சர்வதேச யோகா தினம்: மைனஸ் 20 டிகிரி குளிரில் யோகா செய்த இந்திய படையினர்

சர்வதேச யோகா தினம்

பட மூலாதாரம், ANI

யோகாவை அனைவரும் தழுவி அதை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக பார்க்க வேண்டும் என்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார்.

இன்று (21.06.2019) சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இந்திய பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் யோகா தினம் சர்வதேச அளவில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன. அதில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச யோகா தினம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற யோகா தின பயிற்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றிய மோதி, இந்நாளில் உலகளவில் யோகா பயிற்சிக்காக தன்னோடு இணைந்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகம் முழுவதும் சூரியனின் முதல் கதிர் வீச்சுகள் யோகா பயிற்சி செய்பவர்களால் வரவேற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக மக்கள் பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நம்முடைய கலாசாரத்தின் முக்கிய அங்கம் யோகா என்று குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் யோகா பயிற்சியை அடுத்த கட்டத்துக்கு நாம் அனைவரும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் பள்ளிக் குழந்தைகளுடன் இன்று யோகா பயிற்சியை மேற்கொண்டார்.

போர்கப்பல் மீது யோகா செய்த கடற்படை வீரர்கள்

மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பற்படையிலிருந்து விலக்கப்பட்ட ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலில், கடற்படை வீரர்கள் இன்று காலை யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

சர்வதேச யோகா தினம்

அதேபோல், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீர்மூழ்கிக் கப்பலில், படையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

சர்வதேச யோகா தினம்

ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பலின் வீரர்கள் கப்பலின் மேல் தளத்தில் யோகா இன்று யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பிற பாஜக தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

யோகா குரு பாபா ராம்தேவ் உடன் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஹரியானா முதல்வர் கட்டர் ரோஹ்டக்கில் இன்று யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

பியூஷ் கோயல்

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜுஜு, ஸ்மிரிதி இரானி ஆகியோரும் இன்று யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

தண்ணீரில் யோகா செய்த எல்லைப் பாதுகாப்பு போலீஸார்

இந்திய ராணுவத்தை சேர்ந்த பல்வேறு படையினரும், எல்லைப் பாதுகாப்பு போலீஸாரும் இன்று காலை யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

அருணாச்சல பிரதேசத்திலுள்ள டிகரு ஆற்றில், இந்திய - திபத்திய எல்லைப் பாதுகாப்பு போலீஸார் 9வது படைப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் ஆற்றில் இறங்கி யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

சர்வதேச யோகா தினம்

- 20 டிகிரி செல்ஸியஸ் குளிரில் வடக்கு லடாக் பகுதியில் இந்திய - திபத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று காலை யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"கவனச்சிதறல் இன்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது"

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. சென்னையிலுள்ள, ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று காலை யோகா பயிற்சி நடைபெற்றது. அதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், மாணவர்கள் கவனச்சிதறலின்றி கல்வி கற்க யோகா மிகவும் உதவுவதாக தெரிவித்தார்.

"விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இரான் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது" | பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை |

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :