போலிச் செய்திகளை மக்கள் ஏன் பரப்புகிறார்கள்:`போலிச் செய்தியும்' இந்தியாவில் சாதாரண குடிமகனும்

உண்மையா, பொய்யா?
    • எழுதியவர், சாந்தனு சக்ரவர்த்தி, லூசீல் ஸ்டெங்கெல் மற்றும் சப்னா சோலங்கி
    • பதவி, பிபிசி உலக சேவை

இது உண்மையில், உலக சேவை பார்வையாளர்கள் ஆய்வுக் குழு மற்றும் அதன் பங்காளர் அமைப்புகள் இணைந்த கூட்டு முயற்சியின் திட்ட அறிக்கை தான்.

இந்த அறிக்கையில் உள்ள சிந்தனைகள், வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் பல இடங்களில் இருந்து வந்தவை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தனி நபர்களுடனான கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மூலமாகவும், எங்களுடைய அனைத்து பங்காளர் அமைப்புகளுடனும் நடந்த விவாதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்டவையும் இதில் அடங்கும்.

பகுதி I. சரிபார்க்காமல் செய்தியை பகிராதிருப்பதற்கான நிபந்தனைகள்

1.பல்வேறு வகையான செய்திகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் உண்மையிலேயே தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.

2.ஊடகங்களின் செயலூக்கம் மற்றும் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்கள்

3.டிஜிட்டல் காலம் - மற்றும் அதிவேகமான தகவல் சூழ்நிலைகளை நோக்கிய நகர்வு

4.காலத்துக்கு ஏற்ப செயல்முறைகளை நகலாகப் பின்பற்றுதல்

5.நுகர்வு மற்றும் பகிர்தலுக்கு இடையில்

பகுதி II. பகிர்தலின் பின்னணியில் உள்ள செயலூக்கம்

போலிச் செய்திகள்

பகிர்தல்

1.சரியானதா என்பதை உறுதி செய்வதற்காகப் பகிர்வது (நெட்வொர்க் உள்ளேயே)

2.பொது கடமையாகப் பகிர்வது

3.இடைச்செருகல்: இன்றைக்கு இந்தியாவில் அரசியல் அடையாளங்களாக உருவாதல்

4.வெளிப்படுத்துதல் மற்றும் அடையாளத்தை முன்னிலைப் படுத்துவதாகப் பகிர்வது

பகுதி III. போலிச் செய்தி என்பது என்ன?

போலிச் செய்திகளைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஏன் செவிடன் காதில் விழுந்ததைப் போல இருக்கிறது

பகுதி IV. போலிச் செய்தி தகவல்கள் பற்றிய பயனுள்ள விவரிப்புகள்

1. வலதுசாரி கருத்து அடையாளம் உள்ளவர்கள் மத்தியில் சுழற்சியில் உள்ள போலிச் செய்தி தகவல்கள்.

இடைச்செருகல்: இந்தியாவில் மூன்று வலதுசாரி அடையாளங்கள் உள்ளன

2. இடதுசாரி கருத்து உள்ளவர்கள் மத்தியில் சுழற்சியில் உள்ள போலிச் செய்தி தகவல்கள்

பகுதி V. உண்மை - சோதித்தல் மற்றும் சரிபார்த்தல்: வரம்புள்ளது மற்றும் திட்டவட்டமானது

1.மற்றவற்றைவிட இரண்டு குழுக்கள் போலிச் செய்திகளை - அவர்கள் பயன்படுத்தும் உத்திகளை- நன்றாக மதிப்பீடு செய்கின்றன.

2.சரிபார்த்தல் - மற்றும் Google-ஐ மிகவும் சரியாகப் பயன்படுத்துதல்

3.டி.வி. மற்றும் பத்திரிகைகள்: இன்னும் சிறிது நம்பகத்தன்மை உள்ளது (`செல்வாக்கிற்கு உள்ளாக்பட்டாலும் கூட')

4.உண்மையைக் கண்டறிவதில் உள்ள சவால்கள் - நெட்வொர்க் மூலம் அல்லது நெட்வொர்க் இல்லாமல்

போலிச் செய்திகள்

பகுதி VI. போலிச் செய்தி சூழல் அமைப்பு

பகுதி VII. முடிவுகள்

இலங்கை

ஆய்வில் தகவல் அளித்தவர்களின் மேற்கோள்கள் பற்றி ஒரு குறிப்பு இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது:

பெரும்பாலான ஆய்வுத் தகவல் சேகரிப்புகள், கருத்து தெரிவித்தவர்களுக்கு மிகவும் பழக்கமாக உள்ள மொழியில், சாதாரணமாக உள்ளூர் மொழியில், நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

கருத்து தெரிவித்தவர்கள் ஆங்கிலத்தில் பேசினால், எந்த இலக்கண, வாக்கியப் பிழை திருத்தங்கள் எதுவும் இல்லாமல், அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டன.

கருத்து தெரிவித்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாத இடங்களில், நேர்காணல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து, இந்த அறிக்கையில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

நேர்காணல்களின் மொழி பெயர்ப்புகளில் இலக்கண அல்லது வாக்கியப் பிழைகளை நாங்கள் திருத்தவில்லை. ஏனென்றால், அப்படியே பயன்படுத்துவதுதான் நேர்காணலின் உண்மையான எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த ஆங்கில மொழி பெயர்ப்புகளில் சில விஷயங்கள், இந்தியர் அல்லாத பார்வையாளர்களுக்கு வித்தியாசமாகத் தோன்றலாம் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்; அல்லது கருத்து தெரிவித்தவர்களின் மொழிப் புலமை பற்றி தவறான கருத்தை உருவாக்குவதாகவோ அல்லது எதிர்மறையான உணர்வையோ ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருக்கிறோம்.

மேற்கோள்களோ அல்லது மேற்கோள்களின் பகுதிகளோ பயன்படுத்தப் பட்டிருந்தால், அவை குறிப்பாக சுருக்கப்பட்டதைத் தவிர, திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட்ட இடங்களில், அங்கு வாக்கிய சொல் எச்சம் உடன் காட்டப்பட்டுள்ளன.

இலங்கை

குறுகிய தொகுப்பு

போலிச் செய்திகள்

போலிச் செய்திகள் பற்றி உலகம் முழுக்க நடைபெற்ற சூடான அனைத்து விவாதங்களிலும், சாதாரண குடிமக்களின் குரலுக்கு மதிப்பு கொடுக்கப்படாமலே உள்ளது.

எனவே, இந்த பணித் திட்டத்தில், மையமான ஒரு கேள்வியுடன் நாங்கள் தொடங்கினோம்: சாதாரண குடிமக்கள், சரிபார்த்தல் செய்யாமல், போலிச் செய்தியை எதற்காகப் பரப்புகிறார்கள்? என்ற கேள்வியுடன் தொடங்கினோம்.

பல கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதைப் போல, சாதாரண குடிமக்களுக்கு போலிச் செய்தி பற்றிய கவலை இருக்குமானால், அதுகுறித்த தங்களது பழக்கத்தை எப்படி மாற்றிக் கொண்டார்கள்?

கட்டுரைகளாகவோ/ இணையதள முகவரிகளாகவோ போலிச் செய்திகள் பரப்பப்படவில்லை என்பதையும், படங்கள் மற்றும் மீம்ஸ்களாக, தனிப்பட்ட வாட்ஸப் மற்றும் முகநூல் பதிவுகள் மூலமாக தகவல்களைப் பரப்புவதை முக்கிய வழிமுறையாக இருப்பதையும் புரிந்து கொள்வதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம்.

இருந்தபோதிலும், இந்தியாவில் சமூக வலைதளங்களில் போலிச் செய்திக்கான சூழல் அமைப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யத் தொடங்குவதில் நாங்கள் தீவிர ஆர்வம் கொண்டிருந்தோம்.

ஆழமான தரமான/ இன அமைப்பியல் மற்றும் அதிக தகவல் தொகுப்பு என்ற கூட்டு உத்திகளைப் பயன்படுத்தி, பின்வருவனவற்றை நாங்கள் கண்டறிந்தோம்:

1. போலிச் செய்தி பரவுவதற்கு சில சூழ்நிலைகள் தேவையாக உள்ளன.

