அபிநந்தன் மனைவியுடன் நரேந்திர மோதி பேசினாரா? #BBCFactCheck

நரேந்திர மோதி

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

படக்குறிப்பு, நரேந்திர மோதி
    • எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி

பாகிஸ்தான் இன்று விடுதலை செய்யவிருக்கும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்த்தமானின் மனைவி என்று கூறி வெளியாகியுள்ள இரண்டு வெவ்வேறு காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்தியாவுடன் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை அபிநந்தன் சென்ற ஜெட் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது.

விங் கமாண்டர் வர்த்தமான் கைது செய்யப்பட்டது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பதற்றத்தைத் தணிக்க வேண்டிய நெருக்கடி இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட நிலையில், "அமைதிக்கான நல்லெண்ண முயற்சியாக'' விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானை விடுதலை செய்யப் போவதாக நேற்று (வியாழக்கிழமை) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இந்நிலையில், "ஆஜ்டாக் கிரிக்கெட்" என்ற யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அது வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் பலவற்றில் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் அரசியல்வாதியான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் ஆயிரக்கணக்கானோர் இந்த காணொளியை பகிர்ந்திருக்கிறார்கள்.

முதலாவது காணொளி:

விங் கமாண்டர் அபிநந்தன் மனைவியுடன் தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோதி பேசினார் என்று முதலாவது காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிநந்தன்
படக்குறிப்பு, அபிநந்தன்

இந்நிலையில், அந்த காணொளியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபோது, அது முதல் முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது என்பதை கண்டறிந்துள்ளோம். மோதி, குஜராத் முதல்வராக இருந்தபோது வெளியான காணொளி அது. அதுமட்டுமின்றி, அந்த காணொளி 2013 நவம்பர் 2ஆம் தேதி, குஜராத் முதல்வராக நரேந்திர மோதி இருந்தபோது மோதியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவும் வெளியிட்டிருக்கிறார்.

2013ஆம் ஆண்டு மோதியின் பாட்னா பொதுக் கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த முன்னா ஸ்ரீவத்சவா என்பவருடைய மனைவியிடம் மோதி பேசிய காணொளி அது.

"உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இறங்க முடியாமல் போய்விட்டது. எங்கள் தொண்டர்கள் உங்களைச் சந்திப்பார்கள். உங்கள் குடும்பத்தினரை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்'' என்று மோதி கூறுவதை கேட்க முடிகிறது.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் சமூக வலைதளங்களில் இந்த காணொளி வைரலாகப் பரவி வருகிறது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ஒரு ஜவானின் மனைவியுடன் மோதி பேசினார் என்று கூறி இந்த காணொளி வைரலாக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது காணொளி:

சூழ்நிலையை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜகவை அபிநந்தனின் மனைவி கேட்டுக் கொள்வதைப் போல மற்றொரு காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

"நமது வீரர்களின் தியாகங்களை அரசியல் தலைவர்கள் அரசியலாக்க வேண்டாம் என்று, சக இந்தியர்களை, குறிப்பாக அரசியல் தலைவர்களை, ராணுவத்தினரின் குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்'' என்று அந்த காணொளியில் பேசும் பெண் கூறுகிறார்.

"ராணுவ வீரராக இருப்பது மிகவும் சிரமம். இப்போது அபிநந்தன் குடும்பத்தினர் எந்த வகையான பதற்றத்தில் இருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்'' என்றும் காணொளியில் அந்த பெண் கூறுவதை போன்றுள்ளது.

இந்திய இளைஞர் காங்கிரஸின் ஆன்லைன் சஞ்சிகையான 'யுவ தேஷ்' இந்த காணொளியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வான எஸ்.பி. ராஜேசும் இந்த காணொளியை பகிர்ந்திருக்கிறார்கள்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த காணொளியை பல லட்சம் பேர் பார்த்தும், பகிர்ந்தும் இருக்கிறார்கள்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

இருந்தபோதிலும், அது விங் கமாண்டர் அபிநந்தன் மனைவியைப் போலத் தெரியவில்லை.

"ராணுவ அதிகாரியின் மனைவி'' என்று தம்மை அந்தப் பெண் அந்த காணொளியில் குறிப்பிடுகிறார். விங் கமாண்டர் அபிநந்தன் விமானப் படை அதிகாரியாவார்.

அபிநந்தன் குடும்பத்தினரை மூன்றாவது தரப்பினரைப் போல அந்தப் பெண் குறிப்பிடுகிறார்.

இதுபற்றி தேடிப் பார்த்ததில் டிஎன்ஏ செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் ஏற்கெனவே பகிரப்பட்டுள்ள புகைப்படங்களை வைத்துப் பார்த்தபோது, அந்த காணொளியில் இருக்கும் பெண், அபிநந்தனின் மனைவியின் தோற்றத்துடன் ஒத்திருக்கவில்லை என்று மேலும் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :