மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் பிரணாப்

"இந்திய தேசியவாதம், பிரபஞ்சத்துவவாதத்திலிருந்து உருவானது. நமது தேசியத்தை, இன மத அடிப்படையில் விளக்க முற்படுவது நமது அடையாளத்தை சீர்குலைக்கும்" என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர். எஸ். எஸ் நிகழ்வில் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பட்டமளிப்பு விழா நாக்பூரில் அதன் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பிரணாப் அழைக்கப்பட்டு இருந்தார். அந்நிகழ்வில் பேசும் போது இவ்வாறாக கூறினார்.
மேலும் அவர், "பன்மைத்துவத்தை நாம் மதிக்கிறோம், ஏற்றுக் கொள்கிறோம். நாம் வேற்றுமைகளை கொண்டாடுகிறோம். பல கலாசாரங்கள், நம்பிக்கைகள் நம்மை தனித்துவமானவர்கள் ஆக்கி இருக்கிறது" என்றார்.
ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய அவர், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தது குறித்து விரிவாக பேசினார்.
இந்தியா பலரது ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. 600 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பின் கிழக்கிந்திய கம்பெனி. பலரது ஆளுகையின் கீழ் நாம் இருந்து இருந்தாலும், 5000 ஆண்டுகள் தொடர்ச்சி கொண்ட நமது நாகரிகம் உருக்குலையாமல் அப்படியே உள்ளது என்று இந்த நிகழ்வில் பேசினார் பிரணாப் முகர்ஜி.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருப்பதால் சொல்கிறேன், பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, பல கலாசாரங்களின் கலப்பு, பல மொழிகள், இவையெல்லாம்தான் நம் தேசத்தின் ஆன்மா என்றார்.
இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், மகிழ்ச்சி குறியீட்டு தரவரிசையில் அது கீழே உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறினார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

'சங்' எப்போதும் 'சங்' தான். பிரணாப் எப்போதும் பிரணாப்தான். ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் கலந்து கொள்வதால் அவருடைய கருத்தியல் மாறிவிட போவதில்லை என்றார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

பட மூலாதாரம், Sanjay Tiwari
மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளும், பொதுவெளியிலும் பலமான சர்ச்சை நிலவியது.
இதனை குறிப்பிட்டே பகவத் இவ்வாறாக கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
நம்மிடம் ஏராளமான வேற்றுமைகள் இருந்தாலும், நாம் அனைவரும் பாரத தாயின் பிள்ளைகள்தான் என்றும் தெரிவித்தார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
மேலும் மோகன் பகவத், "வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் அழுத்தமாக நம்பிக்கை .கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்களே." என்றார்.
ஆர்.எஸ்.எஸ் 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு. பல தடைகளை தாண்டிதான் இந்த அமைப்பு இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது. இந்த அமைப்பு பிரபலத்திற்காகவும், புகழுக்காகவும் பணியாற்றவில்லை. நாட்டின் முன்னேற்றமே இந்த அமைப்பின் விருப்பம் என்றார் மோகன் பகவத்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, சிறந்த நிர்வாகியாக கருதப்பட்டவர். அக்கட்சியில் பல உச்சங்களை தொட்டு, ஆட்சியிலும் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்.
இந்திரா காந்தி தொடங்கி, பல பிரதமர்களுடன் பணியாற்றி இருக்கிறார் பிரணாப். குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருங்கிணக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரான அவர் கலந்துக் கொள்வதுதான் அதற்கு காரணம்.
ஆர். எஸ். எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொள்வதற்கு பல தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பட மூலாதாரம், @ CITIZNMUKHERJEE
அவரது மகள் சர்மிஸ்தாவும் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்..

மகளின் எதிர்ப்பு
இது தொடர்பாக சர்மிஸ்தா "நாக்பூர் செல்வதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பொய்யான தகவல்களை பரப்ப ஒரு வாய்ப்பு தருகிறீர்கள். இன்று நிகழ்த்தும் உரை மறக்கப்பட்டுவிடும். ஆனால், பொய்யான காட்சிகள் காலம் முழுவதும் பகிரப்பட்டு கொண்டிருக்கும்" என்ற பொருளில் ட்வீட்டுகளை தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3
ஆர்.எஸ்.எஸ் நிகழ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டதில் தவறேதும் இல்லை என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, "பிரணாப் முகர்ஜி மதசார்பற்றவர். நல்ல சிந்தனையாளர். மதசார்பற்ற தனது கருத்துகளை அந்நிகழ்வில் பிரணாப் பதிவு செய்வார்" என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் இதனை பிரணாப் முகர்ஜியிடமிருந்து தான் எதிர்பாக்கவில்லை என்று ஒரு ட்வீட் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

தலைசிறந்த மகன்:
முன்னதாக, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் பிறந்த இடத்தை பார்வையிட்ட பிரணாப் , அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் , "நான் இங்கு வந்திருப்பது இந்தியத் தாயின் தலைசிறந்த மகனுக்கு என் மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்ததான்" என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

தாக்கும் காங்கிரஸ்
ஆர். எஸ். எஸ் நிகழ்வு நாக்பூரில் நடந்து கொண்டிருக்க, காங்கிரஸ் அந்த அமைப்பை தொடர்ந்து தாக்கி வருகிறது.
வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் யார் பக்கம் சார்பாக நின்றது மற்றும் இன்று எப்படி அந்த அமைப்பு சிந்திக்கிறது என்பதை அனைத்து இந்தியர்களும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் கருத்தியலுக்கு நேர் முரணாக எப்படி அந்த அமைப்பின் கருத்து இருந்தது என்பதை இந்திய மக்கள் என்றும் மறந்துவிட கூடாது என்று காங்கிரஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5

இந்த அழைப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் என்ன கூறுகிறது?
பிரணாப் அனுபவம் வாய்ந்த முதிர்ச்சி பெற்ற தலைவர். பல சமூக மற்றும் தேசிய விஷயங்களில் அவருக்கு தீர்க்கமான பார்வை இருக்கும். அவரது அனுபவம் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்களுக்கு பயன்படும் என்கிறது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்