Jio Giga Fiber எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்? - ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
ஜியோ கிகா ஃபைபரை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் உண்மையில் மிகப்பெரிய புரட்சி என்று கூறும் தொலைத்தொடர்பு வல்லுநர்கள், இது புதிய வாய்ப்புகளுக்கு திறவுகோலாக அமையும் என்கிறார்கள்.
மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சரி. ஜியோ கிகா ஃபைபர் என்றால் என்ன? இது இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் எத்தகைய தாக்கம் செலுத்தும்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, அடிப்படையாக ஆப்டிக்கல் ஃபைபர் டெக்னாலஜி குறித்து பார்ப்போம்.
ஆப்டிக்கல் ஃபைபர் டெக்னாலஜி
கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று பயன்படுத்த உதவுவது ஆப்டிகல் ஃபைபர் டெக்னாலஜி. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிப்பலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஜியோகிகா ஃபைபர்
100 Mbps டேட்டா வேகத்தை இதன் அனைத்து பயனர்களும் பெற முடியும். மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு ஜிபி அளவுடைய ஒரு படத்தை ஜியோகிகா ஃபைபர் பயன்படுத்துவோர் அதிகப்பட்சமாக பத்து நிமிடத்தில் தரவிறக்கம் செய்துவிட முடியும். ஜியோ சில ப்ளான்களை வழங்குகிறது. குறிப்பிட்ட அந்த ப்ளான்களுக்கு சந்தா கட்டி இருப்போர், 1gbps சேவையை பெற முடியும். குறிப்பாக லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்கு பயன்படும்.
இது குறித்து விளக்கும் தொழில்நுட்ப வல்லுநர் செல்வமுரளி, "ஜியோ சந்தைக்கு வருவதற்கு முன்பு நிலைமை எவ்வாறாக இருந்தது. அனைவரும் கட்டுரைகளைத்தானே படித்தோம். அதாவது டெக்ஸ்டுகளைதான் (Text) பார்த்து, படித்து, பகிர்ந்து வந்தோம். ஜியோ வந்தப் பின் டேட்டா குறித்து கவலைப்படாமல் வீடியோக்களை அதிகம் நுகர தொடங்கினோம். அது கைப்பேசியில் ஒரு பெரும் புரட்சியை நிகழ்த்தியது என்றால், இப்போது நிகழ்ந்திருப்பது அடுத்தக்கட்ட பாய்ச்சல். அதாவது சர்வ சாதாரணமாக ஓவர் தி டாப் மீடியா வழியாக தொலைக்காட்சிகளில் நாம் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸை லைவ் ஸ்ட்ரீம் செய்வோம். இது நாம் தொலைக்காட்சி பார்க்கும் நம் பழக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்த இருக்கிறது" என்கிறார்.
ஜியோகிகா ஃபைபர் பெற எவ்வளவு கட்டணம்?
முதலில் வைப்பு தொகையாக ரூபாய் 2500 செலுத்த வேண்டும். வைஃபை ரூடர் வழங்கப்படும். அறிமுக சலுகையாக ஹெச்.டி தொலைக்காட்சியை இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.
எப்படி வாங்குவது?
https://gigafiber.jio.com/registration என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே முதலில் இந்த சேவை வழங்கப்படும். பின்பு, இந்த சேவை படிப்படியாக அனைத்து ஊர்களுக்கும் விரிவாக்கப்படும்.
சேவை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
செப்டம்பர் 5ம் தேதி முதல் இது நுகர்வோர் பயன்பாட்டுக்கு வரும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சந்தா எவ்வளவு ?
மாத சந்தா மற்றும் வருட சந்தா அடிப்படையில் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. குறைந்தப்பட்ச மாத சந்தா ரூ. 700இல் தொடங்குகிறது என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வருட சந்தா எவ்வளவு என்று இன்னும் வெளியிடப்படவில்லை.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள்
இதனை கடந்து இந்நிகழ்ச்சியில் பல்வேறு அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டார். அவை,
- ரிலையன்ஸ் தன் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் வணிகத்தில் 20 சதவீத பங்கை செளதி அராம்கோ நிறுவனத்திடம் விற்கும் அறிவிப்பை இந்நிகழ்வில் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.
- பங்குதாரர்களுக்கு அதிக போனஸ் மற்றும் ஈவுத் தொகை தருவதாக உறுதி அளித்தார்.
- மாதம் 500 ரூபாய் கட்டணத்துக்கு அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு ஜியோ லேண்ட்லைனிலிருந்து பேச சேவை வழங்க போவதாக அறிவித்தார்.
- அடுத்த 18 மாதத்தில் அதாவது மார்ச் 31, 2021-க்குள் நிகர கடனற்ற நிறுவனமாக மாறுவதற்கு செயல் திட்டம் உள்ளதாக முகேஷ் அம்பானி கூறினார்.
- 4 நொடிகளுக்கு ஒரு தொலைக்காட்சியையும், 2 நொடிகளுக்கு ஒரு ஃபோனையும் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ரிடைல் நிறுவனம் விற்றதாக அம்பானி கூறினார்.
- இப்போது நிலவும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது என்று அவர் கூறினார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












