மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள்

சோனியா காந்தி

பட மூலாதாரம், Hindustan times / Getty Images

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், ட்விட்டரில் ஹாஷ்டேக் போர் உச்சத்தை தொட்டுள்ளது.

மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

சிற்பி தீனதயாளனின் குழுவினரால் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் சிலை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் திறக்கப்பட உள்ளது.

Presentational grey line

திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம்

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

Presentational grey line

சிலைத் திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

இச்சூழலில், ட்விட்டர் வலைத்தளத்தில் கருணாநிதி சிலை தொடர்பான ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்த, எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழகத்தில் இருந்து திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது.

#StatueOfKalaignar - கொண்டாடும் திமுக தொண்டர்கள்

திமுக தொண்டர்கள் மு.கருணாநிதியின் சிலைத் திறப்பை ட்விட்டரில் இந்த ஹாஷ்டேக் கொண்டு கொண்டாடி வருகிறார்கள். ' சென்டிமென்டலாக தலைவர் மீண்டும் அறிவாலயத்துகே வந்துவிட்டார் ', 'இது சமத்துவத்துகான சிலை ', ' கலைஞர் நவீன தமிழகத்தின் தந்தை மற்றும் இந்திய அரசியலின் பெருஞ்சுவர்' என்றெல்லாம் சிலாகித்து பதிவுகளை ட்வீட்டி வருகிறார்கள்.

மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia
மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia
மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia
மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia

கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில், டைடல் பூங்கா, கத்திபாரா மேம்பாலம், சிப்காட் தொழிற் பூங்கா, அண்ணா மேம்பாலம், வல்லுவர் கோட்டம் என கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

#StatueOfCorruption - ஈழ விவகாரத்தை கையிலெடுக்கும் வலதுசாரிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்ப அனுப்பட்டதையும், இறுதிக்கட்ட போரில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் இந்த ஹாஷ்டேக்கை பயன்படுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia
மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia

மேலும், பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படத்தையும் பதிந்து இந்த ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருகிறார்கள்.

#GoBackSonia - #GoBackModi-க்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள்

கடந்த ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்திலிருந்து கண்டன குரல்கள் எழுந்த சமயத்தில், பிரதமர் மோதி ஒரு நிகழ்வுக்காக சென்னைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

மோதியின் வருகையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி போராட்டத்தை அறிவித்தன. இணையத்தில் #GoBackModi என்ற ஹாஷ்டேக் வேகமெடுத்தது. சென்னை டிரெண்டிங் இடம்பிடித்த அடுத்த சிலமணி நேரங்களில் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரெண்டானது.

மோதி சென்னை நிகழ்வை முடித்துவிட்டு சென்ற பிறகும் உலகளவில் #GoBackModi என்ற டேக் முன்னணி பட்டியலிலேயே இருந்தது.

மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia
மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia

தற்போது, அதற்கு பழித்தீர்க்கும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் #GoBackSonia என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை 75,000 ட்வீட்களை கடந்து இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

'மேகே தாட்டூ அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் தலைவர்', 'போபால் விஷவாயு கும்பலை தப்பிவிட்டு, இலங்கையில் ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து, விஜய் மல்லையா போன்றோருக்கு அள்ளி கொடுத்து, அகஸ்தா ஊழல் செய்து இன்று தமிழகம் வரும் சோனியா அவர்களை "திரும்பி போ" என்று வாழ்த்துகிறோம்' என்று தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: டிரெண்டிங்கில் #GoBackSonia

200,000 ட்வீட்களை பெற்று உலகளாவிய அளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கை #GoBackSonia முந்துமா என்பது சந்தேகமே.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: