பீகார்: பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்
பீகார் மாநிலத்தில் ஒரு நபரை கொன்றதாக சந்தேகத்தின்பேரில் கும்பலொன்று, பெண் ஒருவரை அடித்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது.

பட மூலாதாரம், MANSI THAPLIYAL/BBC
அக்கும்பல் அப்பெண்ணின் வீட்டை கொளுத்தியது. மேலும் அவரை வீட்டை விட்டு தெருவுக்கு தள்ளி மோசமாக அடித்து தாக்கியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
போஜ்புரி மாவட்டத்தில் ஒரு ரயில்வே தண்டவாளத்தின் அருகே விம்லேஷ் ஷா எனும் 19 வயது நபரின் சடலம் கடந்த திங்கள்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது.
விம்லேஷ் ஷாவின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் காவல்துறை பிபிசி இந்தியிடம் தெரிவித்தது. ஷாவின் மரணம் குறித்து விரிவாக அறிந்துகொள்ள அவரது பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிகப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் அப்பெண்தான் காவல்துறையை அணுகுவதற்கு பதிலாக தானே தண்டிக்க முடிவெடுத்து விமலேஷை கொன்றுவிட்டதாக ஷாவின் நண்பர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Bildagentur-online/UIG via Getty Images
டஜன்கணக்காண ஆண்கள் மத்தியில் அப்பெண் நிர்வாணமாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை இச்சம்பவம் குறித்த காணொளியொன்று காட்டுகிறது.
வாட்ஸ்அப்பில் இந்நிகழ்வு தொடர்பாக பல்வேறு காணொளிகள் உலா வருகிறது. இதில் உள்ள ஒரு காணொளியை பார்த்தபிறகுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பட மூலாதாரம், Local residents
அக்கும்பல் பல்வேறு கடைகள் , வீடுகள், மற்றும் அப்பெண்ணின் வீட்டின் அருகே உள்ள பல்வேறு வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்துள்ளது. பாதுகாப்புக்காக காவல்துறை கூடுதல் படையை களமிறக்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












