தவறான தகவல் பரப்பலுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை முன்னெடுக்கும் பிபிசி #BeyondFakeNews

பிபிசி

#BeyondFakeNews

தவறான தகவல் பரப்பலுக்கு எதிரான பெரிய சர்வதேச நடவடிக்கையை முன்னெடுக்கிறது பிபிசி.

• Beyond Fake News திட்டம் நவம்பர் 12-ம் தேதி தொடக்கம்.

• போலிச் செய்திகளை மக்கள் பகிர்வதற்குக் காரணம் என்ன என்பது குறித்து சொந்தமான ஆராய்ச்சி.

• பிபிசியின் சர்வதேச தொலைக்காட்சி, வானொலி, இணையதள ஊடகங்களில் உலகளாவிய ஆவணப்படங்கள், முக்கிய - சிறப்பு செய்திகள் ஆகியற்றை வெளியிடும் பெரிய தொடர் நிகழ்வு.

• ஊடக அறிவூட்டல் திட்டம், ஹேக்கத்தான் எனப்படும் தொழில்நுட்ப ரீதியான தீர்வு முறை, மாநாடுகள் ஆகியவை இந்தியா, கென்யா ஆகிய நாடுகளில் தொடக்கம்.

நவம்பர் 12ம் தேதியன்று 'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டத்தை பிபிசி தொடங்குகிறது. அந்நிகழ்வில், தவறான தகவல்கள் ஏன், எப்படி பகிரப்படுகின்றன என்பது குறித்து பிபிசி சொந்தமாக செய்த ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

உலகம் முழுவதும் தவறான தகவல்களால் அரசியல் மற்றும் சமூக ரீதியான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் செய்திகளில் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். சில நேரங்களில் இத்தகைய தவறான தகவல்களால் வன்முறையும், உயிரிழப்பும் ஏற்படுகின்றன.

பிபிசி

பட மூலாதாரம், Getty Images

பிபிசி-யின் Beyond Fake News திட்டம் தவறான தகவல் பரவுவதை எதிர்த்துப் போராடத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலும், கென்யாவிலும் உலகளாவிய ஊடக அறிவூட்டல், குழு விவாதம், இப்பிரச்சினைக்கு தொழில்நுட்பத் தீர்வு காண்பதற்கான ஹேக்கத்தான் எனப்படும் கணினித் துறை வல்லுநர்கள் கூட்டம், ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசியா பசிபிக், ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பிபிசி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புத் தொடர் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இந்தியா, கென்யா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மறையாக்கம் செய்யப்பட்ட தங்கள் தகவல் செயலிகளைப் பார்ப்பதற்கு பயனர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிபிசிக்கு அனுமதி அளித்ததன் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படுகின்றன.

The Beyond Fake News ஊடக அறிவூட்டல் திட்டம் இந்தியாவிலும், கென்யாவிலும் ஏற்கனவே பயிலரங்குகளை நடத்த தொடங்கிவிட்டன. பிரிட்டனில் தவறான தகவல் பரப்பலுக்கு எதிராக பிபிசி செய்த முன்னோடிப் பணிகளின் அனுபவத்தில் இருந்து இந்த பயிலரங்குகள் நடத்தப்பட்டன. பிரிட்டனில் நாட்டின் பல பகுதிகளில் பள்ளிகளில் டிஜிடல் அறிவூட்டல் பயிலரங்குகளும் நடத்தப்பட்டுள்ளன.

பிபிசி உலக சேவை குழுமத்தின் இயக்குநர் ஜெமி ஆங்கஸ் கூறுகிறார்: "போலிச் செய்தி அச்சுறுத்தல் குறித்து வெறுமனே பேசிக்கொண்டிராமல், அதை எதிர்கொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை பிபிசி உலக சேவைக் குழுமம் எடுக்கும் என்று 2018ல் நான் உறுதி அளித்தேன். உலக அளவில் ஊடக அறிவு மலிந்த தரத்தில் இருப்பதாலும், டிஜிட்டல் தளங்களில் எளிதாக போலியான தகவல்கள் தடுக்க முடியாதபடி பரவுவதாலும் நம்பகமான ஊடக நிறுவனங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது இப்போது மிக அவசியம்.

பிபிசியின் செயலாக்கம் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம், இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், களத்தில் மெய்யான நடவடிக்கைகளில் எங்கள் பணத்தை செலவிடுகிறோம்.

காணொளிக் குறிப்பு, ஆட்கொல்லி போலிச் செய்திகள்: நாம் ஏன் கவலை அடைய வேண்டும்? - விளக்கும் நாடகம்

ஆன்லைன் நடத்தைகள் குறித்த ஆழமான ஆராய்ச்சிக்கு நிதியளிப்பது, உலக அளவில் ஊடக அறிவூட்டல் பயிலரங்குகளை நடத்துவது, வரவிருக்கிற உலகின் முக்கியத் தேர்தல்களில் பிபிசி உண்மைப் பரிசோதனை (BBC Reality Check) செய்திகளை வெளியிடுவது ஆகியவற்றின் மூலம் முன்னோடி உலகக் குரல் என்ற முறையில், பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கும் மற்றும் லட்சியத் தீர்வுகளை எட்டுவதற்குமான எங்கள் பாதையை அமைக்கிறோம்.