போலிச் செய்திகள்

இவை அனைத்தும்:

•அனைத்து வகையான செய்திகளுக்கும் இடையில் மெல்லிய வித்தியாசம்

•செய்தி ஊடகத்தின் செயலூக்கம் பற்றிய சந்தேகம்

•டிஜிட்டல் தகவல்கள் குவிந்து கிடப்பது மற்றும் பரபரப்பான செய்திகளை அறிவதில் மக்களுக்கு உள்ள மனநிலை

•வேகமாகக் குவியும் டிஜிட்டல் தகவல்களைக் கையாள்வதற்கான நடைமுறைகள். இவை பின்வரும் வகையில் இருக்கும்: சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்வது, படங்களின் விரும்பத்தக்க நிலை, அனுப்புபவரின் அந்தஸ்து, அனுப்பியவரை அறியாதது, களத்தின் இயல்பு மற்றும் `சிந்தனையை' மீறிய `உணர்வு'

•நுகர்தல் மற்றும் பகிர்தலுக்கு இடையில் விடுபட்டுப் போன தொடர்பு

•வாட்ஸப் மற்றும் முகநூலுக்கு பார்வையாளர்களை பகிர்ந்து கொள்ளும் உத்தி

2. பகிர்தலின் பின்னணியில் உள்ள செயலூக்கங்கள் அதிகமானவையாகவும் சிக்கலானவையாகவும் உள்ளன. போலிச் செய்திகள் ஏன் பகிரப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த இதன் தேவைகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இவை அனைத்தும்:

•சரிபார்த்தலுக்காகப் பகிர்வது (நெட்வொர்க் உள்ளேயே)

•பொது கடமையாகப் பகிர்வது

•தேசத்தை உருவாக்கப் பகிர்வது

•ஒருவருடைய சமூக- அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பகிர்வது. போலிச் செய்தியைப் பரப்புவதில் சமூக - அரசியல் அடையாளம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். குறிப்பாக வலதுசாரி கருத்து உள்ளவர்களிடம் முக்கிய பங்காற்றுவதைக் கண்டறிந்தோம். வலதுசாரி கருத்து உள்ளவர்கள் மத்தியிலும் பன்முக தனித்துவ அடையாளங்கள் உருவாகி வருவதை நாங்கள் பார்த்தபோதிலும், அவை பொதுவான விவரிப்புகளுக்கு உள்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் உண்மையான ஒன்றுபட்ட `இடதுசாரி' அடையாளம் எதுவும் இல்லை; மாறாக மைக்ரோ அடையாளங்கள் (உதாரணமாக தமிழ், பெங்காலி, தலித்) உள்ளன. சமூக - பொருளாதார அடையாளம் என்ற தீவிர அடையாளத்துக்குள்ளும், பரவலான `இடது' என்ற அம்சத்துக்குள், மற்றவர்களுக்கான பிரச்சினைகள் என்பதாக சில நேரம் குறுகிவிடுகிறது.

3. குடிமக்கள் என்ற பரவலான வரையறையைவைத்து, கூர்ந்து கவனித்தால், போலிச் செய்தி தகவல்கள் நான்கு வகையான விவரிப்பில் வருகின்றன.

போலிச் செய்திகள்

இவை அனைத்தும்:

•இந்து சக்தி மற்றும் மேலாதிக்கம்

•பாதுகாத்து வைத்தல் மற்றும் புதுப்பித்தல்

•முன்னேற்றம் மற்றும் தேசத்தின் பெருமை

•ஆளுமை மற்றும் வீரம் (பிரதமர் மோதி குறித்தது)

அதாவது, உண்மைகளை சரிபார்ப்பதைவிட, அடையாளத்தை உறுதிப்படுத்துவது வெற்றிக்குரியதாகக் கருதப்படுகிறது. வலதுசாரி மற்றும் இடதுசாரி சிந்தனையுள்ள போலிச் செய்தி தகவல்களில், இதேபோன்ற உத்திகள் பயன்படுத்தப்பட்டதையும் நாங்கள் கண்டறிந்தோம். ஆனால், கருத்து தெரிவித்தவர்களின் தொலைபேசிகளில், வலதுசாரி கருத்துள்ள போலிச் செய்தி தகவல்களின் எண்ணிக்கை அதிக அளவுக்கு முதன்மை பெற்றிருந்தன.

4. உண்மை அறிதலில் சில பயன்கள் உண்டு

உதாரணமாக, Google பயன்படுத்துவது அல்லது தொலைக்காட்சிக்கு செல்வது, ஆனால் இதற்கான வரம்புகள் உண்டு, குறிப்பிட்ட பயன்பாடாக இருக்கும். ஆனால், இதுபோல சரிபார்க்கும் பழக்கம் உள்ள சில குழுவினரும் கூட, தங்களுடைய அடையாளத்துக்கு ஒத்திசைவு கொண்டதாக இருந்தால், சரிபார்க்கப்படாத பொய்யான தகவல்களை பரப்புவதற்கு ஆட்படுகிறார்கள்.

5. Twitter-ல் போலிச் செய்தி சூழல் அமைப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. அதில் போலிச் செய்திக்கான தகவல் ஆதாரங்களும், அரசியல் உரிமையாக அவற்றைப் பெருக்கி காட்டும் அம்சங்களும் நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகவும், ஒன்றுக்குள் ஒன்றாக சிக்கலானவையாகவும் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த ஆய்வின் போது தயாரிக்கப்பட்ட நெட்வொர்க் பகுப்பாய்வு மேப் -இல், Twitter-ல் மூலம் போலிச் செய்திகளைப் பரப்பியவர்களில் பல முகவரி பெயர்கள் (Twitter handles), பாஜகவுக்கு எதிரானவர்களின் குழுக்களில் உள்ளவர்களுடையதாக இல்லாமல், பாஜக ஆதரவு குழுவினருடையதாக இருந்தன என்பதை நாங்கள் கண்டோம்.

முகநூலிலும் கூட, ஒருமுகப்படுத்தப்பட்ட மக்களை நாங்கள் கண்டோம். அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களும், போலிச் செய்திகளுக்கான தகவல் ஆதாரங்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன. முகநூலில் நேர்மையான தகவல் ஆதாரங்கள் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பும் தகவல் ஆதாரங்களை தெளிவான ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள் பின்தொடர்வதையும் நாங்கள் கண்டோம்.

நாங்கள் கண்டறிந்த காரணங்களின்படி, போலிச் செய்திகள் பரவலைத் தடுப்பது - குறிப்பாக இப்போது தலைதூக்கி நிற்கிற படங்கள் மற்றும் மீம்ஸ் மூலம் பரவிச் செல்வதைத் தடுப்பது - மிகவும் சவால் நிறைந்தது என்று நாங்கள் முடிவுக்கு வருகிறோம்.

உண்மையில், இது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனையாக மட்டும் அல்லாமல், சமூக பிரச்சனையாகவும் இருப்பதால், இதைச் சமாளிப்பதற்கு - அனைத்து நடிகர்கள் - தளங்கள், ஊடக நிறுவனங்கள், அரசு, மக்கள் அமைப்பு - என அனைத்து தரப்பினருமே ஒன்று சேர வேண்டும் என்று நாங்கள் ஆலோசனை தெரிவிக்கிறோம்.

செல்லிடபேசி

ஆனால் இதில், விஷயங்களை சரிபார்க்காமல் பகிராமல் இருப்பதில் சாதாரண குடிமக்களும் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தகவல் தளங்களும் அவற்றின் முக்கியமான குணாதிசயங்களில் எந்த சமரசமும் இல்லாமல், இதற்கு உதவும் வகையில் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

போலிச் செய்திகள் உருவாக்குதல் மற்றும் பரப்புவதில் திட்டமிடப்பட்ட சூழல் அமைப்பு உள்ளதா இல்லையா என்பதை செய்தியாளர்களும் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

இலங்கை

அறிமுகம்

``அது ஒரு காலம், அறியாமையின் காலம், நம்பிக்கைகளின் காலம்'' என்ற ஒரு காலம் இருந்தது. அந்தப் பழங்காலத்தில், `போலிச் செய்தி' என்ற வார்த்தை, ஒரு வகையான நையாண்டியை குறிப்பிடுவதாக இருந்தது; நம்பகத்தன்மை உள்ள பத்திரிகைத் துறைகள் மூலமாக அல்லாமல், கேலிக்குரிய தகவல் ஆதாரங்களில் இருந்து இளைஞர் பெறக் கூடிய, சர்ச்சைக்குரிய தகவல்களைக் குறிப்பிடுவதாக இருந்தது.

2010களின் தொடக்கத்தில், The Daily Show, The Colbert Report என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கலந்துரையாடல்களில் `நிஜ செய்திகளுக்கும்' போலியானவற்றுக்கும் இடையில் மெல்லிய வித்தியாசம் மட்டுமே இருந்தன என்பதைப் பற்றி நாங்கள் குறிப்பிடுகிறோம்.

இந்த வகையிலான `போலிச் செய்திகள்' `சில வகையிலான பிரதான ஜர்னலிசத்துக்கு மாற்றாக, சரி செய்தல் வகையிலானவையாக' இப்போது கருதுவதை நினைத்துப் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கிறது.

