Jio GigaFiber - எவ்வளவு பணம் செலுத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கிகா ஃபைபர் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
Jio GigaFiber எனும் பெயரில் கண்ணாடி ஒளி இழை (Optical Fiber) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அகண்ட அலைவரிசை (Broadband) சேவையின் வணிகரீதியிலான திட்டத்தை அறிவித்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ.
கட்டணம் எவ்வளவு ?
மாதாந்திர மற்றும் வருடாந்திர கட்டணம் குறித்த விவரங்களை நேற்று வெளியிட்டது ஜியோ நிறுவனம். அவ்வறிக்கையின்படி, ஜியோ ஃபைபர் அதிவேக அகண்ட அலைவரிசை, தொலைக்காட்சி, வீடியோ அழைப்பு மற்றும் கான்பிரன்ஸிங், பொழுபோக்குகான செயலிகள், விளையாட்டு, ஹோம் நெட்வொர்க்கிங் எனப்படும் ஒரே வீட்டில் இருக்கும் பல மின்னணு சாதனங்களை இணையம் மூலம் இணைப்பது, மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) அனுபவங்கள், மின்னணு சாதனத்தின் பாதுகாப்பு ஆகிய சேவைகளை வழங்குகிறது.
மாதக் கட்டணம் ரூபாய் 699ல் தொடங்கி ரூபாய் 8,499 வரை ப்ரான்ஸ், சில்வர், கோல்ட், டைமண்ட், ப்ளாட்டினம், டைட்டானியம் என மொத்தம் ஆறு திட்டங்களாக உள்ளன்.
இதில் குறைந்த சந்தாவிலிருந்து 100 mpbs டேட்டா வேகத்தை பெற முடியும். அதிக தொகை செலுத்தினால் 1 gbps வேகம் வரை பெற முடியும்.
இது மட்டுமல்லாமல் 3 , 6 மாதங்களுக்கான திட்டங்கள் மற்றும் வருடாந்திர திட்டங்கள் ஆகியவையும் உள்ளன. இது தவிர இணைப்பைப் பெறும்போது ஒரு முறை செலுத்தும் வைப்பு தொகையாக 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் இணைப்பை நிறுவுவதற்கான கட்டணமும் அடக்கம். வருடாந்திர சேவைக்காக வங்கியிலிருந்து EMI வசதியும் அளிக்கிறது ஜியோ.

பட மூலாதாரம், Getty Images
வாடிக்கையாளர்களை கவர வருடாந்திர சந்தாதாரர்களுக்கு ஜியோ ஹோம் கேட்வே, செட்-டாப் பாக்ஸ், தொலைக்காட்சி (கோல்ட் மற்றும் அதற்கு மேலான திட்டங்களில்), செயலிகளுக்கான சந்தா மற்றும் வரையறையற்ற டேட்டா மற்றும் அழைப்புகள் ஆகியவை வழங்குகின்றன.
ஆப்டிக்கல் ஃபைபர் டெக்னாலஜி
கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று பயன்படுத்த உதவுவது ஆப்டிகல் ஃபைபர் டெக்னாலஜி. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிப்பலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன.
ஜியோகிகா ஃபைபர்
100 Mbps டேட்டா வேகத்தை இதன் அனைத்து பயனர்களும் பெற முடியும். மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு ஜிபி அளவுடைய ஒரு படத்தை ஜியோகிகா ஃபைபர் பயன்படுத்துவோர் அதிகப்பட்சமாக பத்து நிமிடத்தில் தரவிறக்கம் செய்துவிட முடியும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஜியோ சில ப்ளான்களை வழங்குகிறது. குறிப்பிட்ட அந்த ப்ளான்களுக்கு சந்தா கட்டி இருப்போர், 1gbps சேவையை பெற முடியும். குறிப்பாக லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்கு பயன்படும்
ஜியோ கிகா ஃபைபர் பெற எவ்வளவு கட்டணம்?
முதலில் வைப்பு தொகையாக ரூபாய் 2500 செலுத்த வேண்டும். வைஃபை ரூடர் வழங்கப்படும். அறிமுக சலுகையாக ஹெச்.டி தொலைக்காட்சியை இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.
எப்படி வாங்குவது?
https://gigafiber.jio.com/registration என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே முதலில் இந்த சேவை வழங்கப்படும். பின்பு, இந்த சேவை படிப்படியாக அனைத்து ஊர்களுக்கும் விரிவாக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












