மம்தா பானர்ஜி: ‘வறுமை நிலையில் இருந்து முதல்வர் ஆனவர்’ - 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
மம்தா பானர்ஜி குறித்த சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
- மம்தா பானர்ஜி 15 வயதில் அரசியலுக்கு வந்தார்.
- கொல்கத்தா ஜொக்மயா தேவி பெண்கள் கல்லூரியின் மாணவர் தலைவராக உருவெடுத்தார்.
- இளமையில் மிகவும் வறுமையில் மம்தா வாடியதாக அவர் குறித்த ஒரு சுயசரிதை நூல் கூறுகிறது.வீட்டு தேவைகளுக்காக அவர் பால் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
- அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வர்.
- மம்தாவின் அரசியல் வாழ்வானது காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
- மூத்த இடதுசாரி தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை வீழ்த்தி அவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
- பின் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.
- மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி அரசை வீழ்த்தியவர் மம்தா. எளிமையான தலைவர் என்ற பிம்பம் மம்தாவிற்கு உள்ளது. ஆனால், மூர்க்கமான தலைவராகவே கருதப்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
- எதிர்கட்சி கூட்டணியின் முகமாக அவர் இந்த தேர்தலில் உருவெடுத்திருக்கிறார். மகாகத்பந்தன் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால, பிரதமர் பதவிக்கான போட்டியில் மம்தாவும் இருப்பார்.
- நரேந்திர மோதியை எதிர்த்து தீவிர அரசியல் செய்பவர் என்ற அடிப்படையில் அவர் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்த தேர்தலில் மம்தா ஒரு கிங் மேக்கராக ஆகலாம்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








