ஐந்து மாநில தேர்தல்: பா.ஜ.கவின் தோல்வி இந்துத்துவ அரசியலின் தோல்வியா?

மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ப்ரியங்கா ஃபடாக்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தாங்கள் ஆட்சி செய்த மூன்று மாநிலங்களை இழந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஏற்பட்டுள்ள தோல்வி இந்துத்துவ அரசியலின் தோல்வியா, இந்துத்துவ அரசியல் கொள்கை எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிட்டதா?

இந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸிடம் பா.ஜ.க தோல்வியுற்றது மட்டுமல்ல, தெலங்கானா மற்றும் மிசோரமில் மாநில கட்சிகள் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. பா.ஜ.கவின் இந்த தோல்வியானது எதிர்வரும் தேர்தலில் அந்த கட்சியை கடினமான இடத்தில் நிறுத்தி உள்ளது.

மத்தியில் 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, 13 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் அந்த கட்சி வென்று இருக்கிறது. வீழ்த்தவே முடியாத கட்சி பா.ஜ.க என்ற தோற்றம் இருந்தது. அந்த தோற்றம் இப்போது கலைந்திருக்கிறது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய இடத்தில் பா.ஜ.க உள்ளது. பா.ஜ.கவின் கடும்போக்கு இந்துத்துவ நிலைப்பாடு எதிர்வினை ஆற்றி இருக்கிறதா? என்ற கேள்விதான் அது.

இது நியாயமான கேள்விதான். ஏனெனில், தீவிரமான இந்துத்துவ முகம் கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் இந்த ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றினார். பல இடங்களுக்கு சென்று அவர்தான் பிரசாரம் செய்தார்.

யோகிஆதித்யநாத்தின் பாதை

ராஜஸ்தானில் 26, சத்தீஸ்கரில் 23, மத்திய பிரதேசத்தில் 17 மற்றும் தெலங்கானாவில் 8 என இந்த ஐந்து மாநிலங்களில் 74 கூட்டங்களில் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், பிரதமர் நரேந்திர மோதி 31 கூட்டங்களிலும், பா.ஜ.க தலைவர் அமித் ஷா 56 கூட்டங்களிலுமே கலந்துகொண்டார்கள்.

ஆதித்யநாத் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புடன் உள்ளார்ந்த அன்புடன் இணைந்து பணியாற்றியவர். 1980ஆம் ஆண்டுக்குபின், ராமஜென்ம பூமி இயக்கத்தின் தலைவராக இருந்து, சர்ச்சைக்குரிய இடத்தில் அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்றவர்.

இருபத்தி நான்கு மணிநேரத்தில் ராமஜென்ம பூமி சர்ச்சையை சரி செய்வேன் என்று சூளுரைத்தவர். ராமர் சிலையை கட்டுவேன், அலஹாபாத் பெயரை ப்ரயக்ராஜ் என சமீபத்தில் மாற்றியவர்.

இந்துத்துவ கொள்கையில் தாம் மோதியைவிட தீவிரமானவர் என தன்னை வெளிகாட்டி கொண்டார். ஆனால், இந்த தேர்தல் தோல்வி இதே பாதையில் அவர்கள் பயணிப்பதற்கு முட்டுகட்டையாக அமைந்துள்ளது.

வளர்ச்சி கொள்கையிலிருந்து பா.ஜ.க திசை மாறியதுதான் இந்த தேர்தல் தோல்விக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்துத்துவ கொள்கை வினையாகிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.

ராமர் கோயில் விவகாரம்

ஆனால், சங் பரிவார் அமைப்பை சேர்ந்த சிலர் இதனை மறுக்கிறார்கள். அவர்கள் பார்வை இதில் வேறுவிதமாக உள்ளது. ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் அரசு உள்ளார்ந்த பொறுப்புடன் செயல்படவில்லை என்கிறார்கள். அவர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், சங் அமைப்புகள் ஏன் வீதிக்கு வந்து போராட வேண்டும்? அவர் போராட்டம் எதனை உணர்த்துகிறது, இந்த அரசு ராமர் கோயில் விவகாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பதைதானே?

ராமர் கோயில் கட்ட கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images

இந்த வார தொடக்கத்தில் ராம லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, இந்த அரசை விமர்சித்தார்கள். அவர்கள், ராமருக்கு கிரீடம் தாருங்கள், அதன் பின் எங்களுக்கு நல்லரசை தாருங்கள் என்றார்கள்.

பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ் - வி.எஹ்.பி அமைப்புக்கும் இடையே உள்ள சர்ச்சையை குடும்ப சண்டை என்கிறார்கள் இவர்களின் உள் விவகாரங்களை அறிந்தவர்கள். 2001ஆம் ஆண்டு, அடல் பிஹாரி வாஜ்பேயி பொருளாதார மறுமலர்ச்சி காலத்தில் பிரதமராக இருந்தார்.

அந்த அரசுக்கு, வி.எஹ்.பி- ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ராமர் கோயில் விவகாரத்தில் மனகசப்பு எற்பட்டது. சங் அமைப்புகள் பா.ஜ.கவுக்கு கால அவகாசம் அளித்தன. 2001ஆம் ஆண்டு இறுதிக்குள் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்ல், 2002 மார்ச் மாதம் ராமர் கோயில் கட்டும் பணியினை தாங்கள் தொடங்குவோம் என்றார்கள்.

இந்த முறை பொருளாதாரம் நெருக்கடியாக உள்ள காலகட்டத்தில் பா.ஜ.க ஆட்சி செய்கிறது. இப்படியா சூழ்நிலையில் சங் அமைப்புகள் கொடுக்கும் தொடர் அழுத்தமானது, வளர்ச்சியா இந்துத்துவ கொள்கைகளா என்ற தர்மசங்கடத்தில் பா.ஜ.கவை கொண்டு நிறுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் உதவி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு தங்கள் அமைப்பு மீதான பிடிப்பும், தேர்தல் காலத்தில் அவர்கள் ஆட்களை திரட்டும் பாங்கும் அனைவரும் அறிந்தது. 2014ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ் உதவி

பட மூலாதாரம், Getty Images

இந்துத்துவ கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது மோசமான வினையாற்றுகிறது. அதனால், வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென தாராளவாதிகள் கூறினாலும், இந்துத்துவ கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அதுதான் நம் அடித்தளம். அதனை கைவிடக்கூட்டாது என பா.ஜ.கவுக்கு உள்ளேயே குரல் எழுவதை கேட்கமுடிகிறது.

பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் அவர்கள், இந்துத்துவ கொள்கைகளை முன்னிறுத்துவதுதான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உதவும் என நம்புகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: