புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ-முகம்மது குறித்து பத்து தகவல்கள்

பட மூலாதாரம், AFP/GETTY
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று (பிப்ரவரி 14) அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது.
சரி யார் இந்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு?
'பயங்கரவாத அமைப்பு'
இந்தியாவால் பயங்கரவாத அமைப்பென தடை செய்யப்பட்டிருக்கும் இந்த அமைப்பை ஐ.நா., பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டு இருக்கிறது.
இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பது.
இந்தியா மற்றும் காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பட மூலாதாரம், Reuters
இந்த அமைப்பு குறித்த பத்து தகவல்கள்.
- ஜெய்ஷ்-இ-முகம்மது என்பதன் பொருள் முகம்மதின் ராணுவம் என்பதாகும்.
- இந்த கட்டுரையை படிக்கும் பல பேருக்கு காத்மண்டுவிலிருந்து டெல்லி வரவிருந்த இந்திய விமானம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது பயணிகளை விடுவிக்க இந்திய சிறைசாலைகளில் உள்ள மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அந்த விமானத்தை கடத்தியவர்கள். அப்போது விடுவிக்கப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர்தான் மெளலான் மசூத் அசார்.
- மெளலானால் பாகிஸ்தானில் தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு.
- மெளலான் தாலிபன் தலைவர் முல்லா ஒமரையும் அல் கொய்தா தலைவர் ஒசாமாவையும் சந்தித்து இருக்கிறார்.
- 2001ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் நடந்த தாக்குதலுக்கும் இந்த அமைப்பை இந்தியா குற்றஞ்சாட்டியது. ஆனால், அந்த அமைப்பு அதனை மறுத்தது.
- இதன் பிறகு பாகிஸ்தானிலும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. ஆனால், வெவ்வேறு பெயர்களில் அந்த அமைப்பு இயங்குகிறது.
- 2016ஆம் ஆண்டு பதன்கோட்டில் நடந்த தாக்குதலுக்கும் இந்த அமைப்பையே குற்றஞ்சாட்டியது இந்தியா.
- இந்த அமைப்பின் தளபதி 2017ஆம் ஆண்டு இந்திய படைகளால் கொல்லப்பட்டார். அது அந்த அமைப்புக்கு பெரும் அடியாக பார்க்கப்பட்டது.
- இந்தியாவை மட்டும் இந்த அமைப்பு தாக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும் இந்த அமைப்பு தாக்குதல் தொடுத்திருக்கிறது.
- பாகிஸ்தான்தான் இந்த அமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், முன்னாள் பாகிஸ்தான் தலைவர் முஷ்ரப் மீதும் இந்த அமைப்பு தாக்குதல் தொடுத்திருக்கிறது.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
- புல்வாமா துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : தொடர்கிறது தேடுதல் வேட்டை
- "ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்" - மஹிந்த ராஜபக்ஷ
- பழங்குடி பெண் திரைப்பட இயக்குநரான கதை - நம்பிக்கை பகிர்வு
- ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு - கடந்து வந்த பாதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