இன்றைக்கு, `போலிச் செய்தி' என்ற வார்த்தைக்கு, சில நேர் தொடர்புகள் இருக்கின்றன என்று சொல்வது சரியாக இருக்கும்.

வாக்குவாதத்துக்கு இடமின்றி, இந்த வார்த்தை இன்றைக்கு எதிர்மறையானதாக இருக்கிறது. யார் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்ற வித்தியாசம் கிடையாது. இதைப் பயன்படுத்தும் அனைவருமே இதை தவறாக வழிநடத்தும் அல்லது பொய்யான தகவல் என்பதைக் குறிப்பிடுவதற்கே பயன்படுத்துகின்றனர்.

`நெருக்கடி' அல்லது `ஜனநாயக நெருக்கடி'என்பதைக் குறிப்பிடும் தொடர்புகளில் பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

நன்றாக தெரிந்துள்ளபடி, உலகெங்கும் உள்ள செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகள் தங்களைப் பற்றியோ, தங்களுடைய சாதனைகள் பற்றியோ குற்றம் கூறும் எந்த செய்தியாக இருந்தாலும், அதைக் குறிப்பிட இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்திய ஊடகங்களில் `போலிச் செய்திகள்'

இந்த செயல்திட்ட பணிகளின் போதும்கூட, கடந்த சுமார் மூன்று ஆண்டுகளில் இந்திய ஊடகங்களில் `போலிச் செய்திகள்' வெளியிடுவது சுமார் 200 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பதையும், அதில் குறிப்பிட்ட அளவுக்கு மாநிலத் தேர்தல்களின் போது கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா வெளியீடுகளால் முன்னெடுக்கப்பட்டவை என்பதையும், நாங்கள் கண்டறிந்தோம்.

2015 ஜனவரி முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலத்தில், `போலிச் செய்திகள்' குறித்து மொத்தம் 47,5437 செய்திக் கட்டுரைகள் உள்ளன. `போலிச் செய்திகள்' பற்றி ஆங்கில ஊடகங்கள் தான் முதலில் பேசத் தொடங்கி, தொடர்ந்து அதை செய்தியாக்கின. அதைத் தொடர்ந்து சற்று தாமதமாக பிராந்திய மொழி ஊடகங்களும் இதில் ஈடுபட்டுள்ளன.

போலிச் செய்திகள்

அண்மைக் காலமாக `போலிச் செய்திகள்' பற்றிய கருத்தாடல்கள் பெரும்பாலும், அடிக்கடி நிகவும் கொடூரமான வன்மை செய்திகளை சுற்றியே இருக்கின்றன.

இந்த வன்முறையின் மையமாக வாட்ஸப் தளம் பெரும்பகுதியாக இருக்கிறது. ஊடக செய்திகள் `போலிச் செய்திகள்' இணையதளங்கள் அல்லது போலி இணையதள செய்திக் கட்டுரைகளை உண்மையானதைப் போல காட்டுவதாகவோ, அமெரிக்க சூழ்நிலைகளில் உள்ளதைப் போல இங்கு இல்லை.

மிக அண்மைக் காலமாக, இந்தியாவில் `போலிச் செய்தி' விஷயம் தொழில்நுட்பத்தை (அதாவது, வாட்ஸப், முகநூல்) மையமாகக் கொண்டதாகவும், வன்முறையை மையமாகக் கொண்டதாகவும் இருக்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் வன்முறை சேர்ந்தால் இயல்பாகவே சில ஈர்ப்புள்ள தலைப்புகள் கிடைக்கின்றன. இந்தியாவில் ஆங்கில மொழி ஊடகங்களில் `போலிச் செய்திகள்' இடம் பெறுவது பல்வேறு தலைப்புகளில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

ஆச்சர்யத்துக்கு இடமில்லாத வகையில், 15% அளவு `போலிச் செய்திகள்' சர்வதேச விஷயங்கள் பற்றியதாக இருந்தாலும், 46% செய்திகள் உள்நாட்டைச் சேர்ந்தவையாக உள்ளன. இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், `ஊழல்கள் மற்றும் மிரட்டல்கள்' தொடர்பான `போலிச் செய்திகள்' மொத்த அளவில் வெறும் 0.7% என்ற அளவில் தான் இருந்தன.

(பிற்பகுதியில் நாம் காணப் போவதைப் போல, இது, வாட்ஸப் மூலம் பார்வையாளர்கள் பகிரும் தலைப்புகளின் அளவுக்கு நேர் தலைகீழாக இருக்கிறது). `போலிச் செய்திகள்' பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி வெறும் 9% தகவல்கள் இடம் பெறுவது ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. சூழ்நிலையின் சிக்கலைக் காட்டுவதாக இது உள்ளது.

காணாமல் போனது: சாதாரண குடிமக்கள்

போலிச் செய்திகள்

இந்தச் செயல்பாடு குறித்த - ஏராளமான ஊடக கமெண்ட்கள் - அதிகரிக்கும் ஆய்வு - ஆகியவை `போலிச் செய்திகளை' உருவாக்கும் நடிகர்களை பொறுப்பாளியாக்குவதில் கவனம் செலுத்துகின்றன (உதாரணமாக, . Macedonian teenagers from the town of Veles10; அல்லது suspected Russian state actors), `போலிச் செய்திகளை' பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் தளங்கள் (உதாரணமாக, Twitter-ல் உண்மையைவிட பொய்மைகள் வேகமாகப் பரவுகின்றன, பிரேசில் அரசியலில் `விஷம்' செலுத்துவதில் WhatsApp-ன் பயன்படுத்தப்பட்டதற்கான வாய்ப்பு) அல்லது, போலிச் செய்திகளால் `பாதிக்கப்பட்டவர்கள்' - தனிநபர்கள் முதல் சமுதாயத்தினர் வரை, மொத்த ஜனநாயகங்களும்கூட பாதிக்கப்பட்டது பற்றி கவனம் செலுத்துகின்றன. பொருளாதாரம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த ஏராளமான கல்வியாளர்கள், இந்த விஷயத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி, அதிக அளவிலான டிஜிட்டல் தகவல்கள் குவிவது முதல் போலிச் செய்தி உருவாதலின் பொருளாதாரம் வரையில் பல்வேறு அம்சங்கள் பற்றி புரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இதுபற்றிய பல ஆய்வுகளில் தொழில்நுட்பம் அல்லது பயன்பாட்டு தளம் பற்றி கவனம் செலுத்தப்பட்டு, பகுப்பாய்வில் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. அனைத்து பரபரப்பான மற்றும் தீவிரமான ஆய்வு மற்றும் கமெண்டரிகளிலும், அதிகமாக தேடுதலுக்கு உள்படுத்தப்படாத ஒரு விஷயம்: சாதாரண குடிமக்கனின் கருத்து - சொல்லப்போனால், சாதாரண குடிமக்களின் பொறுப்புகள்.

சாதாரண குடிமக்கள் எங்கே வருகிறார்கள், குறிப்பாக ஊடகத்தில், சில நேரங்களில் அவர் தீங்கு செய்யும் நடிகருக்கு டூப் போல தவறுதலாக சித்தரிக்கப்படுகிறார், அல்லது சமூக ஊடகம்/ சாட் ஆப் தகவல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டு, கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அருவருக்கத்தக்க வகையிலும் கெடுதலான செயல்களை செய்யும் அளவுக்கு தள்ளப்படுறார்.

`போலிச் செய்திகள்' செயல்பாடு பற்றி புரிதலுக்கு `சமூக தொழில்நுட்ப அணுகுமுறையை' பயன்படுத்த வலியுறுத்தும், அலைஸ் மார்விக், ஜேம்ஸ் கேரெ -வின் பணிகளை குறிப்பிடும் Wardle & Derakshan- போன்ற ஆய்வாளர்களின் இடைத்தகவல்களுக்குப் பிறகும், `தகவல் தொடர்பின் சம்பிரதாயமான செயல்பாடு' பற்றி நன்கு புரிந்து கொள்ளுமாறு ஆய்வாளர்களை வலியுறுத்திய பிறகும், சாமானிய மனிதர்கள் என்ற அமைப்பை கல்வி ஆய்வுப் பிரிவினரும், பத்திரிகைத் துறையினரும் கவனக்குறைவாக குறைத்து மதிப்பிடுள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். தகவல் தொடர்பை ஒரு கலாசாரமாக கருதும் Wardle & Derakshan - கூட, தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய அரசுகள், ஊடக நிறுவனங்கள், பொது மக்கள் அமைப்பு, கல்வி அமைச்சகங்கள் மற்றும் நிதியளிக்கும் அமைப்புகள் செயல்படுவதற்கான பரிதுரைகளை செய்துள்ள நிலையில், `போலிச் செய்திகள்' பிரச்சினையில் சாதாரண குடிமகனின் பொறுப்பு என்ன என்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

போலிச் செய்திகள்

அவ்வப்போது நடைபெற்ற ஆய்வுகள் `போலிச் செய்திகள்' விஷயத்தில் மக்களின் கருத்து/ பங்கு பற்றி மையக் கருத்து கொண்டு ஆய்வு செய்தது. BBC-யின் வணிகரீதியிலான செய்திப் பிரிவான Global News Ltd தொடங்கிய ஓர் ஆய்வில், APAC பிராந்தியத்தில் 6 நாடுகளில் உள்ள மக்களில் 79% பேர், போலிச் செய்திகள் பரப்பப்படுவது பற்றி `மிகவும் கவலை' கொண்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. BBC உலகசேவைக்காக Globescan அமைப்பு 2017-ன் பிற்பகுதியில் 18 நாடுகளில் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 79% பேர், இன்டர்நெட்டில் எது பொய்யான, எது உண்மையான தகவல் என்பது பற்றி கவலை கொண்டிருப்பது தெரிய வந்தது.

