‘நீங்கள் சென்னை வாசியா? இன்று எத்தனை சிகரெட் புகைத்தீர்கள்?

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் நீங்கள் சுவாசித்தால், ஒரு நாளுக்கு சராசரியாக டஜன் கணக்கான சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமாகும். நீங்கள் எத்தனை சிகிரெட் புகைத்தீர்கள் என்பதை உங்கள் நகரை தேர்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவம்பர் 5ஆம் தேதியன்று இந்திய தலைநகரான டெல்லி கடுமையான புகையால் சூழப்பட்டிருந்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் தர அளவுகளை விட, மாசு அளவு பல மடங்கு அதிகமாக இருந்தது.
வானிலையில் காற்று தரம் குறித்த முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி வலைத்தளத்தின் தரவுப்படி, நவம்பர் 6ஆம் தேதியன்று, டெல்லியின் சில பகுதிகளில் நுரையீரலுக்குள் நுழையக்கூடிய சிறு மாசுத் துகள்கள் (பார்டிகுலேட் மேட்டர் - பி.எம் 2.5) ஒரு க்யூபிக் மீட்டருக்கு 268 மைக்ரோ கிராமாக இருந்தது. சராசரியாக 2.5 பி.எம். அளவுக்கு காற்றின் தரம் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 15 µg/m3 அளவே இருக்க வேண்டும். ஆனால் அதுவே ஒரு க்யூபிக் மீட்டருக்கு 81 µg/m3 மேல் இருந்தால் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக கருதப்படும்.
டெல்லியின் சில பகுதிகளில் காற்று தரம் ஒரு நாளில் 45 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமாக பாதிப்படைந்துள்ளது என செய்திகள் தெரிவித்துள்ள நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய தரவுகளை ஆராய்ந்தோம்.
கடந்த வாரத்தின் மாசு கட்டுப்பாட்டால் நீங்கள் எத்தனை சிகரெட்டுகளை பிடித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் நகரை தேர்ந்தெடுத்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு க்யூபிக் மீட்டருக்கு 52 மில்லிகிராம் அளவு பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5 கொண்ட காற்றால் ஒவ்வொரு வருடமும் சீனாவில் 1.6 மில்லியன் பேர் உயிரிழப்பதாக பெர்க்லே எர்த் அறிக்கை கூறுகிறது. 1.6 மில்லியன் மக்களை கொல்ல 1.1. டிரில்லியன் சிகரெட்டுகள் தேவைப்படும் என வைத்து கொள்வோம். சீனாவின் மக்கள் தொகை 1.35 பில்லியன் எனவே ஒரு வருடத்திற்கு ஒரு மனிதருக்கு 764 சிகரெட்டுகள் அல்லது ஒரு நாளைக்கு 2.4 சிகரெட்டுகள்
வேறு மாதிரியாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு சிகரெட்டால், ஒரு க்யூபிக் மீட்டருக்கு 22 மைக்ரோ கிராம் அளவிற்கு காற்று மாசு ஏற்படுகிறது.
பீய்ஜிங்கில், ஒரு வருடத்தில் பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5யின் சராசரி ஒரு க்யூபிக் மீட்டருக்கு 85 மைக்ரோகிராமாக உள்ளது. அது ஒரு நாளைக்கு 4 சிகரெட்டுக்கு சமம். அதே மாதிரி டெல்லியின் காற்று மாசு ஒரு க்யூபிக் மீட்டருக்கு 547மைக்ரோ கிராமாக உள்ளது. அது நாளொன்றிற்கு 25 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமம் ஆகும்.
ஒரு வார காலத்திற்கு ஒவ்வொரு நாளும் இந்தியாவில் உள்ள 33 நகரங்களின், பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5யின் தரவை ஆராய்ந்தோம். ஒவ்வொரு நகரின் ஏழு நாட்களுக்கான பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5-ஐ பெருக்கி ஏழால் வகுத்து பின் சிகரெட்டுகளின் எண்ணிக்கையை கண்டறிய ஒரு க்யூபிக் மேட்டர் 21.6 மைக்ரோ கிராமால் வகுத்தோம். நீங்கள் வெளியில் சுவாசிக்கும் காற்றின் அளவை யூகித்து இந்த எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












