தமிழகம் வரும் ராகுலுக்கு எதிராக மும்பை, டெல்லியில் டிரெண்டாகும் 'Go Back Rahul'

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Mail Today

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வரும் நிலையில் டிவிட்டரில் இந்திய அளவில் ராகுல் காந்தியே திரும்பிப் போ எனும் GoBackRahul ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

ராகுல் காந்தி முதலில் சென்னை வந்து ஓரிரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபிறகு நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 9 மக்களவை தொகுதிகள் எவை? அவற்றில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் சென்னை வருகையை ஒட்டி டிவிட்டரில் தமிழக அளவில் #GoBackRahul எனும் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

தமிழக பாஜக தனது அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் காலை ஆறு மணியளவில் #GoBackRahul #GoBackPappu என்ற ஹேஷ்டேகுகளுடன் பதிவுகளை டிவீட் செய்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி #GoBackRahul இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

GoBackRahul

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ராகுல் இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் டெல்லி, மும்பை, லக்னோ, அமிர்தசரஸ், ஹைதராபாத், பெங்களூரு, ஜெய்ப்பூர், போபால், ஸ்ரீநகர், கான்பூர், இந்தூர் ஆகிய இடங்களில் இருந்து இந்த பதிவுகள் இடப்பட்டு அந்த ஊரின் டிரெண்டிங்கிலும் இடம் பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களில் பிரதமர் மோதி தமிழகம் வந்தபோது #GoBackModi எனும் ஹேஷ்டேக்குடன் ஏராளமான டிவீட்டுகள் பதிவிடப்பட்டதில், அந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரெண்டிங் ஆனது. இதற்குப் பழிவாங்கும் வகையில் தற்போது ராகுலுக்கு எதிராக பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் #GoBackRahul என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்கின்றன.

கடந்த மாதம் மோதி தமிழகத்துக்கு வந்தபோது, GobackModi ஹேஷ்டேக்குக்கு பதிலடியாக, #TNWelcomesModi எனும் ஹேஷ்டாக் மஹாராஷ்டிராவிலும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

மோதி

பட மூலாதாரம், Twitter

கடந்த முறை மோதிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ட்விட்டரில் சில ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் பிரசார களத்தில் மட்டுமின்றி ட்விட்டர் களத்திலும் கட்சிகள் ஹேஷ்டேக் யுத்தத்தை கையிலெடுத்திருக்கின்றன.

ட்விட்டர் ட்ரெண்டிங் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

"குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தலைப்பைப் பற்றிய ட்வீட்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும் போது, அதில் பயன்படுத்தப்பட்ட தலைப்பு ட்ரெண்ட்ஸ் பட்டியலில் நுழைகிறது" என்று ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

சில வேளைகளில், ஒரு பிரபலமான ட்வீட்டின்/ஹேஷ்டேகின் பரவல் மக்கள் நினைக்கும் அளவுக்கு அதிகளவில் இல்லையென்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று ட்விட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த உரையாடலின் வேகம் சராசரி நாளின் உரையாடலின் அடிப்படை நிலைக்கு நிகராக, விரைவாக அதிகரிக்கவில்லை என்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் கூறுகிறது.

கணினி சார்ந்த அளவீடுகளின்படி, ட்விட்டரின் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவதற்குரிய தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் பிரபலத்தன்மை குறையும்போது அவை நீக்கப்படுகின்றன.

ஆனால், தனது தளத்தில் ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கெதிராக இருக்கும் தலைப்பு ட்ரெண்டிங் பட்டியலில் சேர்க்கப்படாது அல்லது நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :