மக்களவைத் தேர்தல் 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

பிகார், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் மொத்தம் 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 1.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

9.5 கோடி பேர் இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4.9 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 4.5 கோடி பேர் பெண் வக்காளர்கள். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 3,500 பேர்.

உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் இந்த வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி குருகிராமில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கை பதிவு செய்தார்.

மக்களவைத் தேர்தலின் கடைசி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு மே 19 அன்று நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :