விண்வெளிக்கு கிளம்பிய ஸ்பேஸ்எக்ஸின் 'டிராகன்' விண் ஓடம் மற்றும் பிற செய்திகள்

Dragon capsule SpaceX

பட மூலாதாரம், NASA

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால், சனிக்கிழமையன்று விண்ணில் ஏவப்பட்ட விண் ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இன்று இணையவுள்ளது.

'டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண் ஓடம், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தானாகவே சென்று இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஓடத்தின் முன் பக்கமாகச் சென்று இணையும் இந்த ஓடம், தனது கணினி மற்றும் சென்சார்களின் உதவியுடன் தம்மைத் தாமே வழிநடத்திக் கொள்ளும்.

தற்போது இந்த ஓடத்தில், மனித உருவின் மாதிரி ஒன்றும், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான 90 கிலோ எடையுள்ள சரக்குகளும் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் மனிதர்களை சுமந்து செல்ல அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவிடம் அனுமதி பெற வேண்டும்.

இலங்கை
நரேந்திர மோதி vs இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

பரப்புரை போரில் வென்றது யார்?

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி உடனடியாக விடுவிக்கப்பட்டதால், இரு அணு ஆயுத நாடுகளிடையே ஏற்பட்ட பதற்றம் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியில், போர் மூளும் அபாய பார்வையில் வெற்றி பெற்றது யார்?

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி அந்த நேரத்தில் விஞ்ஞானிகளின் கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கிறார். இம்ரான் கானின் அறிவிப்ப வெளியான சில விநாடிகளில் பிரதமர் மோடி பாகிஸ்தானை கேலியாக விவரிக்கிறார்" முன்னோடி (பைலட்) திட்டம் நிறைவு பெற்றது, இதை நாம் உண்மையாக்கவேண்டும் என்று சூசகமாக குறிப்பிட்டார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பினாலும் மற்றவர்கள், இந்த இறுமாப்பு கூற்றை கேட்டு சுவையற்றதாக கருதினார்கள்.

இலங்கை
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

மசூத் அஸ்கர் தப்பித்த கதை

மசூத் அஸ்கர் முதல் முறையாக 1994ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி டாக்காவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்தார். அப்போது அவரிடம் போர்ச்சுக்கீசிய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தது.

அவரது ஆவணங்களை பரிசோதித்த இந்திய குடியுரிமை அதிகாரி "நீங்கள் பார்ப்பதற்கு போர்ச்சுக்கீத்தவர் போன்றில்லையே" என்று கேட்டதற்கு, எனது பூர்வீகம் குஜராத் என்று மசூத் பதிலளித்தவுடன், மறுகேள்வி இன்றி அவர் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த சில நாட்களுக்கு பிறகு, மசூத் அஸ்கர் ஜம்மு & காஷ்மீரின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இலங்கை
சி.ஆர்.பி.எஃப்

பட மூலாதாரம், SOPA IMAGES

படை வீரர்கள் குடும்பத்துக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும்?

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு இந்திய நாடு முழுவதும் அனுதாப அலை வீசுகிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உயிரிழந்த நாற்பதுக்கும் அதிகமான வீரர்கள் மற்றும் அவரது குடும்பம் மீது சமூக வலைத்தளங்களில் அனுதாப அலை இருக்கிறது.

இதனால் உயிரிழந்த வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கிடைக்கும் உதவிகள், நிதி உதவிகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு நபர்கள் பல கருத்துகளை பகிர்ந்துவருகிறார்கள். ஆனால் அவர்கள் பகிர்ந்து வரும் விஷயங்களில் பல்வேறு தவறுகள் இருக்கின்றன. பல உண்மைக்கு புறம்பாக புரிந்து கொள்ளப்பட்டவையாக உள்ளன.

குறிப்பாக இந்த வீரர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியப் பலன்கள் குறித்து விதவிதமாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இலங்கை
குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தை

பட மூலாதாரம், Keio University Hospital

'உலகின் மிகச்சிறிய குழந்தை'

ஜப்பானில் கிட்டதட்ட கால் கிலோ அளவில், 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உயிர்பிழைத்தது. தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.

உலகின் மிகச்சிறிய குழந்தை என இந்த ஆண் குழந்தை நம்பப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர பிரிவில் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை மிகவும் சிறியதாக இருந்தது. கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் குழந்தை இருந்தது.

பிறந்தது முதல் கடந்த மாதம் வரை குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தது.

24 வார கருவாக இருந்தபோது பிரசவிக்கப்பட்ட இந்த ஆண் குழந்தை, கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு பின்னர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை மூலம் தேறியுள்ளது.

தற்போது அந்த குழந்தை 3.2 கிலோ எடையுடன் உள்ளது. உணவும் ஊட்டப்படுகிறது.

இலங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :