அபிநந்தன் போன்ற இந்தியவிமானப்படை விமானிகளின் வாழ்வு ஆபத்தில் இருக்க மோதிதான் காரணம்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் கூறி இருந்தார்.

இன்று உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போதும் மோதி இவ்வாறே கூறினார்.

மோதி, "பல ஆண்டுகளாக ரஃபேல் விவகாரத்தில் பெரும் தடையாக அவர்கள் இருந்தனர். சிலர் அதனை வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நமது முடிவுக்கு ஆதரவாகவே உள்ளது" என்றார்.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் தொடர்பாக ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் கடுமையான வார்த்தைகளை கொண்டு பிரதமரை குற்றஞ்சாட்டி உள்ளார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Hindustan Times

"உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் 30,000 கோடி ரூபாயை திருடி அனில் அம்பானியிடம் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள்தான் ரஃபேல் விமான இந்தியா வர தாமதம் ஆனதற்கு காரணம். பழைய விமானங்களை ஓட்டி அபிநந்தன் போன்ற விமானிகளின் வாழ்வு ஆபத்தில் இருக்க நீங்கள்தான் காரணம்" என்கிறது அந்த ட்வீட்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Twitter

ரஃபேலுக்காக ஐக்கிய முற்போக்கு ஆட்சி 2007இல் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் விலை குறைவு என்று சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்திருந்தது.

ஆனால், காங்கிரஸ் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :