நாளிதழ்களில் இன்று: விஜய்யின் 'சர்கார்' பட போஸ்டர்: புகைப்பிடிக்கும் படம் நீக்கம்?
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து (ஆங்கிலம்): விஜய்யின் சர்கார் பட போஸ்டர் விவகாரம்

பட மூலாதாரம், TWITTER@SUN PICTURES
தமிழக சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸையடுத்து, நடிகர் விஜய்யின் சர்கார் பட போஸ்டரில் இருந்த அவர் புகை பிடிக்கும் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக `தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் சமூக ஊடக பக்கங்களில் இருந்து இந்த போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.
தினமலர்: 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டதுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தர்மவுரி மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சட்டத்துக்கு முரணானவை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி: இணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்
இணையதளத்தை பயன்படுத்தி கல்வி கற்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக்கல்விதுறை செயலர் உதயசந்திரன் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதலே இணையதளக் கல்வி, கணினித் தமிழ், தமிழ் இணையம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறிவியல் பாடமானது அறிவியல் பாடத்துடன் கற்பிக்கப்படுவதாக அவர் கூறினார்.
தமிழக மாணவர்களை அடுத்தடுத்த நவீன தொழில்நுட்ப தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பள்ளிக்கல்வித் துறை பெரும் பங்காற்றி வருகிறது என்று அவர் கூறியதாக தெரிவிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