கென்யாவில் Portland நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 87% பேர், `வேண்டுமென்றே போலிச் செய்திகள்' பரப்பப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை மக்கள் அனுபவத்தில் கண்டு வருவது பற்றி இந்த அனைத்து ஆய்வுகளும் சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டின. இருந்தபோதிலும், இவையெல்லாம், குடிமக்களின் செயலூக்கம் மற்றும் பழக்கங்களில், ஏன் அல்லது எப்படி என்பதைவிட `என்ன' என்ற கேள்விகளுக்கே அதிக அளவில் பதிலை தருவதாக உள்ளன. ஆனால், ஆய்வின் களம் கொஞ்சம் புதியதாக இருப்பதால், இந்த ஆய்வுகள் பதில்களைவிட, நிறைய கேள்விகளுக்கே இட்டுச் சென்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆய்வுகள் எழுப்பும் பிரதான கேள்வி, மக்கள் வெளிப்படுத்தும் `கவலை' என்பது சரியாக எதைக் குறிக்கிறது என்ற கேள்வியாக உள்ளது.

அவர்கள் அந்த அளவுக்கு கவலைப் படுகிறவர்களாக இருந்தால், அந்தக் கவலைக்குரிய விஷயம் குறித்து தங்களுடைய பழக்கத்தை அவர்கள் எந்த வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?தொழில்நுட்ப தளங்களில் அவர்களுடைய பழக்கங்களைக் கண்காணிப்பதன் மூலமாகவோ அல்லது தன்மைகளை அறிவதற்காக பெரிய அளவிலான கருத்துக் கணிப்பில் கேள்விகள் கேட்பதால் மட்டுமோ இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட முடியாது. இந்த சாதாரண குடிமக்களின் வாழ்வியலுடன் ஓரளவுக்கு நம்மையும் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமாக, சமூக மற்றும் கலாசார சக்திகள் எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும், அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் லட்சியங்களைப் பற்றியும் புரிந்து கொள்ளத் தொடங்க முடியும். `போலிச் செய்திகளை' பரப்புவது மற்றும் வளர்ப்பதில் அவர்களுடைய பங்கு, மற்றும் அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எங்கே செல்கிறது இந்தியா?

போலிச் செய்திகள்

பல ஆய்வுத் திட்டங்கள் மற்றும் அறிக்கைகளில் முக்கியமாக மக்களைப் பற்றிய இடைவெளி இருப்பதுடன், வெளியிடப்பட்ட அல்லது பொதுவெளியில் கிடைக்கும் ஆய்வறிக்கைகள் அமெரிக்காவிலும், ஓரளவுக்கு ஐரோப்பாவிலும் இருக்கின்றன. `போலிச் செய்திகள்' பற்றியும் உலகம் முழுக்க அதன் பின்விளைவுகள் பற்றியும் செய்திகள் உள்ளபோதிலும், உலகெங்கும் பல நாடுகளில் அந்தந்தப் பகுதி ஊடகங்களில் இந்தப் பிரச்சினை பற்றி விரிவாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அந்த நாடுகளில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கை இதே அளவுக்கு இல்லை.

இந்தியாவில் பெரும்பகுதி கருத்தாடல்கள் ஊடகங்களில் செய்யப்பட்டுள்ளனவே தவிர, கல்வி நிலையங்களிலோ அல்லது சிந்தனை அரங்குகளிலோ இதுபற்றிப் பேசப்படவில்லை. செய்திகள் வேகமாகப் பரவும் நிலையில், ஆய்வுகள் மெதுவாகத்தான் நடக்கின்றன. ஆனால் பின்தங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது; பத்திரிகையாளர்கள் எழுதும் முதலாவது வரைவு வரலாறு, இந்தச் செயல்பாட்டின் இறுதித் தீர்ப்பாக அமைந்துவிடக் கூடாது.

தனிப்பட்ட WhatsApp மற்றும் Facebook பதிவுகளில் என்ன நடக்கிறது?

ரகசியமான வழிமுறையில் தனிப்பட்ட நெட்வொர்க்- குகள் மூலமாக (உதாரணம் Facebook, WhatsApp) பார்வையாளர்களின் பழக்கம் குறித்து புலனாய்வு செய்வதற்கு வழிமுறை சார்ந்த/ கணினிமயம் சார்ந்த / தானாக செயல்படும் உத்திகள் எதையும் ஆய்வாளர்கள் பயன்படுத்துவது சாத்தியமற்றது.

மக்களின் அந்தரங்கம் உறுதி செய்யப்பட வேண்டியிருப்பதால் இது சாத்தியமற்றதாகிறது. இதன் விளைவாக, தகவல்களை, குறிப்பாக `போலிச் செய்திகளை' மக்கள் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள், என்ற விஷயத்தைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பது, தளங்களின் பகுப்பாய்வு நடைமுறைகளுக்கு உள்பட்ட விவரங்களை வைத்து தான். குறிப்பாக வாட்ஸப் மற்றும் முகநூலைப் பொருத்த வரை இந்தச் சூழ்நிலை குழப்பமானதாக இருக்கும்.

பதிவுகளில் அல்லது பயனாளர்களின் குழுக்களில் வரும் தகவல்களில் என்ன விஷயம் இருக்கிறது என்று அதிகம் தெரிந்திருக்கும் என்று சொல்வதற்கு இல்லை.

வாட்ஸப் மூலம் தகவல்களைப் பகிர்வதற்கு மக்கள்ல் பயன்படுத்தும் உத்திகளைப் பற்றி தெரிந்திருக்கும் என்பதும் கிடையாது. வாட்ஸப்பை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், இந்தியாவில் `போலிச் செய்திகள்' மற்றும் வன்முறை செய்திகளின் மையமாக அது இருந்து வருகிறது.

போலிச் செய்திகள்

ஆனால், என்ன காரணத்தால் அந்த நிலையை வாட்ஸப் பெற்றது என்று முழுமையாக விளக்கப்படவில்லை. அல்லது, முகநூல் அல்லது ட்விட்டரைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது தளங்களைப் பற்றிப் பேசினால், என்ன தேவைகளுக்காக, எப்படி சாதாரணக் குடிமக்கள் இந்தத் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள், `போலிச் செய்திகள்' என்ற விஷயத்தில் அது எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரியவில்லை.

விஷயங்களின் அடிப்படையில், இந்த வலைப்பின்னல்களுக்குள், இந்தத் தகவல்களை வகைப்படுத்துவதற்கான திட்டங்கள் இருந்தாலும், அவற்றை வகைப்படுத்துவதற்கு அதிகம் முயற்சி எடுக்கவில்லை என்று கிடையாது.

உதாரணமாக : Qiu, Xiaoyan, Oliveira, Diego F. M., Shirazi, Alireza Sahami, Flammini, Alessandro Menczer, Filippo ஆகியோர் தனிநபர் கவனம் மற்றும் குறைந்த தரம் கொண்ட தகவல்கள் ஆன்லைனில் வைரலாவது என்ற அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர் (Nature Human Behavior, 2017), 1-132.

உதாரணமாக, இங்குள்ள தலைப்பு `WhatsApp எப்படி இந்திய கிராமத்தை கொலை செய்யும் கும்பலாக மாற்ற உதவியது' How WhatsApp helped turn a village into a mob என்று சொல்கிறது.

இங்கே கிடைக்கும்: https://portland-communications.com/pdf/The-Reality-of-Fake-News-in-Kenya.pdf விஷயங்கள் வேண்டுமென்றே பொய்யாக தரப்பட்டவை என்பதை கருத்து தெரிவித்தவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும் என்ற கேள்விக்குள் ஆய்வு செல்லவில்லை.

