலும் குறையக்கூடும் எனவும் உலக அணுசக்தி தொழில் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலையில் மாற்று சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: "பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு"

சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்போது, கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் பாண்டியர்களின் காலத்தை சேர்ந்த பழமையான 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் தலைவர் யார்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @NARENDRAMODI / TWITTER

படக்குறிப்பு, நரேந்திர மோதி

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோதி முதலிடத்தை பிடித்துள்ளார். சர்வதேச அளவில் அவர் 6-ம் இடத்தில் உள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த 'YouGov' என்ற நிறுவனம் சர்வதேச அளவில் மக்களால் அதிகம் விரும்பப்படும் தலைவர்கள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட 41 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவில், சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நடிகர் ஜாக்கி சான், சீன அதிபர் ஷி ஜின்பிங், அலிபாபா நிறுவனர் ஜாக் மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி 6-வது இடத்தில் உள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :