பிரெக்ஸிட்: இனி என்ன நடக்கும்? - பிபிசி ஆய்வுக் குழுவின் கணிப்பு

பட மூலாதாரம், Getty Images
பிரெக்ஸிட் வரைவு அறிக்கை குறித்து கடுமையான விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வருகிறது. வரைவு அறிக்கை பிரிட்டன் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரைவறிக்கை தொடர்பாக அதிருப்தி கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
இந்த சூழலில் பிரக்ஸிட் இனி என்ன நடக்கலாம், எது மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என பிபிசி அரசியல் ஆய்வுக் குழு ஆய்வை மேற்கொண்டது.
அதன் ஆய்வில் அடிப்படையிலான தரவுகளை இங்கே பகிர்கிறோம்.
14 நவம்பர் 2018இல், பிரிட்டன் அமைச்சகம் வரைவு ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.
இம்மாத இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்திற்காக செல்லும்.
டிசம்பர் 2018இல், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும்

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் தோற்கும் பட்சத்தில், 21 நாட்களில் புதிய திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
வெல்லும்பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் மசோதா அறிமுகப்படுத்தப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மசோதா தோற்றால் நான்கு வாய்ப்புகள் உள்ளன.
அவை, ஒப்பந்தமே எட்டப்படாமல் பிரிட்டன் வெளியேறலாம், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம், பொதுத் தேர்தலுக்குக் கூட வாய்ப்பு உள்ளது. மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மசோதா தோற்றால் வென்றால்,
ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கும். சிறிய அளவு பெரும்பான்மை இருந்தாலே போதும். ஐரோப்பிய ஒன்றிய அனுமதி தேவை, இருபது நாடுகள் பிரதிநிதித்துவத்தில் 65 சதவீத மக்களின் ஆதரவு தேவை
29 மார்ச் 2019ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












