பிரெக்ஸிட் : ''பிரிட்டன் விரும்பினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை கைவிடலாம்''

பட மூலாதாரம், ECJ
பிரெக்ஸிட் - ''பிரிட்டன் விரும்பினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை கைவிடலாம்''
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அனுமதி இல்லாமல் பிரெக்ஸிட் முடிவை பிரிட்டனால் ரத்து செய்ய முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனின் உறுப்பினர் நிலை விதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இதனை செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பிரெக்ஸிட் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்றால், அந்த முடிவினை ஒருதலைபட்சமாக பிரிட்டனால் எடுக்க முடிய வேண்டும் என பிரெக்ஸிட்டிற்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் பிராசாரம் செய்பவர்களின் குழு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் பிரிட்டன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் அதனை எதிர்த்தது.
இந்நிலையில் நாளைய தினம் ஐக்கிய ராஜியத்தியத்தின் நாடாளுமன்ற மக்கள் அவையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமரின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

நாளைய தினம் நடக்கவுள்ள வாக்கெடுப்பில் தெரீஸா மேவின் முன்மொழிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிப்பர் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
''ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் இருப்பது சாத்தியமான மற்றும் உண்மையானதொரு வாய்ப்பு என்பதை இந்த தீர்ப்பு வெளிப்படுத்தியிருப்பதால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் வேறு விதமாக மாறக்கூடும்.''
''ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் இருப்பதற்கு பிரிட்டன் அரசியலில் நிறைய மாற்றங்கள் நடக்க வேண்டியதிருக்கும் மேலும் பிரதமர் தெரீஸா மே மற்றும் அவரது அரசும் தமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கும்'' என்கிறார் பிபிசி ப்ரஸஸ்ஸ் செய்தியாளர்.
இதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவை பிரிட்டன் எடுக்க முடிய வேண்டும் எனும் விஷயத்தை கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரியும் அட்வகேட் ஜெனரலும் ஒப்புக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
அவரது கருத்து சட்டப்பூர்வமாக எதையும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், பெரும்பாலான வழக்குகளில் அவரது ஆலோசனையையே நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் எந்தவொரு நாடும் ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவை எடுத்துவிட்டு பின்னர், சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் ஒன்றியத்துக்கும் ஒப்பந்தம் ஏற்படும் வரையில் அல்லது ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவை எடுத்தபின்னர் இருக்கக்கூடிய இரண்டு ஆண்டு கால அறிவிக்கை காலத்திற்குள் தமது யோசனையை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் இரண்டு ஆண்டுகாலம் என்பது நீட்டிக்கப்பட்டால், உறுப்பினர் நாடானது நீட்டிக்கப்ட்ட காலகட்டத்தில் கூட தமது முடிவை மாற்றிக்கொள்ள முடியும் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், தற்போது இருக்கும் விதிமுறைகளின் படியே பிரிட்டன் தொடர்ந்து ஒன்றியத்தில் இருக்கலாம் என்றும் ஈரோவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் கடவுச்சீட்டு இன்றி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பை வழங்கும் ஷென்ஜென் பகுதிக்குள் சேர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் பிரிட்டனுக்கு விதிக்கப்படாது என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் எந்தவொரு முடிவும் ஜனநாயகப்படி எடுக்கவேண்டும். ஆகவே பிரிட்டன் விவகாரத்தை பொறுத்தவரையில் இம்முடிவானது நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