இது இப்படி இருந்திருக்க வேண்டும் - தன்மை குறித்த கருத்துக் கணிப்புகள் மற்றவற்றைவிட சில கேள்விகளுக்கு நல்ல பதிலைப் பெறுபவையாக இருக்கின்றன. இருந்தபோதிலும், தன்மை குறித்து ஆன்லைனில் ஆய்வுகள் நடத்துவது முன்பைவிட எளிதானதாகவும், வேகமானதாகவும் இருக்கிறது; இதுபோன்ற விஷயங்களில் மற்றவர்களைவிட எளிதில் செய்தி தருவதற்கு பத்திரிகையாளர்கள் கையாள்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தன்மைகள் குறித்த கருத்துக் கணிப்புகள், அவை வடிவமைக்கப்பட்ட தேவைகளுக்கு அல்லாத வகையில் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன.

`கவலை' என்பது வழக்கமாக சில வகையான மாற்றங்களுக்கு, முதலில் தனிப்பட்ட ஒருவரின் உள்ளார்ந்த நிலைப்பாடு மற்றும் பிறகு அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளில் கொண்டு செல்லும் என்று நாங்கள் அனுமானித்துக் கொள்கிறோம். இது தவிர்க்க முடியாதது, இப்போதுள்ள மக்களின் பழக்கம் என்று வாதிடுபவர்களின் கருத்துகளை, உதாரணமாக, பருவநிலை மாற்றம் என்ற பிரச்சினை தொடர்பாக மனப்போக்கு மற்றும் பழக்கத்திற்கு இடையில் வித்தியாசம் உள்ளதற்கு நிறைய ஆதாரம் இருப்பதைப் போல, இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். (`Wall-E's திரைப்படத்தில் வருவது போல எதிர்கால மனிதர்கள், பின்னால் நடக்கவிருப்பதை கூறுபவர்களாக இருக்கலாம் என்ற வருத்தமான முடிவுக்கு எங்களை அழைத்துச் செல்வதாக இது இருக்கிறது....... )

போலிச் செய்திகள்

அரசு/ அதிகாரிகளின் தவறான தகவல்கள் பற்றி ஆராய்ச்சி ஆய்வுகள் பரிசீலிக்கின்றன. அதில் இந்தியாவும் உள்ளது. உதாரணமாக : ஆய்வு பணித்திட்டம்

அந்தரங்கம் மற்றும் தொழில்நுட்ப தளங்களில் தகவல் சேகரிப்பு என்ற அடிப்படை விஷயங்கள் பற்றி இந்த அறிக்கையில் விவாதங்களில் நாங்கள் ஈடுபடவில்லை.

உண்மையில் அவர்களுக்கு அவ்வளவு கவலை இருக்குமானால், அதுகுறித்த எதிர்வினையாற்றுவதில் தங்களுடைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக் கொண்டார்களா? தொழில்நுட்ப தளங்களில் அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதன் மூலமாகவோ, பெரிய அளவில் தன்மைகளை அறியும் கருத்துக் கணிப்பில் சில கேள்விகளை கேட்பதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு பதில் கண்டறிவது மிகவும் சிரமம்.

இந்த சாதாரண குடிமக்களின் வாழ்வுடன் ஓரளவுக்கு நாமும் இயைந்து செயல்படுவதன் மூலம், சமூக மற்றும் கலாசார சக்திகள், அவர்களுடைய விருப்பங்கள், லட்சியம் குறித்த ஆசைகள் போன்றவை, `போலிச் செய்திகளை' பரப்புவதில் அவர்கள் பங்காற்றுவதில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை ஓரளவுக்கு நாம் புரிந்துகொள்ளத் தொடங்க முடியும்.

இந்த அறிக்கையில் `போலிச் செய்தி' என்று சொல்லும்போது நாங்கள் எதைக் குறிப்பிடுகிறோம்?

முந்தைய பகுதிகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு, `போலிச் செய்திகள்' என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் - தவறாகப் பயன்படுத்துபவர்கள் - பல வகையினராக உள்ளனர். உயர் தரத்திலான ஆய்வுக்கு, அதன் பொருளைப் பற்றிய சரியான வரையறை செய்வது முக்கியம் என்பதால், சாதாரண குடிமக்கள் இந்த வார்த்தையை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதும் இந்தச் செயல்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

வார்ட்லேவின் வகைப்படுத்தல்களில் `தவறான மற்றும் கெடுதலான தகவல்கள்' என்பது ஏழு வகைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. நையாண்டி/ போலியான நையாண்டி, தவறாக வழிநடத்தும் விஷயம், தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள், போலியாக உருவாக்கப்பட்ட விஷயங்கள், பொய்யான தொடர்புள்ளவை, பொய்யான விஷயங்கள், திரிக்கப்பட்ட விஷயங்கள் ஆகியவை நிச்சயமாக ஓர் ஆரம்பப் புள்ளிகளாக உள்ளன.

இருந்தபோதிலும், `போலிச் செய்திகளை' தவறான, கெடுதலான, பொய்யான தகவலுக்கான நோக்கம் என்று வகைப்படுத்துவது பிரச்சினைக்குரியதாக இருக்கும் என்று தோன்றுகிறது. வெளிப்படுத்தலைக் கொண்டு, நோக்கத்தை முடிவு செய்வது- இதழியலில் அறிந்தவரை- எளிதான காரியம் அல்ல. `ஏமாளியாக்கும் தன்மை கொண்டது'என்பதால் போலியான நையாண்டி என்பதை நையாண்டி/ தவறான/ கெடுதலான தகவல்களின் குவியலில் சேர்ப்பது எங்களுக்கு சவுகர்யமானதாகத் தெரியவில்லை; வரலாற்று ரீதியாக சக்திமிக்கவர்களுக்கு எதிராக பலவீனமானவர்களின் ஆயுதமாக நையாண்டித்தனம் இருந்து வந்திருக்கிறது என்பதுடன் மட்டுமின்றி, நையாண்டி மூலமாக பெரும்பாலான மக்கள், பெரும்பாலான விஷயங்களில் `ஏமாளியாக்கப்' படுவதில்லை என்று நாங்கள் சந்தேகித்தோம்.

போலிச் செய்திகள்

பட மூலாதாரம், WILLIAM WEST/AFP/GETTY IMAGES

இந்த அறிக்கையில் நாங்கள் `போலிச் செய்திகள்'30 என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். `தவறான தகவல்/ பொய்யான தகவல்/ கெடுதலான தகவல்'31, `குப்பைச் செய்திகள்'32, அல்லது `பிரச்சாரம்' என்பதும் கூட, - இவை என முன்வைக்கப்பட்ட மற்ற வகையான வார்த்தைகளுக்கு எதிராக இருப்பது இதற்குக் காரணமாக உள்ளதுடன், மார்விக் முன்வைக்கும் வாதங்களில் பலவற்றுடன் ஒத்துப்போவதும் இதற்குக் காரணமாக இருக்கிறது.

இருந்தபோதிலும், கரோலின் ஜேக் கருத்துகளை மார்விக் பயன்படுத்தினாலும், `பிரச்சினைக்குரிய தகவல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விரும்புகிறார். சமூகத்தின் கண்ணோட்டத்தில்34 தொடங்குவதாக இந்த ஆய்வுத் திட்டம் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக `போலிச் செய்திகள்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு நாங்கள் அழுத்தமாக இருக்கிறோம். பிற்பகுதியில் நாம் காணப் போவதைப் போல இதன் முடிவு அங்கே இருக்காது என்றாலும், சரியற்ற அல்லது தவறாக வழிகாட்டும் தகவல்களை (இன்னும் பலவற்றையும்) குறிப்பிடுவதற்கு சாதாரண குடிமக்கள் பயன்படுத்தும் வார்த்தையாக - நல்லதற்காகவோ அல்லது கெடுதலுக்காகவோ- `போலிச் செய்திகள்' என்ற வார்த்தை உள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், இந்த வார்த்தையை நாங்கள் பயன்படுத்துவதற்கு இதுதான் பிரதானமான காரணம்- மற்றபடி அனுபவ அறிவின் அடிப்படையில் அல்ல. போலிச் செய்திகளை குடிமக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ள நிலையில், வெளியான செய்திகளில் அல்லது தனியார் நெட்வொர்க் -களில் வெளியான விஷயங்களை பகுப்பாய்வு செய்வதில் அவர்களுடைய வரையறைகளை நாங்கள் பயன்படுத்தவில்லை.

