நரேந்திர மோதி கூறியது போல உண்மையாகவே கங்கையில் மாசு குறைந்துள்ளதா? #BBCRealityCheck

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி உண்மை பரிசோதிக்கும் குழு
இந்திய பிரதமராக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி பதிவியேற்ற போது ஒரு வாக்குறதியை அளித்தார். அதாவது இந்தியாவில் மிகவும் மாசுப்பட்ட நதியான கங்கை சுத்தம் செய்யப்படும் என்பதுதான் அது.
பாஜக அரசாங்கம் கங்கை நதியை சுத்தம் செய்ய ஐந்தாண்டு செயல்திட்டத்தை வடிவமைத்து, அதனை செயல்படுத்துவதற்காக மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான பணத்தை ஒதுக்கியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பேசிய நரேந்திர மோதி கங்கையில் மாசு அளவை குறைப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் மோதி சிறப்பாக செயல்படவில்லை. எந்த விளைவுகளையும் அவர் ஏற்படுத்தவில்லை என்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உண்மைதான் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
அதற்காக அதிகளவிலான பணம் செலவு செய்யப்பட்டிருந்தாலும், 2020ஆம் ஆண்டுக்குள் 1568 மைல் நீளமுள்ள கங்கை நதி முழுமையாக சுத்தம் செய்வது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.
ஏன் கங்கை நதி அசுத்தமாக இருக்கிறது?
இந்துக்களின் புனித நதியாக கங்கை நதி கருதப்படுகிறது. இமயமலையில் உருவாகும் இந்த நதி வங்கக்கடலில் கலக்கிறது.
இந்த நதியின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான நகரங்களும் ஆயிரகணக்கான கிராமங்களும் உள்ளன.
ஏறத்தாழ 450 மில்லியன் மக்கள் இந்த நதியில்தான் குப்பையைக் கொட்டுகிறார்கள்.
- இந்த நதியில் தொழிற்சாலை ராசாயன கழிவுகளை கலக்கிறார்கள்.
- வீட்டு கழிவுகள் இங்கே கொட்டப்படுகின்றன.
- பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
தாமதமும், எட்டப்படாத இலக்கும்
முந்தைய இந்திய அரசுகளும் கங்கை நதியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால் வெற்றி கிட்டவில்லை.

பட மூலாதாரம், BC
இப்போதைய அரசு 2015ஆம் ஆண்டு முதல் கங்கையை சுத்தப்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கத் தொடங்கியது.
ஆனால், ஏகப்பட்ட தாமங்களும், எட்டப்படாத இலக்குகளும் இருந்தன. 2017ஆம் ஆண்டு அரசுத் தணிக்கையிலேயே இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அந்த தணிக்கையில் விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம், முறையாக செலவிடப்படாத நிதி, மக்கள் வளம் இல்லாமை, திட்டமிட்ட இலக்குகளை எட்டுவதில் தாமதம் ஆகியவை காரணங்களாக குறிப்பிடப்பட்டன.
நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின் படி 236 சுத்திகரிப்பு திட்டங்களில் 63 மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்திற்குள் கங்கை நதி 70 முதல் 80 சதவீதம் வரை சுத்தமாகும் என்றும் அடுத்தாண்டுக்குள் முழுமையாக சுத்தமாகும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.
சில விஷயத்தில் முன்னேற்றம் இருப்பதையும் மறுக்க முடியாது.
நீர் மிகவும் அசுத்தமாக உள்ள 6 இடங்களில் நீர் மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் நீர்நிலையின் தரம் ஓரளவு முன்னேற்றம் இருப்பது கண்டறியப்பட்டது.
எது இன்னும் பிரச்சனையாக உள்ளது?
ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மிகவும் மாசான பகுதியில் உள்ள நீரை சுத்தம் செய்வதுதான்.
இந்த சுத்தகரிப்பு பணியினை மேற்பார்வை செய்யும் அரசாங்க நிறுவனம், 97 நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் அளவு 2.9 பில்லியன் லிட்டர்.ஆனால் சுத்திகரிப்பு திறன் 1.6 பில்லியன் லிட்டர்தான், என்கிறது.
அதாவது ஒரு நாளுக்கு பில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்காமல் ஆற்றில் விடப்படுகிறது.
2035ஆம் ஆண்டுக்குள் 3.6 பில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேறும் என அரசு தரவுகளே கூறுகின்றன.
46 நகரங்களில் உள்ள 84 சுத்திகரிப்பு நிலையங்களில் 34 முழுமையாக வேலை செய்யவில்லை. 14 முழுதிறனில் வேலை செய்யவில்லை என அரசு தரவுகளே கூறுகின்றன.
மாசை குறைக்கும் வேறு சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கான்பூர் தொழிற்சாலை பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நீரினை தணிக்கை செய்து வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் சில பகுதிகள் சுத்தம்செய்யப்பட்டன.
ஆனால், இந்திய மாசுகட்டுபாடு வாரியம் கடந்தாண்டு ஜூன் மாதம் அளித்த தகவலின் படி, அவர்கள் பரிசோதித்த 41 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது குறைவாக மாசுள்ளது என்கிறது.
அரசு தகவல்களின் படி மோதி தொகுதியான வாரணாசியில் மட்டும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அருந்தும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட பணிகள் எதுவும் எதிர்பார்த்தது போல விளைவுகளை ஏற்படுத்தவில்லை. தண்ணீரின் தரம் மேம்படவில்லை என்கிறார் டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சூழலியல் மையத்தை சேர்ந்த சந்திர பூஷண்.
அவர் மார்ச் 2019க்குள் 80 சதவீதமும், மார்ச் 2020க்குள் முழுமையாகவும் கங்கையை சுத்திகரிக்க சாத்தியமில்லை என்கிறார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













