கொலைக்குற்றத்தில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை

பட மூலாதாரம், WWW.JAGATGURURAMPALJI.ORG
தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ராம்பாலுக்கு 2014ஆம் ஆண்டு நான்கு பெண்களையும் 18 மாத குழந்தையும் கொன்ற குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஹரியானா நீதிமன்றம் ஒன்று ராம்பால் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. அவர் மீது மற்றொரு கொலை குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் வரும் புதன்கிழமை அன்று தீர்ப்பு வரவுள்ளது.
ராம்பாலின் ஆதரவாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அறையில் அடைக்கப்பட்டனர் மேலும் அவர்கள் மூச்சுவிட சிரமப்பட்டனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட ராம்பாலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளதாக தெரிவித்துக் கொள்கிறார் மேலும் அவருக்கு இந்தியா முழுவதும் ஆசிரமங்கள் உள்ளன.
சண்டிகரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ராம்பால் வழக்கு குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது என பிபிசி பஞ்சாபி சேவையை சேர்ந்த ச்ஷி காண்டா தெரிவிக்கிறார்.
ராம்பாலின் வழக்குரைஞர் இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு ராம்பாலின் ஆசிரமம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த கொலையில் தொடர்பு இருப்பதாக ராம்பால் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ராம்பால் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார் மேலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானா மாநிலத்தின் பர்வாலாவில் உள்ள கோட்டை போன்ற அவரது ஆசிரமத்தில் போலிஸார் நுழைந்தபோது ராம்பால் சரணடைய மறுத்துவிட்டார்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் போலிஸாரை ஆசிரமத்தில் நுழையவிடாமல் தடுத்தனர்.
ஒரு வாரம் நெடுக அடைக்கப்பட்டு வைத்தமையால் பலருக்கு காயங்கள் ஏற்பட்டன.
குருவின் ஆயுதம் ஏந்திய ஆதரவாளர்கள் மக்களை அடைத்து வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக போலிஸார் குற்றம் சுமத்தினர்.
பிற செய்திகள்:
- #MeeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு
- 'சர்வம் டாலர்மயம்' - உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல்
- ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
- ‘காதலனை ஏவி கணவன் கொலை’ - சமூக ஊடகம் என்ன நினைக்கிறது?
- “இயற்கை இவ்வளவு அழகா?” - வியப்பில் ஆழ்த்தும் அட்டகாச புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