புதிய கட்டுரைகளை பொய்யானவை என்று கூறுவதன் உண்மைத்தன்மையை மதிப்பீடு செய்வதற்கு, இந்தியாவில் உண்மையறிதலுக்கான altnews, boomlive போன்ற இணையதங்களைப் பயன்படுத்தினோம். தனியார் நெட்வொர்க் வெளியிட்ட விஷயங்களின் பல்வேறு செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து, இந்த ஆய்வுத் திட்டத்தின் ஆய்வாளர்களும் மதிப்பீடு செய்தார்கள்.

அப்போது, போலிச் செய்தி என்பதற்கு எங்களுடைய வரையறை பின்வருமாறு இருந்தது : எந்த வகையில், எந்த வடிவத்தில், எந்த தளத்தில் வெளியிடப்பட்டதாக இருந்த தகவல்களாக இருந்தாலும், உண்மைக்கான ஆதாரங்கள் இல்லாதவையாக இருப்பவை இந்த வகையைச் சேரும். அதாவது, போலிச் செய்திகள் என்பதற்கு வரையறையின் ஆரம்பப் புள்ளி, இணையதளங்களில் உள்ள செய்திக் கட்டுரைகளைக் கடந்ததாக உள்ளது.

இவை இணையதள முகவரிகளைக் கொண்டு, இன்டர்நெட்டில் எங்காவது பெறப்பட்டதாக, அதே இணையதள முகவரியைக் கொண்டு சமூக ஊடக தளங்களில் பகிரப்படக் கூடியவையாக இருந்தன. தகவல்களைப் பகிரும் அனைத்து வகையான தளங்களையும், தெரிந்தே நாங்கள் இதில் சேர்த்திருக்கிறோம்.

இந்தியாவில் தனியார் நெட்வொர்க் மூலமாக தகவல்களைப் பகிர்வது, மேலே வரையறை செய்தவாறு செய்திக் கட்டுரைகளாக இல்லை என்றும், உருவங்கள், படங்கள், மீம்ஸ்கள் போன்றவை மூலம் அதிகம் பகிரப்படுவதாகவும் உள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்பதே இதற்குப் பிரதான காரணமாக இருந்தது.

போலிச் செய்திகள்

பட மூலாதாரம், SEAN GALLUP/GETTY IMAGES

இங்கே நாங்கள் பிரதானமாக முகநூல் மற்றும் ட்விட்டரை குறிப்பிடுகிறோம். வாட்ஸப் -க்கு அடிப்படை பகுப்பாய்வு நடைமுறைகள் கூட கிடையாது, அல்லது குறைந்தபட்சம் பரவலாக இது கிடைக்கவில்லை - உருவாக்கப்பட்ட அடிப்படையின் கண்ணோட்டத்தில், இது ஓர் அம்சம், இது ஒரு பிழை அல்ல. பயனாளர் அந்தரங்கத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும், விளம்பரத்தில் ஆர்வம் இல்லாததாகவும் உள்ளது. உதாரணத்துக்கு இதைக் காண்க,

  • கார்டியன் செய்தி
  • இதைக் காண்க: https://www.nytimes.com/2018/06/25/reader-center/donald-trump-lies-falsehoods.html
  • Wardle, Claire, Derakhshan, Hossein . Information Disorder (Strasbourg, France: Council of Europe, 2017) பக்கம் 17
  • ஒரு வார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்ற காரணத்துக்காக, அதை நாம் பயன்படுத்தக் கூடாது என்று அர்த்தமல்ல என்று science -ல் ஒரு கட்டுரையில் முன்னணி சமூக விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். காண்க : போலிச் செய்தி அறிவியல்

இந்த ஆய்வுத் திட்டத்தை அணுகுதல்: சாதாரண குடிமக்கள், பகிர்தல் மற்றும் சரிபார்த்தல்

நெட்வொர்க் மூலமாக போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு சில அடிப்படை சூழ்நிலைகள் தேவைப்படுகின்றன என்பதைக் கவனிப்பது, இந்த ஆய்வுத் திட்டத்தின் தொடக்கம் இருந்தது. யாராவது ஒருவர் போலிச் செய்தியை உருவாக்குபவர் இருந்திருக்க வேண்டும்.

அதைப் பரப்புவதற்கு தொழில்நுட்பமும், தளங்களும் நிச்சயமாக தேவைப்படும். ஆனால், ஒரு முக்கிய விஷயமும் தேவைப்படுகிறது: தங்களுடைய தொடர்புப் பின்னல்களில் (network) பரப்புவதற்கு சாதாரண குடிமக்கள் தேவை. சரிபார்த்தல் இல்லாமல் பரவுவதற்கு இந்த விஷயங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.

அந்த நிலையில், பின்வரும் முக்கியமான கேள்வியைப் புரிந்து கொள்ளாமல், போலிச் செய்திகள் என்ற விஷயத்தைப் புரிந்து கொள்வது முழுமையற்றதாகத் தோன்றியது: சாதாரண குடிமக்கள் சரிபார்த்தல் செய்யாமல், போலிச் செய்திகளை ஏன் பகிர வேண்டும்? அவர்கள் `உண்மைத் தன்மைகள்', `துல்லியம்' அல்லது `உண்மையைப்' பற்றியோ கூட அக்கறை கொள்வதில்லை என்பது தான் மிக எளிதான காரணம் என்பதே பதிலாக இருக்கிறது.

சாதாரண குடிமக்கள் பரப்பும் பெரும்பாலான போலிச் செய்திகள் அவதூறு செய்பவையாக அல்லது கெடுதல் செய்யக் கூடியது, அல்லது மாநில நபர்களின் அவதூறுகளுக்கு பதில் தருவதாக இருக்கின்றன என்பதற்கும் அதே அளவு வாய்ப்புகள் உள்ளன.

போலிச் செய்திகளுக்கான தேவைகளை விளக்க வேண்டியதை விட்டுவிட்டாலும், மேலே குறிப்பிட்ட இந்த அனுமானங்கள் எல்லாம், ஆய்வாளர்களான எங்களுக்குப் போதுமானவையாக இல்லை.

இன்னும் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, இந்த ஆய்வுத் திட்டத்தில் எங்களுடைய கவனம் மாநிலத்தவர்களோ அல்லது அரசு பிரச்சார திட்டங்களோ அல்ல. சாதாரண குடிமக்களின் செயல்பாடுகள் பற்றி கவனத்தை திருப்புவது தான் இந்த ஆய்வுத் திட்டத்தில் எங்கள் நோக்கம். போலிச் செய்திகள் என்ற செயல்பாட்டை, முழுக்க தொழில்நுட்ப செயல்பாடாக இல்லாமல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய சமூக- கலாசார மற்றும் சமூக - அரசியல் செயல்பாடாகப் புரிந்து கொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்.

இந்த ஆய்வுத் திட்டத்தில், இதன் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு பிரிட்டிஷ் கலாச்சார கல்வி ஆராய்ச்சி பாரம்பர்யத்தை38 நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஆனால் குறிப்பாக, சாதாரண குடிமக்களால் போலிச் செய்திகள் பரப்பப்படுவது, ரகசிய வழிமுறையைப் பின்பற்றும் முகநூல் தொடர்புப் பின்னல்களிலும், வாட்அப் தொடர்புகளிலும் பரப்பப்படுவதை இதனுடன் சேர்த்துப் பார்த்தோம். குறிப்பாக, சரிபார்த்தல் இல்லாமல் இவை பகிரப்படுகின்றனவா, ஏன் அப்படி பகிரப்படுகின்றன என்பதை அறிவது எங்கள் நோக்கமாக இருந்தது.

குடிமக்களின் குறிப்பிட்ட சமூக கலாச்சார சூழ்நிலைகளில், இவை பகிரப்படும் செயல்பாடுகளை கண்டறிய நாங்கள் முயற்சி செய்தோம். எனவே, மக்கள் மற்றும் இயல்பு, விஷயம், அவர்கள் பகிரும் தகவல்களின் அமைப்பு ஆகியவற்றில் நாங்கள் இந்த ஆய்வில் தொடங்கினோம்.

ஆனால், பிரதானமாக முகநூல் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை அவர்கள் பயன்படுத்தும் விதம் பற்றி தீவிரமாக கவனித்தோம். தளங்களைக் கவனிப்பதுடன் பொய்த் தகவல்களை பரப்பி பெரிதாக்குபவர்கள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் பற்றி கவனம் செலுத்தினோம்.