Beyond Fake News காலம்

ஒரு செய்தி போலியா அல்லது நிஜமானதா, உண்மையா அல்லது பொய்யா, வெளிப்படையானதா அல்லது தவறாக வழிநடத்துகிறதா? - நாம் எப்படி வித்தியாசம் காண்பது? மேலும் உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த என்ன செய்யலாம்? இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து Beyond Fake News திட்டத்தில் பிபிசி ஆராய்ச்சி மேற்கொண்டது. வாட்ஸ் ஆப் செயலி ஒரு இந்திய கிராமத்தை கொலைகார கும்பலாக மாற்றியபோது என்ன ஆனது என்பது குறித்த ஆழமான புரிதல் கொண்ட செய்தியும் இதில் அடங்கும். உலகெங்கிலும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தில் வெளியான நிபுணத்துவம் பெற்ற பிபிசி செய்தியாளர்களின் செய்திகளும் இதில் அடங்கும்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்கள்

உலகம்: 12 - 15 நவம்பர், தில்லியில் இருந்து

போலிச் செய்திகள் பரப்பப்படுவதால் உலகெங்கும் என்ன நடக்கிறது, மேலும் செய்தியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதை இந்தியாவின் சூழலில் இருந்து மேத்யூ அம்ரொலிவாலா விவரிப்பார். இதுகுறித்து தொழில்நுட்ப ஆளுமைகள், அரசியல்வாதிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்களுடன் அவர் பேசுவார்.

சமூக ஊடகம்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி உலக செய்திகள்

Beyond Fake News - தொழில்நுட்ப பெருநிறுவனங்கள், 12 மற்றும் 17,18 நவம்பர்

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் ஆகிய தொழில்நுட்ப பெருநிறுவனங்களை ஒன்றாக கொண்டுவந்து போலிச் செய்திகளின் நெருக்கடி, மற்றும் ஒரு பிரச்சனையிலும் தீர்விலும் இவற்றின் பங்கு என்ன என்பது குறித்து விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை மேத்யூ அம்ரொலிவாலா தொகுத்து வழங்குவார்.

பிபிசி உலக செய்திகள்

The She World, Fake Me, நவம்பர் 10

சமூக ஊடகங்களின் உலகம் வளர்ந்து வர, ஆப்ரிக்காவின் தற்கால இளைஞர்கள் "லைக்குகள்" வைத்தே வாழ்கின்றனர். அவ்வப்போது, இதற்காக எந்த தீவிரத்திறகும் இவர்கள் செல்கின்றனர். இன்ஸ்டாகிராம் கணக்கு, அதில் இருக்கும் புகைப்படங்கள், எப்படியெல்லாம் அது பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து 21 வயதான கென்ய மாணவிக்கு ஒரு குறிப்பிட்ட சவாலும் விடுக்கிறோம்.

பிபிசி உலக சேவை வானொலி, பிபிசி உலக செய்திகள், பிபிசி உலக சேவை தொலைக்காட்சி, BBC.com

காணொளிக் குறிப்பு, போலி செய்தியால் கொல்லப்பட்ட இளைஞர்களும் அவர்கள் கனவுகளும்

சிறப்பு அறிக்கைகள்

இந்தியா

இந்தியாவில் தவறான வதந்திகளால் தூண்டப்பட்ட வன்முறைகள் குறித்த தரவு திட்டம்

இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகளால் தூண்டப்பட்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் குறித்து செய்தித்தாள்களில் வந்த செய்திகளை எடுத்து அந்த தரவுகளை தொகுத்துள்ளோம்.

Presentational grey line

BBC.com

வாட்ஸ் ஆப் செய்தியால் ஒரு இந்திய கிராமம் கொலகார கும்பலானபோது என்ன நடந்தது, நவம்பர் 12

நிலொப்தல் மற்றும் அபிஷேக்கின் கதை. வாட்ஸ் ஆப்பில் வந்த புரளிகளால் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து இரண்டு நபர்கள் கொல்லப்பட்டது குறித்த ஆவணப்படம் திரையிடப்படும்.

Presentational grey line

பிபிசி உலக செய்திகள், BBC.com

போலிச்செய்திகள் பரப்புவதற்கு பின்னால் இருக்கும் நபர்கள், நவம்பர் 12

இந்தியாவில் போலிச் செய்திகள் பரப்புகிறார்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் இணையத்தளங்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களை சந்திக்கிறார் பிபிசி செய்தியாளர் வினீத் கரே.

பிபிசி உலக செய்திகள், பிபிசி உலக சேவை தொலைக்காட்சி

#BeyondFakeNews என்ற ஹாஷ்டாக் மூலம் சமூக ஊடகங்களில் இதனை பின்தொடரலாம்

பிபிசி Beyond Fake News முன்னெடுப்பு, நவம்பர் 12ஆம் தேதி வெளியாகும் ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள [email protected] அல்லது [email protected] மின்னஞ்சல்களை தொடர்பு கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :