இலவச மதிய உணவு திட்டம் ஆற்றிய கல்வி புரட்சி பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
பிச்சைக்காரர்களுக்குதான் இலவசம் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இலவசம் அளிப்பதும் மக்கள் நலத் திட்டங்களின் ஒரு பகுதிதானா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் நேற்று கேட்டிருந்தோம்.
இதற்கு வாசகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அதன் தொகுப்பை இங்கே காணலாம்.
"நம்நாட்டில் சூழலுக்கு அத்தியாவசிய பொருள்களை இலவசமாக வழங்குவதும் அரசின் நலத்திட்டகளில் ஒன்றுதான். டிவி மிக்சி மற்றும் கிரைண்டரை விமர்சிப்பவர்கள் விவசாயத்திற்கு வழங்க பட்ட இலவச மின்சாரத்தை ஏன் விமர்சிக்கவில்லை? இலவச மடிக்கணினியும் மிதிவண்டியும் எந்த வகையில் கேடை விளைவித்தன? இலவச மதிய உணவு திட்டம் ஆற்றிய கல்வி புரட்சி பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?" என்கிறார் முகம்மது என்ற நேயர்.

"மீன் வாங்கி கொடுப்பதற்கு பதில் மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறந்தது என்பது சீனப் பழமொழி.இலவசம் மக்களை சோம்பேறிகளாக்கும். மாறாக வேலை மற்றும் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல் தான் அரசாங்கத்திற்கு அழகு" என்று ஃபேஸ்புக்கில் யாழினி என்பவர் பதிவிட்டுள்ளார்.
" அரசு மக்களை பிச்சைக்காரர்களாத்தான் வைத்திருக்கிறது. அப்போதுதான் அவர்களால் கொள்ளை அடிக்க முடியும். மீனை இலவசமாக கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பது ரஷ்ய பழ மொழி. இலவசத்தை விட வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதை வரவேற்கலாம்" என்று பதிவிட்டுள்ளார் சரோஜா சுப்ரமணியன் என்ற நேயர்.
"வறுமையின் நிறம் சிவப்பு கமல் ஒரு வருடம் நிஜமாக வாழ்ந்து காட்டவேண்டும் அப்போது தான் இலவசம் அருமை தெரியும்" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் வெங்கடகிருஷ்ணன் என்ற நேயர்.
"அதை பிச்சைக்காரனுக்கு தான் பிச்சை போட வேண்டும் என கூறலாமே. இலவச சேவைகள் வேறு; மருத்துவம், கல்வி, ஆம்புலன்ஸ். ஆனால் இலவச தேவைகள் வேறு; சோறு, தண்ணி, மிக்ஸி, டி.வி... இதனைக்கூட சரிவர புரியாத பிச்சைக்கார கூட்டமாக தமிழ் இனத்தை இலவசங்கள் மூளைச்சளவை செய்துள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளார் முகம்மது ஷாஹீம் என்ற நேயர்.
" இலவசத்தை இழிவு செய்வது போன்று படம் எடுத்துவிட்டு பிறகு அவர்களே, வரி விலக்கு கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பம் போடுகிறார்களே, அது நியாயமா? சமூகத்தில் மேலோங்கி நிற்கும், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வை சமன் செய்வதற்கும், சமூகநீதிக்கான நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு போன்றதுதான் விலையில்லா பொருட்கள்" என்று தெரிவித்துள்ளார் நாகராஜன் என்ற நேயர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