  • அரசியல்
  • செய்தி ஊடகம்
  • சமூகம் & கலாசாரம்
  • தகவல்கள்
  • மக்கள்
  • தளங்கள்
  • பெரிதாக்குபவர்கள்

எந்த ஒருவரும் ஒப்புக்கொள்வது பற்றி யோசிப்பதைவிட, கலந்துரையாடலுக்கான பல வட்டங்களில் அதிகமாகக் காணப்படுவது

ஊடகங்களின் தாக்கம் குறைந்தபட்சம் தான் என விவாதிக்காமல். உண்மையில், மக்களின் பழக்கத்தின் மீது அவர்களுடைய பின்னல் தொடர்புகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்வது, இந்த ஆய்வுத் திட்டத்தின் மையமான நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

`பெரிதாக்குபவர்கள்' என்று எதைச் சொல்கிறோம் என்பதை அறிக்கையின் கடைசி பகுதியில் நாங்கள் விவரித்திருக்கிறோம்.

இந்த ஆய்வுத் திட்டம், விஷயங்களைத் தோண்டி எடுக்கும் இயல்பைக் கொண்டதாக, போலிச் செய்திகள் என்ற செயல்பாடு குறித்து `தீவிர' விவரிப்புக்கு நெருக்கமாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. இருந்தபோதிலும், தோண்டிப் பார்க்கும் இயல்பாக இருக்கும்போது, களப்பணியின் அளவு மற்றும் ஆழம் காரணமாக, பல முடிவுகளில் இது உறுதியாக இருக்கிறது. `போலிச் செய்திகள்' பற்றி ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் அல்லது இந்த விஷயத்தில் இந்தியாவில் பரவலாக இந்த அறிக்கையை படிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, கல்வி நிலைய ஆராய்ச்சியாளர்களைத் தான் மனதில் இலக்காகக் கருதிக் கொண்டோம். ஆய்வுக்குரிய பல தளங்களில் ஆழமாகப் பார்ப்பது, ஆய்வு மேற்கொள்வது ஆகிய செயல்பாடுகளைத் தூண்டுவதாக இந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த அறிக்கையை தயாரிக்கும்போது பல்வேறு துறைகளில் இருந்து கருத்துகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

போலிச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

ஆய்வு நெறிமுறை மற்றும் ஆய்வு செயல்முறை

சரிபார்க்காமல் போலிச் செய்திகளை குடிமக்கள் ஏன் பரப்புகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க இந்த ஆய்வுத் திட்டத்தில் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம் - போலிச் செய்தி சமபன்பாடு பற்றி சிறிதளவு தான் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த ஆய்வுத் திட்டம் குறுகிய காலத்தில் முடிக்கப் பட்டிருக்கிறது.

தொடங்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அதாவது, நாங்கள் பதில் அறிய விரும்பிய அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் பதில் கண்டுபிடிக்க முடிந்ததாகச் சொல்ல முடியாது. ஆய்வுக்கான அனைத்து நெறிமுறைகளையும் எங்களால் பயன்படுத்த முடியவில்லை.

போலிச் செய்தி செயல்பாடு என்பது, சொல்லப் போனால் மிகவும் புதியதாகவும், இன்னும் நன்கு புரிந்துகொள்ளப் படாததுமாகவும் இருப்பதால் இந்தப் பிரச்சினையை அணுகும் முறையை முடிவு செய்வது முக்கியமானதாக இருந்தது. ஒரு செயல்பாடு புதியதாகவோ அல்லது நன்கு புரிந்துகொள்ளப் படாததாகவோ இருந்தால், தரமான ஆய்வு உத்திகள் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

இந்த உத்திகள் - இந்த விஷயத்தில், ஆழமான நேர்காணல்கள் மற்றும் பகிர்தல் பழக்கங்களை நெருக்கமாக கவனித்தல் - ஆகியவை போலிச் செய்திகளின் நுணுக்கங்கள், விஷயங்கள் மற்றும் ஆழத்தை தீவிரமாக கவனிக்க எங்களுக்கு உதவியாக இருந்தன. வாட்ஸப் போன்ற, பகிரும் தகவல்களை ரகசிய குறியீடுகளாக அனுப்பும் வசதி உள்ள தனிப்பட்ட பின்னல் தொடர்புகளில் என்ன விஷயங்கள் பரவுகின்றன, பாதியளவு இன அமைவியல் அணுகுமுறையில் எப்படிபரவுகின்றன - இந்த விஷயத்தில் மக்களை சந்திப்பது - அவசியமானவையாக இருந்தன. தனிநபர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், இப்போதுள்ள நிலைக்கு அவர்கள் வந்ததன் வழிமுறைகள் மற்றும் பின்னணி ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவும் இது எங்களுக்கு உதவியது. தங்களைச் சுற்றியுள்ள சமூக மற்றும் கலாசார சக்திகளுடன் எப்படி அவர்கள் போட்டியில் இருந்தார்கள் என புரிந்து கொள்ளவும் உதவியது.

நாங்கள் பெரிய அளவிலான கருத்துக் கணிப்புகள் பற்றி விவாதித்தோம். ஆனால் ஆய்வுக்கான நெறிமுறையானது கருத்துப் படிமங்களின் வரையறை மற்றும் புத்திசாலித்தனமான ஆதாரங்களைப் பின்பற்றியதாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கைக்கு நாங்கள் வந்தோம்.

போலிச் செய்திகள்

முதலில் பார்வையாளர்களின் மனநிலையை ஆழமாக, குறிப்பாக `போலிச் செய்திகள்' என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என குடிமக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்பது எங்களுடைய ஆர்வமாக இருந்தது. எனவே இந்த ஆய்வுத் திட்டத்துக்கு கருத்துக் கணிப்பு வழிமுறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

மேற்பொருந்தும் ஆறு நிலைகளில் களப்பணி மற்றும் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன (ஆய்வு நெறிமுறையின் ஒவ்வொரு நிலை பற்றியும் மேலும் விவரங்களுக்கு ஆய்வு நெறிமுறை பிற்சேர்க்கையில் பார்க்கவும்):

நாங்கள் இதழியல் நிறுவனத்தில் பணியாற்றுவதாலும், சார்ட்கள் மற்றும் கிராப்-கள் மூலம் முடிவுகள் காட்டப்பட்டுள்ள ஆய்வு பற்றி செய்தியாக்குவது செய்தியாளர்கலுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக நாங்கள் கவனித்திருப்பதாலும் அப்படியிருக்கவில்லை.

1. கருத்து தெரிவிப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புதல் படிவங்கள் கையெழுத்திடப்பட்டன. சமூக, அரசியல், வயது, பாலின மற்றும் பொருளாதார பின்னணிகளில் மாறுபட்ட கலவையாக, கருத்து தெரிவிப்பவர்கள் இருந்தார்கள். தங்களுடைய வாட்ஸப் மற்றும் முகநூல் பதிவுகளில் ஆர்வமான விஷயங்களாகக் கண்ட விஷயங்களையும் தங்களுடைய பின்னல் தொடர்புகளில் பகிர்ந்த விஷயங்களையும் ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு முதலில் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களிடம் போலிச் செய்தி என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பதில் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். ஏனென்றால், கருத்து தெரிவிப்பவர்கள் எது பொய், எது பொய்யல்ல என்பதைக் கண்டறிய முடியும் நிலையில் இருந்தார்களா என்பதையும், எதை பொய்யானவை என குறிப்பிடுகிறார்கள் என்பதையும் கண்டறிவது எங்களுடைய முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

2. அவ்வாறான பகிர்வுகளுக்குப் பிறகு ஏழு நாட்கள் கழித்து, கருத்து தெரிவிப்பவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்து வயது வந்த நிலையை எட்டியது வரையிலான பருவம் வரையிலான வாழ்க்கை முறை, அவர்களுடைய செல்வாக்கு நிலை, அவர்களின் முன்மாதிரிகள், பிடித்தவை, பிடிக்காதவை என அவர்களுடைய வாழ்வில் பல்வேறு அம்சங்களைத் தொடும் வகையில் ஆய்வாளர்கள் , அவர்களுடைய வீடுகளில் ஆழமாக விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.

மாறிவரும் சூழ்நிலைகளில் அவர்களுடைய எண்ண ஓட்டங்கள், செய்திகளை அறியும் நிலை, டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் அளவு, அவர்களின் சமூக, கலாசார மற்றும் அரசியல் எண்ணங்கள் மற்றும் பகிர்தல் செயல்பாடு என கலந்துரையாடல் நடத்தி கடைசியாக போலிச் செய்திகள் என்ற தலைப்புக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது, அதன் நிறைவில், தங்களுடைய வாட்ஸப் மற்றும் முகநூல் பதிவுகளில் உள்ள விஷயங்களைக் காட்டுமாறு கருத்து தெரிவிப்பவர்களை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். எதை அவர்கள் பகிர்ந்திடுவார்கள், எதை பகிர்ந்திட மாட்டார்கள், அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் கலந்துரையாடினார்கள்.

மேலும், போலிச் செய்தி என தெரிந்த தகவல்களை அவர்களிடம் காட்டி, இவை நம்பகமானவையா என தெரியுமா தெரியாதா என்றும், அப்படி சொல்வதற்கான காரணம் என்ன என்றும் கேட்கப்பட்டது. அதுபற்றி ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இறுதியில் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

போலிச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இது ஆய்வுக்கான புதிய விஷயமாக இருப்பதால் - களக் கோட்பாடு அணுமுறையை பயன்படுத்தி நேர்காணல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. தகவல்களைப்பகுப்பாய்வு செய்ததன் மூலம் கிடைத்த முடிவுகளுடன், இந்த முடிவுகள் இணைக்கப்பட்டன.

3 பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் ஒருபுறம் சமிக்ஞைகள் மற்றும் குறியீடுகளை ஓரளவுக்கு ஆய்வு செய்பவர்களைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதேசமயத்தில் இயந்திரமய வழிமுறைகளில் தகவல் தொகுப்பு நிபுணர்கள் மூலமும் ஆய்வு செய்யப்பட்டன. தகவல்களின் தொனி, விஷயம், நடை, கட்டமைப்பு ஆகியவை குறித்து இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.

4. இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஊடகங்களில் வெளியான போலிச் செய்திகளை எடுத்து, பகுப்பாய்வு செய்வதற்கு தகவல் தொகுப்பு அறிவியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

5. 3 மற்றும் 4வது நிலைகளில் போலிச் செய்திகளுக்கான தகவல் ஆதாரங்களின் பட்டியல்கள் உருவாக்கப்பட்ட பிறகு, போலிச் செய்திகள் மற்றும் அவற்றைப் பெரிதாக்குபவர்களுக்கான ட்விட்டர் பின்னல் தொடர்புகள் மேற்பொருத்தி பார்க்கப்பட்டன. இதுபோன்ற தொடர்புகளைப் பயன்படுத்தும் முகவர்களைப் புரிந்து கொள்வதற்கு, குழு சேர்ப்பு பகுப்பாய்வும் நடத்தப்பட்டது.

6. போலிச் செய்திகளுக்கான தகவல் ஆதாரங்கள் மற்றும் நேர்மையான செய்திகளுக்கான தகவல் ஆதாரங்களின் நம்புபவர்களுக்கு இடையில் உள்ள நெருக்கத்தின் பலத்தைப் புரிந்து கொள்வதற்கும், இந்த பல்வேறு சமூகத்தினரின் பின்னல் தொடர்பு வரைபடத்தை தயாரிக்கவும், பொதுவெளியில் உள்ள முகநூல் விளம்பர தகவல் பயன்படுத்தப்பட்டது.

அதாவது, இறுதியில் இந்த ஆய்வுத் திட்டம் பன்முக ஆய்வு நெறிமுறைகளைப் பயன்படுத்துவதில் சென்று முடிந்தது:

ஆழமான இல்ல தரம் சார்ந்த மற்றும் ஓரளவு சமிக்ஞை குறியீடு அணுகுமுறைகள்: இந்தியாவில் 10 நகரங்கள் மற்றும் 40 தனிநபர்களிடம் இல்லத்தில் ஆழமான நேர்காணல்கள் 120 மணி நேரத்துக்கும் அதிகமான அளவு நடத்தப்பட்டன. நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், சிறிய நகரங்கள், மெட்ரோ நகரங்கள் என கலவையாக தேர்வு செய்து நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், விஜயவாடா, ராய்ப்பூர், உதய்ப்பூர், அமிர்தசரஸ், வாரணாசி நகரங்களில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. கருத்து தெரிவிப்பவருக்கு மிகவும் சவுகரியமாக இருந்த மொழியில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

இது பெரும்பாலும் அந்தப் பகுதியின் உள்ளூர் மொழியாக இருந்தது. நேர்காணல்கள் படியெடுத்து எழுதப்பட்டன, மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டன. கலந்துரையாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன், இல்லங்களில் எடுக்கப்பட்ட ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள், விடியோக்களும் பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டன.

தானே அறியும் இனஅமைப்பியல் முறை: போலிச் செய்தி தகவல்களின் குவியலை சேகரித்தல்

ஓரளவுக்கு சமிக்ஞை குறியீடுகள் பகுப்பாய்வு: போலிச் செய்தித் தகவல்களின் சமிக்ஞைகள், குறியீடுகள், கட்டமைப்புகளைப் புரிந்து கொள்தல்.

பெரிய அளவில் தகவல்/பின்னல் தொடர்பு பகுப்பாய்வு: 16,000 ட்விட்டர் கணக்குகள் (370,999 உறவுகள்) அளவில்; 3,200 முகநூல் பக்கங்கள் & அக்கறையான விஷயங்கள் செய்திகளை ஆய்வு செய்தல் மற்றும் தலைப்புகளை வடிவமைத்தல்: ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் போலிச் செய்திகள் பற்றி வெளியான ஊடக ஆய்வுகள், மொத்தம் 47,543.

இந்த அனைத்து நிலைகளிலும் கண்டறியப்பட்ட விஷயங்கள் - ஆய்வுக் குழு/ இப்போதைய தகவல்கள் பரிசீலனை மூலம் தெரிந்து கொண்ட விஷயங்களை - ஆய்வுக் குழுவினர் ஒன்றாகச் சேர்த்து, ஆரம்பநிலை முடிவுகளை உருவாக்கினர். இறுதியாக நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த அறிக்கையில் பின்பற்றப்பட்டன.

இந்த அறிக்கையைப் படிப்பதற்கு நேரம் செலவிட்டமைக்கு, உங்களுக்கு நன்றி.

(தொடரும்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியப்பணி பற்றிய குறிப்பு:

இது உண்மையில், உலக சேவை பார்வையாளர்கள் ஆய்வுக் குழு மற்றும் அதன் பங்காளர் அமைப்புகள் இணைந்த கூட்டு முயற்சியின் திட்ட அறிக்கை தான்.

இந்த அறிக்கையில் உள்ள சிந்தனைகள், வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் பல இடங்களில் இருந்து வந்தவை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தனி நபர்களுடனான கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மூலமாகவும், எங்களுடைய அனைத்து பங்காளர் அமைப்புகளுடனும் நடந்த விவாதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்டவையும் இதில் அடங்கும்.

குறிப்பாக, எங்களுடைய ஆய்வு பங்காளர் அமைப்புகளுக்கு இதன் நன்மதிப்பை அளிப்பதற்கு, முதன்மை கட்டுரையாளர் விரும்புகிறார்.

முதலில் The Third Eye, எங்களுடைய தரம் அளவிலான ஆய்வுப் பங்காளர் - அதன் பல வாக்கியங்கள் - உள்ளார்ந்த பகுப்பாய்வு - ஆகியவை அறிக்கையின் முக்கியமான பகுதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இரண்டாவதாக, Synthesis, எங்களுடைய புள்ளிவிவர அறிவியல் பங்காளர், அதிநவீன தொழில்நுணுக்கங்களை அளித்தவர்கள் - மிகவும் சிக்கலான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விளக்கங்களை அளித்தவர்கள் - இவர்களுக்கு நன்மதிப்பை அளிக்க விரும்புகிறார். இருந்தபோதிலும், அறிக்கையில் தெளிவற்ற விஷயங்கள் ஏதும் இருந்தால் அதற்கு முதன்மை ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.1

இது அனுபவத்தின் அடிப்படையிலான சான்றாக இருக்கிறது, கருத்துகளின் அடிப்படையிலானது அல்ல. இருந்தபோதிலும், இந்த அறிக்கையில் ஏதாவது கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தால், அவை முழுமையாக முதன்மை ஆய்வாளருடையதாகும்.1

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த விஷயமும் BBC, BBC உலக சேவை அல்லது தொடர்புடைய எந்தவொரு அமைப்புடைய கார்ப்பரேட் கொள்கையைக் குறிப்பிடுவதாகவோ அல்லது பிரதிபலிப்பதாகவோ கருதப்படக் கூடாது.

BBC மற்றும் அதன் பங்காளர்கள் நடத்திய இந்த சுதந்திரமான ஆராய்ச்சியின் கூட்டு நிதியாளராக Google, Twitter ஆகியவை பங்காற்றின.

இதன் வரையறை, ஆய்வுக்கு பின்பற்றிய நடைமுறை, செயல்பாடு அல்லது இறுதி அறிக்கையில் Google மற்றும் Twitter- க்கு எந்த உள்ளீடுகளோ அல்லது தாக்கமோ கிடையாது.

இந்த ஆய்வுக்கான தொடர்பாளர்கள் :

சாந்தனு சக்ரவர்த்தி : [email protected]

லூசீல் ஸ்டெங்கெல் : : [email protected]

சப்னா சோலங்கி : : [email protected]